என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா, கடந்த மாதம் 11-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது. மாசித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது.
இதையொட்டி காலை 10.30 மணி அளவில் அம்மனுக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் மகாஅபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு 8 அடி நீளம், 8 அடி அகலம், ஒன்றரை அடி ஆழத்தில் புதிய தெப்பம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த தெப்பத்தில் தாமரை, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற மலர்கள் மிதக்க, அதில் அனந்தசயன கோலத்தில் கோட்டைமாரியம்மன் இருப்பது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அத்தகைய அம்மனின் அனந்தசயன கோலம் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மாசித்திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. வியாழக்கிழமை வரும் பிரதோஷ அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும்.
பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீச்சம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடுபலன் குறையும். தர்ம கர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும். கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சினை தீரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மதியம் நேரத்தில் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதி இல்லாததால் அன்னதானம் கோவிலுக்குள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
மேலும் அந்த நேரத்தில் கோவிலுக்கு வெளியே பலர் சாப்பாடு இன்றி தவித்ததை தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு வகையான கலவை சாதங்கள் பார்சலாக கட்டி கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது. தற்போது வரை அந்த வகையான சாதங்கள் காலை நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அரசு பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுபாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் படி சில தினங்களுக்கு முன்பு அனைத்து வயதுடைய பக்தர்களும் கோவிலுக்குள் நான்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் பூ, பழங்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் கோவிலுக்குள் பக்தர்களுக்கு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்தை மீண்டும் செயல்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் வழக்கம் போல் மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக கட்டி வழங்கப்பட உள்ளது.
அதன்படி சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. முருகப்பெருமானின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.
முருகா என்ற சொல்லில் முக்தி பிறக்கின்றது
கந்தா என்ற சொல்லில் கருணை பூக்கின்றது
கடம்பா என்ற சொல்லில் கருமவினை கரைகின்றது
கதிர்வேலா என்ற சொல்லில் காமம் கலைகிறது
கார்த்திகேயா என்ற சொல்லில் கஷ்டம் அழிகின்றது
ஆறுமுகா என்ற சொல்லில் ஆனந்தம் பிறக்கின்றது
சரவணா என்ற சொல்லில் மனம் சாந்தி அடைகின்றது
குமரா என்ற சொல்லில் குறைகள் விலகுகிறது
குழந்தைவேலா என்ற சொல்லில் குதூகலம் பிறக்கின்றது
தண்டாயுதபாணி என்ற சொல்லில் தரித்திரம் தொலைகிறது
சண்முகா என்ற சொல்லில் சக்தி பிறக்கிறது
அழகன் என்ற சொல்லில் புது ஆனந்தம் பூக்கிறது
மயிலோன் என்ற சொல்லில் மகிழ்ச்சி பிறக்கிறது
விசாகன் என்ற சொல்லில் விடியல் பிறக்கிறது
வேலவா என்ற சொல்லில் வேகம் பிறக்கிறது
சேயோன் என்ற சொல்லில் அழகு பிறக்கிறது
செவ்வேல் என்ற சொல்லில் வசந்தம் பூக்கிறது
பாலமுருகா என்ற சொல்லில் பாவம் நீங்குகிறது
சுப்பிரமணியா என்ற சொல்லில் சுகம் பிறக்கிறது
முனைவர். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறை தலைவர்,
பழனியாண்டவர் கலைக்கல்லூரி.

சேலம் சர்க்கார்கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியில் உள்ள கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சேலம் சர்க்கார்கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியில் உள்ள கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கெங்கம்மாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் வாணவேடிக்கை முழங்க சத்தாபரணம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு பால் குடம் எடுத்தல், ஆடை ஆபரண அலங்காரம் செய்தல், கூழ்படைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், சக்தி கரகம் எடுத்தல், பூக்கரகம், சேத்துமுட்டி எடுத்தல் போன்றவை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். மாலை 6 மணிக்கு பூ மிதித்தல், அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் போன்றவை நடைபெற உள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பவனி இன்று நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பவனி நடைபெறவில்லை. திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியில் பணிவிடைகள் மட்டும் நடந்தது.
ஆனால் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வாகன பவனி காலை 9 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற செந்தூர் பதியில் இருந்து புறப்படுகிறது. இந்த பவனிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். கிருஷ்ணராஜ் முன்னிலை வகிக்கிறார். வாகன பேரணி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, உடன்குடி, செட்டிகுளம், ஆரல்வாய்மொழி, அம்பலவாணபுரம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் உள்ள நிழல்தாங்கல்களில் இருந்து ஊர்வலமாக வரும் அய்யாவழி பக்தர்கள் இன்று இரவு நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.
இரவு நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது.
வைகுண்ட சாமியின் அவதார தினமான மார்ச் 4-ம் தேதி நாளை காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும் முன் செல்ல தொடர்ந்து முத்துக்குடைகளும் மேளதாளங்களுடன் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார்.
ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கொரோனா தொற்றின் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, சுகாதார முறைகளை கடைபிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.
அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
ரூ.2 கோடியில் திருப்பணிகள்
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்த 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து மத்தூர் மாரியம்மனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ரூ.2 கோடியில் திருப்பணிகள் முடிந்து இந்த கோவிலுக்கு பிப்ரவரி 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிகளின்படி...
இந்த கோவிலின் நான்கு புறமும் பிரதான வாசல்கள் ஆகம விதிகளின்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் ஒருபுறம் பிரமாண்டமான குதிரை சிலைகளும், மற்றொரு புறம் நவக்கிரகங்களுக்கான மகா மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை செல்லும் வழியில் கருங்கல்லூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில், பெட்ரோல் பங்கிற்கு வடக்கே அமைந்துள்ளது.
கோவிலின் சிறப்புகள்
குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆயாதி கணித்து, வாஸ்து நட்சத்திரம், ராசி நட்சத்திரம், கர்த்தா நட்சத்திரம், ராசிக்கு பொருந்திய ஆயாதி அளவுகள் தீர்மானித்து 3 நிலை விமானம் நீண்ட சதுரம் அமைப்பில் 3 பக்க வாசலுடன் கூடிய மகா மண்டபத்துடன் அமைந்திருப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மார்ச் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் மார்ச் 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, ஏகாந்தமாக நடக்கிறது. வருகிற 3-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 4-ந்தேதி காலை மீனலக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு ஹம்ச வாகன வீதிஉலா.
5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை திருச்சி உற்சவம், அதிகார நந்தி வாகன வீதிஉலா, 9-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா.
10-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 11-ந்தேதி தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 13-ந்தேதி காலை நடராஜர் ராவணாசூர வாகன வீதிஉலா, மதியம் திரிசூல ஸ்நானம், இரவு சூரிய பிரபை வாகன வீதிஉலா மற்றும் கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட அனைத்து வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், சோமசேகரர், காமாட்சி தாயார் எழுந்தருளி கோவில் உள்ளேயே உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
முன்னதாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி வருகிற 28-ந்தேதி பகல் 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை நடக்கிறது. மாலை 3 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி. முதலில் வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள்.
6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெயில் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும்.
இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்தப் பரிகாரத்தை நீங்கள் எப்படி நினைத்து செய்தாலும் சரி. நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்க உள்ள விழாக்கள் பற்றிய விவரத்தை கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 6, 13, 20, 27-ந்தேதிகளில் மூலவர் மற்றும் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு சிறப்பு அபிேஷகம் ஏகாந்தமாக நடக்கிறது. 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, 23-ந்தேதி வசந்தோற்சவம், 24-ந்தேதி கனிஜ தோட்ட உற்சவம், 25-ந்தேதி ரிபகுல சுப்பம்மா தோட்ட உற்சவம், 28-ந்தேதி அஸ்டோத்திர சத கலசாபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது மற்றும் பவுர்ணமி உற்சவமும் நடக்கிறது.
மேற்கண்ட உற்சவங்கள் நடக்கின்றன.

இவரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முறையாக விரதம் இருந்து வழிபடும்போது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதை அடைப்பதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.
எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்தான் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர். இவரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முறையாக வழிபடும்போது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதை அடைப்பதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். இதோடு சேர்த்து ஒருவருக்கு செவ்வாய் கிரகம் வலுவாக இருக்க வேண்டும். எவர் ஒருவருக்கு செவ்வாயின் அருள் பரிபூரணமாக கிடைக்கின்றதோ, அவருக்கு கடன் தொல்லை இருக்காது என்று கூறுகிறது ஜோதிடம். செவ்வாயின் ஆசீர்வாதத்தை பெறவும், ஹனுமனின் அனுக்கிரகத்தை பெறவும், வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்த முறையினை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணி, அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணி, இந்த நேரத்தில் பரிகாரத்தை செய்வது நல்ல பலனை தரும். தொடர்ந்து 9 வாரம் இந்தப் பரிகாரத்தை செய்து வர வேண்டும். குறிப்பாக சிவன் கோவில்களில், தூண்களில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான ஒன்று.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள். தாம்பூலத் தட்டு, சிகப்பு துணி ஒன்று, 1 1/4 கிலோ வெல்லம், 1/5 கிலோ கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், நெய் தீபம். உங்கள் வீட்டில் இருக்கும் தாம்பூலத்தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாம்பூலத்தட்டின் மேல் அனுமனுக்கு சாத்துவதற்கு சிகப்பு துணியை வைத்து, அதனுடன் வெல்லம், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், இவை மூன்றும் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு சிகப்பு வஸ்திரத்தை அணிவித்து, நீங்கள் வாங்கித் தந்த நல்லெண்ணையை காப்பாக ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை எல்லாம் ஆஞ்சநேயரின் சிலையை நீங்கள் கையால் தொட்டு செய்யக்கூடாது. அந்த கோவிலில் இருக்கும் ப்ரோகிதரிடம் கொடுத்து விட்டால் போதும். அவர், ஆஞ்சநேயருக்கு சிகப்பு துணியை சாத்திய பின்பு, நெய் தீபம் ஒன்று ஏற்றி வைத்து, உங்கள் மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயரின் முன்பு 5 நிமிடம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிச் சென்ற நல்லெண்ணெயை முழுமையாக கோவிலிலேயே கொடுத்துவிட வேண்டும்.
தாம்பூலத் தட்டை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டு, திரும்பி வீட்டுக்கு வந்து விடுங்கள். ஒன்பது வாரம் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் விரைவில் கைமேல் பலன் கிடைக்கும். ஆஞ்சநேயரை நம்பி செய்யப்படும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு கூடுதல் சக்தி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டிேய ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரசித்திப் பெற்றதாகும். அந்தக் கோவிலை தென் கயிலாயம் என்றும் பக்தர்கள் அழைப்பர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வாயு தலமாக திகழ்கிறது. ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை செய்ய உகந்த தலமாக விளங்குகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். அதேபோல் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 6-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 14 நாட்கள் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
அதற்காக கோவிலில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. கோவில் உள்ளே, வெளியே நடக்கும் வீதிஉலாவின்போது பயன்படுத்தப்படும் வாகனங்களை சீரமைத்து வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
கோவிலை சுற்றி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பக்தர்களுக்கு உதவி செய்ய தகவல் மையம், காவல் உதவி மையம் ஆகியவை அமைக்கப்படுகிறது. கோவில் அருகில் நாட்டிய, நடன, பக்தி இசை, சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்த தூர்ஜெட்டி கலையரங்கம் சீர் செய்யப்பட்டுள்ளது. பக்த கண்ணப்பர் கொடியேற்றத்தையொட்டி கண்ணப்பர் கோவிலுக்கும் வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
இந்தநிலையில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கங்காசதர்ன் விடுதியில் நடந்தது. கூட்டத்தில் பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது:-
வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கும் நேரத்தில் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பதி, நெல்லூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் கோவிலுக்குச் சொந்தமான இலவச பஸ்சை இயக்க வேண்டும்.
மகா சிவராத்திரிக்கு 2 நாட்களுக்கு முன்பே உள்ளூர் பக்தர்களுக்கு ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தின்போது, ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எம்.எல்.ஏ. ேபசினார்.
கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு, செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கட்நாராயணா, துணை பொறியாளர் முரளிதர், துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாத் மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.