என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள், தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோவிலாக, திருநீலக்குடி திருத்தலம் திகழ்கிறது.
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள், தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோவிலாக, திருநீலக்குடி திருத்தலம் திகழ்கிறது. கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு திருநீலகண்டநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இறைவன்- திருநீலகண்டநாதர், இறைவி- ஒப்பிலாமுலையாள். இத்தல மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும் அதிசயம் நிகழ்கிறது. ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத்தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.
தல வரலாறு:
மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரம் நரசிம்மர். அவதாரத்திற்கு ஒரு திருமணம் என்ற முறையில் கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோருக்கு திருமணம் நடந்த இடம்தான் ராமகிரி. நரசிம்மர், ஸ்ரீதேவி, பூமாதேவியின் திருமணத்திற்கு சிவன், சக்தி, பிரம்மா, சரஸ்வதி மற்றும் அனைத்து தேவர்கள், அடியார்கள், ரிஷிகள் வந்து 15 நாள் முகாமிட்டு திருக்கல்யாண வைபவத்தை முடித்து வைத்துள்ளனர். இதற்கு அடையாளமாக சிவன், பிரம்மா சிலைகளும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.
வேட்டைக்கு போன ராஜா:
பாண்டியப்பேரரசை ஆட்சி செய்த சந்திர சேகர பாண்டியன், புலிக்குத்தி சாமைய நாயக்கருக்கு பாண்டிய நாட்டின் வடபகுதியிலுள்ள தட்டை நாடு சீமையை ஆளும் உரிமையை கொடுத்துள்ளார். அப்படி சாமைய நாயக் கர் வம்சாவளியில் வந்த லண்டகதிரழகு சா மைய நாயக்கர், குஜி லியம்பாறை அருகே வசந்தகதிர்பாளையத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்தார். அப்போது தொப் பையசாமி மலைப்பகுதியான சக்கர கிரி மலைப்பகுதிக்கு வேட்டையாட படை, பரிவாரங்களுடன் சா'மைய நாயக்கர் வந்தார். அவர் தற்போது கோயில் உள்ள இடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, குடிக்க தண்ணீர் தேட, ஒரு சுனையிலிருந்து குளித்து விட்டு ராமணம்பிள்ளை என்ற பறவை தனது சிறகுகளை உலர்த்தும்பொழுது, 'ராமா, ராமா' என்று கத்தியது.
அந்த சிறகிலுள்ள நீர்த்துளி மேலில் பட பக்கத்திலுள்ள புதரை விலக்கி, நீர் நிலையை பார்க்கும்போது, அந்த இடத்திலிருந்து முதுகில் ராமம் போட்ட கீரி ஒன்று ஓடியது. அக்கீரியை படை வீரர்களும் நாய்களும் விரட்டினர். உடனே அந்த கீரி கோயிலில் இருந்த இடத்திற்கு சென்றது. சிறிது நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த கீரியானது திடீரென நாய்களை விரட்ட, நாய்கள் பயந்து ஓடியது. இதை பார்த்த ஆச்சரியமடைந்த வீரர்கள் நடந்ததை மன்னரிடம் கூறினர். ஆராய்ந்து விசாரித்தபோது, அந்த இடத்தில் கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருமணம் நடைபெற்ற இடம் என தெரிய வந்தது.
ஆஞ்சநேயர் வரவேற்பு:
திருமண விழாவை சிவ பெருமான், ஈஸ்வரி, பிரம்ம தேவர், சரஸ்வதி மற்றுமுள்ள அனைத்து தேவர்கள், ரிசிகள் மற்றும் எல்லோரும் வந்திருந்து 15 நாள் விழாவாக கொண்டாடினர். விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 4 திசைகளிலும் ஓடி, ஓடி ஆஞ்சநேயர் வரவேற்பு செய்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த இடத்தில் ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் கட்டி, வழிபட்டு வந்த இடம் என்றும், தற்சமயம் பராமரிப்பு இல்லாது போய் விட்டது என்றும் கேள்விபட்டு அரண்மனைக்கு சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றி, கோயிலை புதுப்பிக்கும்படி கூறினாராம்.
உடனே சாமைய நாயக்கர் வனமாக இருந்த இந்த இடத்தை அழித்து, நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூமாதேவி திருக்கல்யாண கோலத்தில் அமைந்தவாறு கோயில், கமலவல்லி தாயாருக்கு தனி சன்னதி, எதிர்சேவை கருடாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, முன்மண்டபம், மணி மண்டபம், துவஸ்தம்பம் அமைத்தார். வாகன அறை, மடப்பள்ளி, யாகசாலை அமைத்து மதில் சுவர் கட்டியும் ராஜகோபுரம் அமைத்துள்ளனர். கருடாழ்வாருக்கும், ஆஞ்ச நேயருக்கும் கோயிலுக்கு வெளியில் தனித்தனியாக கோயில் அமைத்துள்ளனர்.
மங்கலம் கூடி வரும் :
திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.
இக்கோயில் லண்டக திரழகு சாமையநாயக்கர் ஆரம்பித்து அவர் மகன் குமரழகு சாமையநாயக்கர் கட்டி முடித்ததுடன், அவருடைய மனைவி சீலக்கம்மாள் சிலையும் அமைத்து, சீலக்கம்மாளின் இடது புஜத்தில் உள்ள கிளி வலது மார்பில் பால் அருந்துவது போலவும், தலையில் ஊற்றும் எண்ணெய் தொப்பூழ் வழி சொட்டி விளக்குக்கு எண்ணெய் வழங்கும்படி கலையழகுடன் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவ ஆகமப்படி வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் இருந்த சட்டத்திலான தேரை மாற்றி, ஆங்கிலேயர் காலத்தில் கோயில் தர்மகார்த்தாவான சோழ ப்ப நாயக்கர், திருவாரூர் தேர் போன்று அழகிய சிற்பங்களுடனும், கலை நயத்துடனும் பெரிய தேரை அமைத்துள்ளனர்.
கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் இயங்குகிறது. பங்குனி மாதம் 10ம் நாள் பெரிய தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழா உள்ளிட்ட விஷேச நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவராத்திரி விழாவில் 9 தினங்களும் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்தும், 10வது நாள் பெருமாள் விஷ்ணு துர்க்கை அவதாரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்து மகிசாசூரனை வதம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெறும்

கடமலைக்குண்டு அருகே மலைக்குகையில் சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே எரித்தட்டு மலையடிவாரத்தில் கொம்புகாரன்புலியூர் கிராமம் உள்ளது. அந்த எரித்தட்டு மலையின் ஒரு பகுதியில் மிகக்குறுகிய அளவிலான குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் சித்தர்கள் தவம் இருந்ததாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த குகையின் உள்பகுதியில் சிறிய பாறை ஒன்று சிவலிங்கம் போன்று அமைப்பில் இருப்பதை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் பார்த்தனர். மேலும் அந்த சிவலிங்கத்தின் மீது குகையின் மேற்பரப்பில் இருந்து சொட்டு சொட்டாக பாறை நீர்த்துளிகள் விழுவதையும் கண்டனர்.
இந்த அதிசய நிகழ்வு குறித்து கொம்புகாரன்புலியூர் கிராம மக்களிடம், அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மலை குகையில் சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தை பார்ப்பதற்காக கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சிவலிங்கத்தையும், அதன்மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழுவதையும் பார்த்து பரவசம் அடைந்தனர். மேலும் அந்த சிவலிங்கத்திற்கு அவர்கள் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். அந்த மலை குகை மிகக்குறுகிய அளவில் இருந்ததால் பொதுமக்கள் தவழ்ந்து சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த தகவல் கடமலைக்குண்டு, தேவராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் எரித்தட்டு மலைக்கு படையெடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் வனத்துறை அதிகாரிகள், கொம்புகாரன்புலியூர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எரித்தட்டு மலை, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றனர்.
இதற்கிடையே கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எரித்தட்டு மலைக்கு சென்று தானாக உருவான சிவலிங்கத்தையும், அதன்மீது பாறையில் இருந்து நீர்த்துளிகள் அபிஷேகமாக விழுவதையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதற்கிடையே குகையில் உருவான சிவலிங்கத்திற்கு விழா ஏற்பாடு செய்து, பூஜை நடத்த கொம்புகாரன்புலியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

சுதர்சன அஷ்டகத்தை தினமும் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும். இறைவனின் அருளும் மன வலிமையும் கிடைக்கும்.
பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள். அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.
தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
1.ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
2. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
5.ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
6.புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
7.மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
8.ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
9.தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
ஸுத்ரஸநாஷ்டகம் ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.

சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.
சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை 6.30 மணிக்கு முப்புடாதி அம்மன் வழிபாடு குழுவினரின் பஜனை மற்றும் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் இரவு 8 மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 4-ம் நாள் இரவு 8 மணிக்கு நவீன வில்லிசை, 5-ம் நாள் இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 6-ம் நாள் மாணவ மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 7-ம் நாள் இரவு 8 மணிக்கு சுரண்டை சிவகுருநாதபுரம் சிறுவர் சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு 1 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்புடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா, காமராஜ் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம், அதிகாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
9-வது நாள் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்புடாதி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலை வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் 7 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு இசை பட்டிமன்றம் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்புடாதி அம்பாள் எழுந்தருளி சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்கிறது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியைகள் நடத்தும், தருவது வரவுகளால் உறவுகளா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு கொடி பவனி, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. திருத்துவபுரம் பேராலய பங்குதந்தை பீட்டர் கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். முள்ளங்கினாவிளை பங்குதந்தை கில்பர்ட் லிங்சன் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாைல, இரவு 8 மணிக்கு அன்பின்விருந்து ஆகியவை நடக்கிறது.
17-ந்தேதி காலை 7.30 மணிக்கு நட்டாலம் இணை அதிபர் ஜஸ்டின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். ஹெலன்நகர் பங்குதந்தை ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு விழுந்தயம்பலம் பங்குதந்தை சார்லஸ் விஜீ தலைமை தாங்கி சிறப்பு ஆராதனை நிறைவேற்றுகிறார். ஏற்றகோடு பங்குதந்தை சேவியர்சுந்தர் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாதஸ்வர மேளம், அலங்கார மின்விளக்குகளுடன் தேர்பவனி நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அருட்பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர் பவனி, அன்பின்விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நன்றியுரை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேங்கோடு பங்குதந்தை ஆன்றனி கோமஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் விழா இன்று இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.
11-ந் தேதி பூப்பல்லக்கும், 12-ந் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

ஈரோடு பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் குண்டம்-தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. முன்னதாக இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் பூசி, காப்பு கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கம்பங்களை கோவில்களின் பூசாரிகள், மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலம் பெரியார் வீதி, கச்சேரி வீதி, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் முதல் கம்பம் பெரியமாரியம்மன் கோவிலிலும், 2-வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலிலும், 3-வது கம்பம், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது. இந்த விழாவில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அன்று காலை 9 மணிக்கு தேர்வடம் பிடித்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள்.
வருகிற 12-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். ருண விமோசன பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.

ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு திருப்பதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், ஏப்ரல் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் திருப்பதி கோவில் தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவனை ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் அழைப்பார்கள்.
இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அதாவது தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத வண்ணம் ஆகியவை இறைவனின் திருமேனியை ஒளிரச் செய்கின்றன.
இத்தலத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிவலிங்கத்தின் ஒரே ஆவுடையாரின் இரண்டு பாணங்கள் அமைந்திருக்கின்றன.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவிலில் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.
சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.
திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.
இந்த கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.