என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மூங்கில் தடி உதவியுடன் செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை வழிபடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால், வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இருட்டுப் பள்ளம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது நேற்று முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங் கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்றும், மலையேறும் வழியில் பழங்குடியினர் 40 கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை காலை முதலே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மூங்கில் தடியுடன் மலையேறினர். 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.
காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
காஞ்சி : திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் 7 சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது, இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
கடலாடி : சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது.
மாம்பாக்கம்: சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது.
தென்மகாதேவ மங்கலம் : போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது.
எலத்தூர் : சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.
பூண்டி: சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.
குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.

ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அம்மனுக்கு மலர்களை சூடி பூச்சாட்டுதல் விழா நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு அக்னி கபாலம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விளக்கு பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்படுகிறது.
வருகிற 5-ந் தேதி காலை 6 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெறுகிறது. 6-ந் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை மறுநாள்(4-ந்தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (4-ந் தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
திருவிழாவின் 8-வது திருநாளான வருகின்ற 10-ந்தேதி மகா சிவராத்திரி அன்று வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 11-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6 மணிக்கு அன்னதர்மம், 7 மணிக்கு கோவில் கல்நிலை வாயில் திறப்பு விழா நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 5 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கின்றது.
அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினமான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது. 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார விழா பணிவிடையும் நடக்கின்றது.

கடவுளின் அன்பை விளக்கவும், பாவிகளை கடவுள் ஏற்றுக்கொள்வாரா என்பதை விளக்கவும், இயேசு தன் சீடர்களுக்கு ஊதாரி மகனின் கதையை கூறினார்.
“ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘தந்தையே, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கை இப்போதே பிரித்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளைப் பிரித்து அவனுக்குரியதைக் கொடுத்தார். சில நாட்கள் கடந்தன. அந்த இளைய மகன் தனக்குப் பாகமாகக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான்.
அங்கே அவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான். அப்போது அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால் ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை.
அவனுக்குப் புத்தி வந்தபோது, ‘என் தந்தையின் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் என் தந்தையிடம் போய், மன்னிப்பு கேட்பேன்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் தந்தையிடம் புறப்பட்டுப் போனான். அவன் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார்.
கண்கள் பஞ்சடைந்து, கிழிந்துபோயிருந்த அங்கியை அணிந்தபடி, காலணிகள் இல்லாத பாதங்களோடு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்த அவனது தோற்றத்தைக் கண்டு அவருடைய மனம் உருகியது. ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அப்போது அவன், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. என்னை உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னான்.
ஆனால், அவனுடைய அப்பா தன் வேலையாட்களை நோக்கி, ‘விரைந்து சென்று முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்கு அணிவியுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் கால்களுக்குச் செருப்பையும் அணிவியுங்கள். கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து சமையுங்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம்’ என்று சொன்னார். இதைகேட்டு மகிழ்ந்த வேலைக்காரர்கள் அவர் கூறியபடியே செய்தார்கள். மனம் திருந்தி வந்த ஊதாரி மகனின் வருகையை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.
ஊதாரி மகன் வீட்டுக்குத் திரும்பி வந்த நேரத்தில் அவருடைய மூத்த மகன் வயலில் இருந்தான். கொடுத்த சொத்தை அழித்து, திரும்பி வந்த தம்பியை தந்தை ஏற்றுக்கொண்டதை நினைத்து அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய தந்தை வெளியே வந்து, மூத்த மகனைக் கெஞ்சி அழைத்தார். அதற்கு அவன் தன்னுடைய தந்தையிடம், ‘இத்தனை ஆண்டுகளாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை.
இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூடக் கொடுத்ததில்லை. ஆனால், தம்பி தீய வழியில் உல்லாசமாகத் தன் நாட்களைச் செலவழித்து உங்கள் சொத்துகளை வீணாக்கினான். அவன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான். அதற்கு அவர், ‘மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவைதான். ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்த மகிழ்வை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார்” என்றார்.
மனம் திருந்தி வருகிற பாவிகளிடம் கடவுளாகிய தந்தை காட்டுகிற அணுகுமுறையை ஊதாரி மகன் கதையின் மூலம் இயேசு எடுத்துக்காட்டுகிறார். இந்தக் கதையைக் கேட்டபோது பேதுரு இயேசுவை நோக்கி “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

திருச்செங்கோடு சட்டையம்புதூரில் உள்ள முக்கூட்டு விநாயகர், அழகு முத்துமாரியம்மன், அழகுமுத்துகுமாரசாமி கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டையம்புதூரில் உள்ள முக்கூட்டு விநாயகர், அழகு முத்துமாரியம்மன், அழகுமுத்துகுமாரசாமி கோவிலில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. விழாவில் அழகுமுத்து மாரியம்மனுக்கும், முத்துக்குமாரசாமிக்கும் கம்பம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துக்குமாரசாமி படைக்கலம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மைக்காரர் படைக்கலம் எடுத்து பம்பை, மேளதாள, பறை இசைத்து ஊர் பொதுமக்களுடன் வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.
பின்னர் அழகுமுத்து மாரியம்மனுக்கும், முத்துக்குமாரசாமிக்கும் தேர்குத்துதல், அலகு குத்துதல், புலி வேடம், குறவன் குறத்தி வேடம், சாமிகள் வேடம் மற்றும் பல்வேறு வேடங்களுடன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தில் முதுகில் அலகு குத்தியும், தேர் இழுத்தும், தூக்குத்தேர் தூக்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து முத்துமாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி ஊர்வலம் நடந்தது. இறுதியில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டு தெப்பக்குளத்தில் முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுற்றது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழாநடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர கணக்குப்படி 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், ஸ்ரீபலிபூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு கலசபூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனை கோவில் மேல்சாந்திகள் மற்றும் கீழ் சாந்திகள் நடத்தினார்கள்.
தொடர்ந்து அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும், பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் தூய்மையும் ஒன்று. ‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட ஒன்று. நமது உணவு, உடை, உடல், இருப்பிடம் என யாவற்றிலும் நாம் தூய்மையை நன்கு கடைபிடிக்க வேண்டும். இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
இறை நம்பிக்கை என்பது வெறும் மனதளவிலான நம்பிக்கை மட்டுமல்ல; அது செயலளவிலானதும் கூட என்பதையே அந்நபிமொழி நமக்கு நன்கு சுட்டிக்காட்டுகிறது.
இதனால் தான், நாம் சாப்பிடும் முன் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும், சாப்பிட்ட பின்பும் கைகளை கழுவி, வாய் கொப்பளிக்கவும் வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், மலம், சிறுநீர் கழித்த பின் அவ்வுறுப்புக்களையும், கைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். காலணி அணிய வேண்டும், வீடுகளை, வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உறங்கும் முன் படுக்கையை உதறிக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனைத்து தூய்மைமுறைகள் குறித்து இஸ்லாம் வலியுறுத்தி கூறியுள்ளது. இவை அனைத்தும் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:
“மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்”. (திருக்குர்ஆன் 2:168)
“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்”. (திருக்குர்ஆன் 2:172)
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ், அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)
“உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக”. (திருக்குர்ஆன் 74:4,5)
“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” என்று கேட்டு ‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது’ என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 7:32)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குளிப்புடையவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!”. (திருக்குர்ஆன் 5:6)
இப்படியாக சுத்தம் பற்றி இஸ்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. நாம் தான் பலநேரங்களில் தூய்மையை கடைபிடிப்பதில்லை அல்லது கவனக்குறைவாக இருந்து விடுகிறோம். இதன் விளைவு நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், நம் சந்ததியினரையும் பாதிக்கிறது என்பது மட்டும் உண்மை.
‘சுத்தம் சோறு போடும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்பன போன்ற பழமொழிகள் சுத்தத்தின் அவசியத்தை நமக்கு நன்கு வலியுறுத்துகின்றன. நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான பழக்கத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வரவேண்டும். ‘தூய்மை தேசம்’ என்பது எங்கோ ஒரு மூலையிலுள்ள ஒரு திட்டமல்ல. நமது வீட்டு மூலையை சுத்தம் செய்வதிலிருந்து நாம் தொடங்க வேண்டிய நமக்கான திட்டம் தான் அது.
ஆரோக்கியம் மலர வேண்டுமென்றால் அது கட்டாயம் சுத்தத்திலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். நீர் மாசு, நில மாசு, காற்று மண்டல மாசு, வளி மண்டல மாசு என எல்லாமுமே மாசுபட்டுக் கிடக்கிற போது அவற்றின் மாசுகளை நாம் எப்படி நீக்கப் போகிறோம் என்பது தான் இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் சவால்.
வாருங்கள்... அசுத்தங்களை அகற்றிடுவோம்... சுத்தங்களை போற்றிடுவோம்...!!
மவுலவி எஸ் என் ஆர் ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 28 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். இதை தொடர்ந்து குளத்தில் தெப்பம் சுற்றி வலம் வந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் தென்னரசு தலைமையில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

மார்ச் மாதம் 2-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
2-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி
3-ம் தேதி புதன் கிழமை :
* முகூர்த்த நாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ரேவதி
4-ம் தேதி வியாழக்கிழமை :
* காங்கேயம் முருகப்பெருமானுக்கு லட்ச தீபம்
* சந்திராஷ்டமம்- அசுபதி
5-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* முகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
6-ம் தேதி சனிக்கிழமை :
* ராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் வீதி உலா.
* தேய்பிறை அஷ்டமி
* வாஸ்து நாள் ( பகல் 10 மணிக்கு மேல் 11.08 மணி வரை வாஸ்து செய்ய நன்று)
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
7-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கண்ணன் அலங்காரம்
* தேய்பிறை நவமி
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
8-ம் தேதி திங்கள் கிழமை :
* காரிய நாயனார் குரு பூஜை
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த மாதம் 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 27-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் தெப்ப உற்சவத்தையொட்டி கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதற்கிடையே தண்ணீரில் மிதந்து செல்லும் வகையில் தெப்பத்தேர் உருவாக்கப்பட்டு குளத்தில் விடப்பட்டது. தெப்பத்தேரானது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவத்தையொட்டி, நேற்று மாலை 7 மணியளவில் கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடரமணசாமி தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது வேதமந்திரங்கள் முழங்க வெங்கடரமணசாமிக்கு சிறப்பு பூஜை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தெப்பஉற்சவம் நடந்தது.
இதைக்கண்ட பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன், சாமி தரிசனம் செய்தனர். விழாவில், கரூர், தாந்தோன்றிமலை, திருமாநிலையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை) புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.