என் மலர்

  ஆன்மிகம்

  கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
  X
  கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் 27-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் 27-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
  விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.

  கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளான செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

  முன்னதாக சித்திவிநாயகர், கொளஞ்சியப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளான சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் கிராம தேவதைகளுக்கு அருள்பாலிக்க செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது.

  இதையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறும்.

  விழாவில் வருகிற 27-ந்தேதி அதிகாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் அதிகாலையில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×