search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

    ஈத்தாமொழி அருகே தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை (2-ந்தேதி) காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஈத்தாமொழி அருகே தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை 2-ந்தேதி காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 3-ந்தேதி மாலை 5.50 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 9-ந்தேதி மாலை 4.30 மணிக்கு காளத்தியப்பர், நடராஜராகவும், ஞான பிரசனாம்பிகை, சிவகாமியம்மாள் தோற்றத்திலும், பரிகார மூர்த்தியாக விளங்கும் ராகு கேது, சனீஸ்வரர் உள்பட நவ கிரகங்கள் வாகனமும் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    10-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மகாபிரதோஷமும், 11-ந்தேதி மகாசிவராத்திரி விழாவும் நடக்கிறது. பகலில் அன்னதானமும், இரவு 11 மணிக்கு கண்ணப்பநாயனார் பூஜை செய்த தென்காளத்தியப்பருக்கு 14 வகை அபிஷேகமும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச விளக்கு தீபாராதனையும், ராகு-கேது சனீஸ்வர தோஷம் நீங்க 1,008 சிவார்ச்சனையும் நடைபெறும். 12-ந்தேதி மாலை கொடியிறக்கப்பட்டு, கால பைரவர் பூஜையும், அன்னாபிஷேகமும் நடைெ்பறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி தலைவர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ். மற்றும் தேவஸ்தான கமிட்டி தலைவர் ஆர்.கணேசன், மோகன்லால் பாபு, சிம்சன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×