என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு தலைமைபதியின் வடக்கு வாசலில் 6 ஆண்டுகள் தவம் இருந்தார். தவம் நிறைவடையாத நிலையில் திருவிதாங்கூர் மன்னர் அய்யா வைகுண்டசாமியை சிறை பிடித்து வர உத்தரவிட்டதாகவும், இதையடுத்து அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்கள் மற்றும் பக்தர்களுடன் முட்டப்பதி கடலுக்குள் சென்று 2-வது முறையாக விஞ்சை பெற்று அன்று மாலையே சாமிதோப்புக்கு திரும்பி வந்ததாகவும் அகிலத்திரட்டு கூறுகிறது.
அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை சாமிதோப்பிலிருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து முத்துக்குடை ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை பால.பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். பையன் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். பையன் நேம்ரிஷ் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளங்கள் முன்செல்ல தொடர்ந்து முத்துக்குடையுடன் பக்தர்களும் சென்றனர். தலைமைப்பதி, பெரிய ரத வீதியை சுற்றி வந்த ஊர்வலம் தொடர்ந்து கரூம்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், விவேகானந்தபுரம் வழியாக பகல் 12 மணிக்கு முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து முட்டப்பதியில் பணிவிடை நடந்தது.
முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு முட்டப்பதியில் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் சாமிதோப்புக்கு புறப்பட்டது. ஊர்வலமானது கொட்டாரம், பொத்தையடி, அரசம்பதி வழியாக ஊர்வலம் இரவு 8 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதி வந்தடைந்தது. தொடர்ந்து, அய்யா வைகுண்டசாமிக்கு பணிவிடை நடந்தது. ஊர்வலத்தில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மதியம் 12.10 மணி அளவில் வனத்துறை கேட் மூடப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் பழமை வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரெங்கம் என்று பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது அரங்கமாக இந்த கோவில் விளங்குகிறது.
மேலும் இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன், வேதங்கள் வழிபட்டதாக கூறப்படும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தேர் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடந்தன. கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கோவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருமாள், தாயாருடன் எழுந்தருளினார். 3 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர்.
நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்கிச் சிறப்பிப்பதால் நம் தேகம் நலமாகும்; சிந்தனை வளமாகும்; செயல்கள் சிறப்படையும். ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
விரிவான பரிகார பூஜைகள், ஹோமங்கள் மட்டுமன்றி, எளிய வழிமுறைகளையும் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். அவற்றைச் செய்வதால், ஒன்பதுகோள்களும் உன்னத பலன்களை அருளும்.
எளிய பரிகார வழிமுறைகள்
* காய்ச்சாத பசும்பாலை 15 நாள்கள் தொடர்ந்து அருகிலுள்ள ஆலயங்களுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். அதேபோல், தொடர்ந்து 45 நாள்களுக்கு, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று நீர் நிரம்பிய தேங்காயைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
* தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால், மங்கலம் உண்டாகும்.
* பயணம் செய்யத் தொடங்குமுன் கைப்பிடி அரிசி அல்லது கோதுமையை ஆற்று நீரில் விடுவதால் நலம் உண்டாகும்.
* அதேபோல், கிரக பாதிப்புகள் நீங்குவதற்கு, உரிக்காத தேங்காயையும் ஓடு நீக்காத பாதாம் பருப்பையும் ஆற்று நீரில் இடுதலையும் பரிகாரமாகச் சொல்வார்கள்.
* இரவு படுக்கப் போகும்போது ஒரு குவளையில் நீரெடுத்து தலையணை அருகே வைத்துக்கொண்டு, அதை காலையில் ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். இதை 43 நாள்கள் செய்யவேண்டும்.
* உறவுகள் அனைவரையும் அழைத்து சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதால் நன்மைகள் உண்டாகும். இயலாதவர்கள், தினமும் சூரிய வணக்கம் செய்வதுடன் சூரியனுக்கு நீர் அளிக்கவும் வேண்டும்.
* வியாழனன்று பூண்டு, வெங்காயம் உண்பதைத் தவிர்க்கவும். அந்த நாளில் கோயில்களில் இனிப்பு நைவேத்தியம் சமர்ப்பித்து, பிரசாதமாக வழங்கலாம்.
* அனுதினமும் விநாயகர் மற்றும் அனுமனை வழிபடுவதால், கிரக தோஷங்கள் நம்மைவிட்டு விலகியோடும்.
* மாதப்பிறப்பு நாள்களில் சர்க்கரை, கடலைப் பருப்பு, உப்பு, நெய், மாவு போன்றவற்றை தானம் அளிக்கலாம்.
* குரங்குகளுக்கு வாழைப்பழம் அளித்தல், நாய்க்கு உணவிடுதல் போன்ற காரியங்கள் புண்ணியம் சேர்க்கும்; தோஷம் நீக்கும். அதேபோல், இரவில் ஒரு பிடி பச்சைப் பயிரை ஊறவைத்து மறுநாள் புறாக்களுக்கு அளிக்கவும்.
* ‘வெள்ளிக்கிழமைகளில் 100 பசுக்களுக்கு புல் அளிக்கவும். செவ்வாய்க் கிழமை இரவுகளில் தலையருகே கீரைகளை வைத்துக்கொண்டு உறங்கி, அதை மறுநாள் பசுக்களுக்கு தானம் அளிக்கவும். இப்படி மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்வது நல்லது.
* விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷம். அதேபோல் ஏழை மாணவர்களின் படிப்புக்கும், முதியோரின் ஜீவாதாரத்துக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்வதன்மூலம், நம் முன்வினைகள் நீங்கும்;

சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் - அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விநாயகர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் கோவில் நிர்வாகத்தினர் கொரோனா முன்னெச்சரிக்கையோடு கோவில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு வாகனத்திலும் சாமி புறப்பாடு கோவில் வலகத்திற்குள் நடைபெறும். வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
பழனி
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். இரவு 7 மணிக்கு பின்னர் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் இரவு 8 மணிக்குள் அனைவரும் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும். கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் பக்தர்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனைவரும் பழனி முருகன் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
கோவில் வளாகத்திற்குள் அசுத்தம் செய்வது, எச்சில் உமிழ்வது கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றுண்டி சாலைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவில் முடிக்காணிக்கை நிலையத்தில் அரசின் கட்டுப்பாட்டு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இரவு 7 மணிக்கு பின்னர் மின் இழுவை ரெயில், ரோப்காரில் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முதலில் விநாயகர் தேரையும், அதைத்தொடர்ந்து முருகன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து குழல்வாய்மொழி அம்மை தேரும், நடராஜர் தேரும் வடம்பிடித்து இழுக்கப்பட்டன. தேரோட்டம் காலை 8-30 மணிக்கு தொடங்கி 11-30 மணிக்கு முடிவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந்தேதி சித்திர சபையில் நடைபெற இருந்த சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை ஆகியவை கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. கோவிலுக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.
மதுரை :
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திக்கு விஜயமும், 24-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேர் திருவிழாவும் நடை பெற இருந்தது.
அதே போன்று அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் 26-ந் தேதி எதிர்சேவையும், 27-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்க இருந்தன. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக உள்ளதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போல் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பக்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இக்கூட்டத்தில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருவிழா நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது எல்லாம் அரசு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமல் தேர்தல் முடிந்த பிறகு திருவிழாக்களுக்கு தடை விதித்தது பக்தர்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
எனவே இந்த ஆண்டாவது கண்டிப்பாக திருவிழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திக்கு விஜயமும், 24-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேர் திருவிழாவும் நடை பெற இருந்தது.
அதே போன்று அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் 26-ந் தேதி எதிர்சேவையும், 27-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்க இருந்தன. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக உள்ளதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போல் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பக்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது எல்லாம் அரசு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமல் தேர்தல் முடிந்த பிறகு திருவிழாக்களுக்கு தடை விதித்தது பக்தர்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
எனவே இந்த ஆண்டாவது கண்டிப்பாக திருவிழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த மாத சிவராத்திரி விரதம் தேன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் "சிவன்" சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.
அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள்புரிந்தார்.
தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை விரதத்தை மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்.

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.
நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் விழழ கொடி ஏற்றப்பட்டது.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று, நாளை முதல் கோவில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கோவில் வளாகத்துக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) வைணவ ஆச்சாரியார் பாஷ்யங்கார் உற்சவம் தொடங்கி 19 நாட்கள் நடக்கிறது. வருகிற 18-ந்தேதி சாத்துமுறை உற்சவம் நடக்கிறது.
திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வெங்கடாசலபதியை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார்.
இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே. அவரை, வடமாநிலங்களில் பாஷ்யங்கார் என்று அழைக்கின்றனர். பாஷ்யங்கார் எனப்படும் ராமானுஜர் ேஹாலி வைஷாக மாதத்தில் ஆருத்ரா நட்சத்திரத்தில் பிறந்தார்.
ராமானுஜர் திருமலைக்கு வந்து காடு திருத்தி, வீதி அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் இருந்து தான் திருமலை நகரம் தோன்றியது. இன்னும் திருமலையில் ராமானுஜர் வீதி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பெரிய கோவிலின் நடைமுறைகளை திருமலைக்கும் கொண்டு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார். அத்துடன் பல்வேறு திருப்பணிகளை செய்தார்.
ஆகையால் தான் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ராமானுஜரை போற்றி வருகிறது. அவரை போற்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலை, முதல் மணியோசைக்குப் பின் ராமானுஜர் தங்கத்திருச்சி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார்.
18-ந்தேதி இரவு 7 மணியில் இரவு 9.30 மணிவரை பாஷ்யங்கார் சாத்துமுறை உற்சவம் நடக்கிறது. அன்று நடக்கும் சகஸ்ர தீபலங்கார சேவைக்குப் பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார்கள். மற்றொரு தங்கத்திருச்சி பல்லக்கில் பாஷ்யங்கார் எழுந்தருளி உலா வருகிறார். விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்கிறார்கள்.

கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா? என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. அதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. அங்கும் கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி எதிர்சேவை, அழகர்ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் முதல் திருவிழாக்கள் வழக்கம் போல் நடத்தப்பட்டன.
எனவே இந்தாண்டு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நேற்று கொரோனா நோய் பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. இது மதுரை சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி இருந்த பக்தர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுபற்றி அறிந்ததும் பக்தர்கள் நேற்று மாலை பெருமளவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கொரோனாவால் கோவிலில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டால் அம்மனை பார்க்க முடியாது. எனவே தான் தரிசிக்க வந்தோம் என்றனர்.
இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று மாலை சித்திரை திருவிழா தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தெரிவிக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவிழா தொடங்க இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. எனவே பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு விதி விலக்கு அளித்து, இந்தாண்டு விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கினால், 22-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 23-ந் தேதி திக்கு விஜயமும், 24-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும் நடைபெற வேண்டும்.
அதே போன்று கள்ளழகர் ேகாவிலில் சித்திரை திருவிழா நிர்ணயித்த நாளில் தொடங்கும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், 27-ந் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.