search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கபிலேஸ்வரசாமி
    X
    திருப்பதி கபிலேஸ்வரசாமி

    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 4-ந்தேதி தொடக்கம்

    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மார்ச் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் மார்ச் 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, ஏகாந்தமாக நடக்கிறது. வருகிற 3-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 4-ந்தேதி காலை மீனலக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு ஹம்ச வாகன வீதிஉலா.

    5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை திருச்சி உற்சவம், அதிகார நந்தி வாகன வீதிஉலா, 9-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா.

    10-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 11-ந்தேதி தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 13-ந்தேதி காலை நடராஜர் ராவணாசூர வாகன வீதிஉலா, மதியம் திரிசூல ஸ்நானம், இரவு சூரிய பிரபை வாகன வீதிஉலா மற்றும் கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட அனைத்து வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், சோமசேகரர், காமாட்சி தாயார் எழுந்தருளி கோவில் உள்ளேயே உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    முன்னதாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி வருகிற 28-ந்தேதி பகல் 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை நடக்கிறது. மாலை 3 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    Next Story
    ×