என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும்.

    திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பதிகம் பாடிய திருத்தலங்களில் ஒன்று, ‘தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.’ வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன், இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்தான்.

    இதன் காரணமாக ராமரின் அருள் கிடைத்து, தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானரமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத்தலம் ‘தென்குரங்காடுதுறை’ என்றானது. சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலய மூலவரான ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டால் இழந்த செல்வத்தை மீட்கலாம்.

    இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா தொடங்கியதும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபடுவர்.

    மேலும், அக்னிச்சட்டி ஊர்வலம், பால்குடம் ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலமாக வருதல், அன்னதானம் வழங்குதல் என திருவிழா நிறைவு பெறும் வரையிலும், ஈரோடு மாநகரமே திருவிழாக் கோலமாகக் காணப்படும். குறிப்பாக மஞ்சள் நீராட்டுடன் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் மற்றும் தேர் திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி இரவு 9 மணிக்கு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த கம்பங்களுக்கு ஏராளமான பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரிகள் 9 பேர் மட்டும் தீ மிதித்தனர். அப்போது சுற்றி நின்றிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி காரைவாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத்தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக தேர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 9.50 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். 12-ந் தேதி மாலை 3 மணி அளவில் மஞ்சள் நீராட்டுடன் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    விருத்தாசலம் மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 10-ம் விழாவான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்க, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சோழ வள நாட்டில் பாயும் காவிரியின் வடகரை திருத்தலங்களில் ஒன்று கீழை திருக்காட்டுப்பள்ளி. இங்கு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    சோழ வள நாட்டில் பாயும் காவிரியின் வடகரை திருத்தலங்களில் ஒன்று கீழை திருக்காட்டுப்பள்ளி. இது வடகரை தலங்களில் 12-வது ஆலயம் ஆகும். இந்த திருத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்கு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன்- ஆரண்ய சுந்தரேஸ்வரர், இறைவி- அகிலாண்டநாயகி என்று அழைக்கப்படுகிறார்கள்.

    தல வரலாறு

    இந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் தனது குருவாக அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனைத் தேர்வு செய்தான். அவனை வைத்து ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்வி செய்தான். இதையறிந்த இந்திரன், விசுவரூபனைக் கொன்றான். விசுவரூபனின் தந்தையான துவஷ்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்ற அரக்கன் தோன்றினான். அவன் பல வரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். இந்திரனை வென்று, தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.

    அவன் உலகத்தில் உள்ள எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால் அதுவரை இருந்த ஆயுதங்களைத் தவிர்த்து, புதியதொரு ஆயுதம் ஒன்று தேவைப்பட்டது. இதற்காக ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திரா சூரனை அழித்தான் இந்திரன். வேள்வியில் தோன்றிய விருத்திரா சூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவலிங்கங்களை அடுத்து முருகப்பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்த கணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர் களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டு கள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

    ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத் தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.

    ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார். சிவ பெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழை திருக்காட்டுப்பள்ளி திருத்தலம்.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்தது.

    பின்பு பல மாதங்களுக்கு பிறகு ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

    இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார்.

    வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை கட்டாயம் ஆகும். ஆன்-லைனில் முன்பதிவு செய்த கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகர விளக்கு பூஜை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பங்குனி மாத பூஜை, ஆராட்டு திருவிழாவில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
    வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டு திருப்பலிக்கு பின்னர் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.

    வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. 18-ந்தேதி ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

    அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.

    இந்த தகவலை பங்குத்தந்தை பிச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
    செல்லியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி காப்பு கட்டு, முதலாம் மண்டகப்படியுடன் தொடங்கியது. தொடர்ந்து அய்யனார் காப்பு, குடியழைப்பு அம்மன் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 31-ந்தேதி முதல் அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கடந்த 5-ந்தேதி நள்ளிரவு முள் படுகளம் நடைபெற்றது. அப்போது, சுமார் 100 அடி நீளத்தில் 5 அடி அகலத்துக்கு கருவேல முட்களை பரப்பி அதில் வேண்டுதல் நிறைவேற்றுவோர் படுத்து அம்மனை வழிபட்டனர். மறுநாள் தெரு பொங்கல், நேற்று முன்தினம் கோவில் பொங்கல் வைக்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மதியம் 1 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் மஞ்சள் நீர் விழா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடையாற்றி உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரிகள் ஜெய்கிஷன், முத்துராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.
    ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்
       அந்திபக லற்றநினை வருள்வாயே
    அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை
       அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
    தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
       சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே
    தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்
       சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
    மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
       உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
    மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
       வந்தணைய புத்தியினை அருள்வாயே
    கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
       கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே
    குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு
       கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

    காங்கேயத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் கொங்கணகிரி. இங்கு வட்டமலை என்ற பெயருடன் திகழும் குன்றின் மீது கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது அருணகிரியார் அருளிச் செய்த அற்புதமான திருப்புகழ் பாடல் இது.

    செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும். புண்ணிய தலங்களில் முருகனை தரிசிக்கும்போதும், இப்பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம்.
    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

    இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் நடந்தது.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை பிச்சாண்டேஸ்வரர் புறப்பாடு நடக்கிறது.. நாளை(வெள்ளிக்கிழமை) காலை சந்திரசேகரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி காலை 6 மணிக்கு மேல் 6. 45 மணிக்கு சதய நட்சத்திரத்தில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியிறக்கம் நடக்கிறது.

    இந்த சித்திரை பெருவிழாவில் 18 நாட்களும் காலை திருமுறை விண்ணப்பமும், மாலை திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இரவு நேரங்களில் பக்தர்கள் மலையின் மேல் தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் ஆகியோர் செய்துள்ளனர்.
    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலி்ல் பங்குனி மாதம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விழாவையொட்டி அதிகாலை முதல் அம்மனுக்கு அபிேஷகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்வர். இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

    சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி சாமி கோவிலில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திர நாளில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆண்டு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம்(6-ந் தேதி) மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    முன்னதாக விஜயவல்லி தாயார் உடனாகிய சக்கரபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமி மற்றும் தாயாருக்கு சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி நேற்று மாலை சாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், சுதர்சன பக்தர்கள் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    ×