என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். அந்த வகையில் செம்பு மோதிரத்தை அணிந்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஜோதிர சாஸ்திரப்படி செம்பு மோதிரம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளையும் விரட்ட உதவும். பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். உலோகங்களில் மிகவும் பழமைவாய்ந்த தாமிரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கும்
தாமிரத்தால் ஆன பாத்திரத்தில் சாப்பிட்டாலும்கூட நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காப்பர் மோதிரம் கிருமிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கும் எனச் சொல்லப்படுகிறது. செம்பு மோதிரம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்பெறச் செய்யும்.
செம்பு மோதிரம் அணிவது வீட்டின் வாஸ்துவை சிறப்பாக மாற்றும். வீட்டுக்குள் நேர்மறை சக்திகளையும் இது அதிகரிக்கும். செம்பு மோதிரம் அணியும்போது சூரிய திசை செய்யும் சில கெடுதல்களையும் அதுதடுக்கும். உடல் வெப்பநிலையை சீராக வைப்பதோடு, செம்பு மோதிரம் கோபத்தையும் கட்டுப்படுத்தும். செம்பு மோதிரம் உங்கள் அன்றாட வாழ்க்கை, வேலையில் இருக்கும் தடைகளையும் விலக்கும்.
வாழ்வை ஒரே இடத்தில் பிடித்துப்போடும் சூர்ய மகாதசாவின் பாதிப்புகளையும் இது குறைக்கும். உடல் வீக்கம், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதிலும் செம்புமோதிரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.அடிக்கடி வரும் தலைவலிக்கும் செம்பு மோதிரம் வேட்டு வைக்கும்.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க நேர்ச்சையில், 45 அடி உயர தூக்க வில்லில் ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோவிலை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்ட விளையில் ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை நிறைவேற்ற வெங்கஞ்சியில் மற்றொரு கோவிலும் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மீனபரணி நாளில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் இங்குள்ள அம்மனுக்கு தூக்க நேர்ச்சை செலுத்தப்படுகிறது.
இதில் 3 மாதத்துக்கு மேல் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே இந்த நேர்ச்சையில் கலந்து கொள்ள முடியும்.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 9-ந் தேதி கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன்போற்றி தலைமையில் கொடியேற் றத்துடன் தொடங்கியது. இதில் 1,092 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை இன்று காலையில் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 4.30 மணிக்கு தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடந்தது.
காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை தொடங்கியது. தூக்க நேர்ச்சையில், 45 அடி உயர தூக்க வில்லில் ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோவிலை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.
தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள்(சனிக்கிழமை)20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவகோவில்களில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை மறுநாள்(சனிக்கிழமை) கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தங்க தோளுக்கினியான் நிகழ்ச்சியும், மாலை ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் 2-வது நாளான 21-ந் தேதி காலை யாளி வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் சாமி வீதி உலா, இரவு தங்கப் பல்லக்கு நிகழ்ச்சியும், 22-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை ஹனுமந்த வாகனத்திலும், 23-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், மாலை சேஷ வாகனத்திலும் சாமி வீதிஉலா நடக்கிறது.
24-ந் தேதி(புதன்கிழமை) காலை இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, இரவு கருட சேவையும், 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை திருமஞ்சனமும், மாலை சந்திர பிரபை நிகழ்ச்சியும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலா, 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை தங்க பல்லக்கு உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.
27-ந் தேதி(சனிக்கிழமை) காலை தந்தப் பல்லக்கும், மாலை குதிரை வாகனமும் வேடுபறி உற்சவமும் நடக்கிறது. 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேர் திருவிழா நடக்கிறது. மாலையில் சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும், இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
29-ந் தேதி(திங்கட்கிழமை) காலை தங்கப் பல்லக்கு நிகழ்ச்சியும் தொடர்ந்து மட்டையடி உற்சவமும், மாலை புஷ்பயாகமும், இரவு சப்தாவரணமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை விடையாற்றி உற்சவமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ராகவேந்திரர் மடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் மண்டகப்படியும், இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தே களிசபெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
31-ந் தேதி(புதன்கிழமை) காலை விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி காலை விடையாற்றி நிகழ்ச்சியும், ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலன் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடக்கிறது. பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்குகளாலும், வாழை தோரணங்களாலும் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் மேற்பார்வையில் தேவஸ்தான ஏஜெண்ட் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் விழாக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் 27-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளான செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்னதாக சித்திவிநாயகர், கொளஞ்சியப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளான சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் கிராம தேவதைகளுக்கு அருள்பாலிக்க செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது.
இதையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறும்.
விழாவில் வருகிற 27-ந்தேதி அதிகாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் அதிகாலையில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வ இலையோ, மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அர்ச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். ஒவ்வொரு துதியின் முன்னாலும் ‘ஓம்‘ சேர்த்து, சொல்ல வேண்டும்.
பாடிப் பாடிப் பரவவும், பணிந்து உவந்து போற்றவும். இதனால் பரமனருள் சித்திப்பது உறுதி. ஒவ்வொரு துதியின் முன்னாலும் ‘ஓம்‘ சேர்த்து, சொல்ல வேண்டும். இப்படி சொல்வதால் பலன் உண்டு. ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வத் தழையோ மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அர்ச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். இதுவும் மானச பூஜையின் பகுதிதான்.
ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அளப்பிலா அருளே போற்றி
ஓம் அன்பெனும் மலையே போற்றி
ஓம் அடியார்கள் துணையே போற்றி
ஓம் அணுவினுள் அணுவே போற்றி
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
ஓம் அகரமே அறிவே போற்றி
ஓம் அறிந்திடு மொழியே போற்றி
ஓம் அகத்தனே போற்றி போற்றி!
ஓம் அலைகடல் விரிவே போற்றி
ஓம் அழகனாம் அமுதே போற்றி
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
ஓம் அவிரொளி சடையாய் போற்றி
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
ஓம் அருமறை முடிவே போற்றி
ஓம் அருந்தவர் நினைவே போற்றி
ஓம் அரஹரா போற்றி போற்றி!
ஓம் ஆதியே அருளே போற்றி
ஓம் ஆலால கண்டா போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆலமர் குருவே போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி
ஓம் ஆரூரின் தியாகா போற்றி
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
ஓம் ஆடரவு அணியாய் போற்றி
ஓம் ஆற்றலே போற்றி போற்றி!
ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
ஓம் இனியசெந் தமிழே போற்றி
ஓம் இலக்கியச் செல்வா போற்றி
ஓம் இமயவள் பங்கா போற்றி
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
ஓம் இறைவனே போற்றி போற்றி!
ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
ஓம் இடபவா கனத்தாய் போற்றி
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
ஓம் ஈந்தருள் தேவே போற்றி
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
ஓம் ஈசானத் திறையே போற்றி
ஓம் ஈசனே போற்றி போற்றி!
ஓம் உலகிதன் முதலே போற்றி
ஓம் உமையரு பாகா போற்றி
ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
ஓம் உணவொடு நீரே போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
ஓம் உடைகரித் தோலாய் போற்றி
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
ஓம் உருவொடும் அருவே போற்றி
ஓம் உடையனே போற்றி போற்றி!
ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
ஓம் ஊங்கார ஒலியே போற்றி
ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
ஓம் எல்லையில் எழிலே போற்றி
ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எருதேறும் ஈசா போற்றி
ஓம் எம்பிரான் போற்றி போற்றி!
ஓம் ஏகநா யகனே போற்றி
ஓம் ஏதிலார் புகலே போற்றி
ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஓம் ஏகம்பா இறைவா போற்றி
ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி!
ஓம் ஐயனே அரனே போற்றி
ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!
ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் கருணைமா கடலே போற்றி
கடவுளே போற்றி போற்றி!
ஓம் சிவமெனும் பொருளே போற்றி
ஓம் செவ்வொளி வடிவே போற்றி
ஓம் தவநிலை முடிவே போற்றி
ஓம் தண்பதம் தருவாய் போற்றி
ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் பரமெனும் பொருளே போற்றி
ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
ஓம் புண்ணியா போற்றி போற்றி!
ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அளப்பிலா அருளே போற்றி
ஓம் அன்பெனும் மலையே போற்றி
ஓம் அடியார்கள் துணையே போற்றி
ஓம் அணுவினுள் அணுவே போற்றி
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
ஓம் அகரமே அறிவே போற்றி
ஓம் அறிந்திடு மொழியே போற்றி
ஓம் அகத்தனே போற்றி போற்றி!
ஓம் அலைகடல் விரிவே போற்றி
ஓம் அழகனாம் அமுதே போற்றி
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
ஓம் அவிரொளி சடையாய் போற்றி
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
ஓம் அருமறை முடிவே போற்றி
ஓம் அருந்தவர் நினைவே போற்றி
ஓம் அரஹரா போற்றி போற்றி!
ஓம் ஆதியே அருளே போற்றி
ஓம் ஆலால கண்டா போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆலமர் குருவே போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி
ஓம் ஆரூரின் தியாகா போற்றி
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
ஓம் ஆடரவு அணியாய் போற்றி
ஓம் ஆற்றலே போற்றி போற்றி!
ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
ஓம் இனியசெந் தமிழே போற்றி
ஓம் இலக்கியச் செல்வா போற்றி
ஓம் இமயவள் பங்கா போற்றி
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
ஓம் இறைவனே போற்றி போற்றி!
ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
ஓம் இடபவா கனத்தாய் போற்றி
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
ஓம் ஈந்தருள் தேவே போற்றி
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
ஓம் ஈசானத் திறையே போற்றி
ஓம் ஈசனே போற்றி போற்றி!
ஓம் உலகிதன் முதலே போற்றி
ஓம் உமையரு பாகா போற்றி
ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
ஓம் உணவொடு நீரே போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
ஓம் உடைகரித் தோலாய் போற்றி
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
ஓம் உருவொடும் அருவே போற்றி
ஓம் உடையனே போற்றி போற்றி!
ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
ஓம் ஊங்கார ஒலியே போற்றி
ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
ஓம் எல்லையில் எழிலே போற்றி
ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எருதேறும் ஈசா போற்றி
ஓம் எம்பிரான் போற்றி போற்றி!
ஓம் ஏகநா யகனே போற்றி
ஓம் ஏதிலார் புகலே போற்றி
ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஓம் ஏகம்பா இறைவா போற்றி
ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி!
ஓம் ஐயனே அரனே போற்றி
ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!
ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் கருணைமா கடலே போற்றி
கடவுளே போற்றி போற்றி!
ஓம் சிவமெனும் பொருளே போற்றி
ஓம் செவ்வொளி வடிவே போற்றி
ஓம் தவநிலை முடிவே போற்றி
ஓம் தண்பதம் தருவாய் போற்றி
ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் பரமெனும் பொருளே போற்றி
ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
ஓம் புண்ணியா போற்றி போற்றி!
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 8-ம் கொடை விழாவும் நடந்தது.
இதையடுத்து பரணி கொடை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு உருள் நேர்ச்சையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு பருத்திவிளையில் இருந்து அம்மனுக்கு சந்தன குட பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்ச கால பூஜையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை தொடங்கியது.
ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பூஜை மாசித் திருவிழாவின் 6-ம் நாள் அன்றும், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் நடைபெறும்.
வலிய படுக்கை பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திறளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலிய படுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. மேலும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அங்கு உள்ள தென்னந்தோப்புகளில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை உற்சவர் கோதண்டராமர், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு கருட வாகன சேசவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள். இந்த கோவிலின் தலவரலாறு மகத்துவமானது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம்!.
சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர்-காமாட்சி அம்மன்.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவிலில் தனிக்கோவில் கொண்டு சிம்ம வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இயற்ற விரும்பினார்.
அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இயற்றுவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார்.
சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்கு சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெறும் பேறு கிடைத்தது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு மகாசிவராத்திரி வழிபாடு அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடைபெறும். இங்கு மகாசிவராத்திரி நாளில் கைலாச நாதரை வழிபட்டு திருக்கயிலாயம் சென்ற பலனை அடைவோமாக!.
ேவறு எங்குமே காண முடியாத ஐந்தரை அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.
அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!
இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர்-காமாட்சி அம்மன்.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவிலில் தனிக்கோவில் கொண்டு சிம்ம வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.
பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது, அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இயற்ற விரும்பினார்.
அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இயற்றுவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார்.
சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்கு சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார். அத்துடன், அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.
சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெறும் பேறு கிடைத்தது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு மகாசிவராத்திரி வழிபாடு அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடைபெறும். இங்கு மகாசிவராத்திரி நாளில் கைலாச நாதரை வழிபட்டு திருக்கயிலாயம் சென்ற பலனை அடைவோமாக!.
ேவறு எங்குமே காண முடியாத ஐந்தரை அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.
அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!
‘காரியத்தை தொடங்க அம்பிகையிடம் உத்தரவு கேட்கும் பக்தர்கள்’
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசிப்பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் நடக்கிறது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசிப்பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ந் தேதி மயானக்கொள்ளை, 16-ந்தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் நடக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பனை, வாகை மற்றும் புளி ஆகிய மரங்களைக் கொண்டு புதியதாக தேர் உருவாக்கி 7-வது நாள் விழாவில் தேரில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தேரோட்ட விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடித்து கொரோனா நோய் தொற்று பரவாமல் அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ரணகளிப்பு வல்லான சூரசம்ஹாரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி மயானத்திற்கு சென்று, அங்கு மயானக் கொள்ளை நடந்தது. கோவில் அறங்காவல் குழுவினர், நல்லவாடு கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதேபோல் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 54-வது அண்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தவக்காலத்தையொட்டி விருதுநகரில் இருந்து வேளாங்கண்ணிக்கு 21 பேரை கொண்ட குழுவினர் சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். அவ்வாறு உபவாசமிருந்த காலத்தை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம்.
இந்த நாட்களை தவக்காலம் என அழைக்கிறார்கள். தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கபடுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வேளாங்கண்ணிக்கு புனித பயணம் மேற்ெகாண்டு ஆரோக்கிய அன்னையை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 21 பேர் கொண்ட குழுவினர் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரையாக வந்து, பேராலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தவக்காலத்தையொட்டி தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.