
இதையொட்டி மாலை 4 மணிக்கு சரவணம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு மேள, தாளம் முழங்க அய்யா வழி பக்தர்களின் சூழ சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் அங்கிருந்து பக்தர்கள் அய்யாவின் திருக்கொடியை ஏந்தி, அய்யா சிவசிவ அரகரா என்ற திருமந்திரத்தை உச்சரித்து கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாக வருகிறார்கள். ஊர்வலத்தை கோவை நாடார் சங்க தலைவர் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன், பொதுச்செயலாளர் ஜி.இருதயராஜா, பொருளாளர் கணேசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் தொடங்கி வைக்கிறார்கள்.தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரை திருப்பள்ளி எழுச்சி, அய்யாவின் அவதார தின சிறப்பு பணிவிடை, செண்டை வாத்தியம் முழங்க அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல், காலை 7 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு வாகன பணிவிடைக்கு பிறகு அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.