search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித சவேரியார்
    X
    புனித சவேரியார்

    வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு கொடி பவனி, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. திருத்துவபுரம் பேராலய பங்குதந்தை பீட்டர் கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். முள்ளங்கினாவிளை பங்குதந்தை கில்பர்ட் லிங்சன் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாைல, இரவு 8 மணிக்கு அன்பின்விருந்து ஆகியவை நடக்கிறது.

    17-ந்தேதி காலை 7.30 மணிக்கு நட்டாலம் இணை அதிபர் ஜஸ்டின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். ஹெலன்நகர் பங்குதந்தை ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு விழுந்தயம்பலம் பங்குதந்தை சார்லஸ் விஜீ தலைமை தாங்கி சிறப்பு ஆராதனை நிறைவேற்றுகிறார். ஏற்றகோடு பங்குதந்தை சேவியர்சுந்தர் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாதஸ்வர மேளம், அலங்கார மின்விளக்குகளுடன் தேர்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அருட்பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர் பவனி, அன்பின்விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நன்றியுரை ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வேங்கோடு பங்குதந்தை ஆன்றனி கோமஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×