search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    முருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்

    ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. முருகப்பெருமானின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.

    முருகா என்ற சொல்லில் முக்தி பிறக்கின்றது
    கந்தா என்ற சொல்லில் கருணை பூக்கின்றது
    கடம்பா என்ற சொல்லில் கருமவினை கரைகின்றது
    கதிர்வேலா என்ற சொல்லில் காமம் கலைகிறது
    கார்த்திகேயா என்ற சொல்லில் கஷ்டம் அழிகின்றது
    ஆறுமுகா என்ற சொல்லில் ஆனந்தம் பிறக்கின்றது
    சரவணா என்ற சொல்லில் மனம் சாந்தி அடைகின்றது
    குமரா என்ற சொல்லில் குறைகள் விலகுகிறது
    குழந்தைவேலா என்ற சொல்லில் குதூகலம் பிறக்கின்றது
    தண்டாயுதபாணி என்ற சொல்லில் தரித்திரம் தொலைகிறது
    சண்முகா என்ற சொல்லில் சக்தி பிறக்கிறது
    அழகன் என்ற சொல்லில் புது ஆனந்தம் பூக்கிறது
    மயிலோன் என்ற சொல்லில் மகிழ்ச்சி பிறக்கிறது
    விசாகன் என்ற சொல்லில் விடியல் பிறக்கிறது
    வேலவா என்ற சொல்லில் வேகம் பிறக்கிறது
    சேயோன் என்ற சொல்லில் அழகு பிறக்கிறது
    செவ்வேல் என்ற சொல்லில் வசந்தம் பூக்கிறது
    பாலமுருகா என்ற சொல்லில் பாவம் நீங்குகிறது
    சுப்பிரமணியா என்ற சொல்லில் சுகம் பிறக்கிறது

    முனைவர். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறை தலைவர்,
    பழனியாண்டவர் கலைக்கல்லூரி.

    Next Story
    ×