என் மலர்
ஆன்மிகம்

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை மறுநாள் நடக்கிறது
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6 மணிக்கு அன்னதர்மம், 7 மணிக்கு கோவில் கல்நிலை வாயில் திறப்பு விழா நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 5 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கின்றது.
அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினமான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது. 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார விழா பணிவிடையும் நடக்கின்றது.

Next Story