search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓங்காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
    X
    ஓங்காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

    ஓங்காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

    ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
    ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அம்மனுக்கு மலர்களை சூடி பூச்சாட்டுதல் விழா நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு அக்னி கபாலம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விளக்கு பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்படுகிறது.

    வருகிற 5-ந் தேதி காலை 6 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெறுகிறது. 6-ந் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×