
இரவு 1 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்புடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா, காமராஜ் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம், அதிகாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
9-வது நாள் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்புடாதி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலை வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் 7 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு இசை பட்டிமன்றம் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்புடாதி அம்பாள் எழுந்தருளி சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்கிறது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியைகள் நடத்தும், தருவது வரவுகளால் உறவுகளா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.