
இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
திருவிழாவின் 8-வது திருநாளான வருகின்ற 10-ந்தேதி மகா சிவராத்திரி அன்று வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 11-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.