என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே அமைந்து உள்ளது சூரியனார் கோவில். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது இந்த கோவில். சூரியனார்கோவில் என்ற இந்த கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமைந்து உள்ளது சிறப்பாகும்.

    தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு. சூரியன் சன்னதியில் நின்று தரிசிக்கும்போது குரு பகவானின் அருட்பார்வை ஒருசேர கிடைக்கும் ஒரே தலம். நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி கோவில்களில் மூலவராக இருந்து அருள் வழங்கும் தலம்.

    நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம். ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்து அருள்பாலிக்கும் தலம். நவகிரகங்களும் ஒரு சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

    இனி இக்கோவில் அமைந்த வரலாற்றை பார்ப்போம்.

    முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம். ஒருநாள் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரிடம் வந்து தனது வருங்காலம் குறித்து அறிவிக்கும்படி கேட்டார்.

    காலவ முனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். உடனே அந்த துறவி, காலவ முனிவரிடம், மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர், உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டா? எனக்கேட்டு நகைத்தார்.

    உடனே காலவ முனிவர் அந்த துறவியைப் பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி நான்தான் காலதேவன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார்.

    காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன் வினைப்பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து வாட்டம் அடைந்தார். காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள் அவரிடம் சோகத்துக்கான காரணம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், தமது வருங்கால நிலையை அவர்களிடம் எடுத்துரைத்தார்.

    அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள் காலவ முனிவரே! முன்வினை பயனை யூட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைப்பயனில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர். இதனையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களை தியானித்து கடுந்தவம் புரிந்தார்.

    தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன்பு நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவ நாயகர்கள், முனிவரே உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டனர்.

    காலவ முனிவர், நவநாயகர்களை நோக்கி தன்னை தொழுநோய் அணுகாதபடி வரம் தரவேண்டும் என்று வேண்டினார். அதற்கு நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.

    இந்த செய்தி பிரம்ம தேவருக்கு தெரிய வந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டு நவக்கிரகங்களை நோக்கி, நவக்கிரகங்களில் நீங்கள் தேவர்களாக இருந்தாலும் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

    ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் 9 பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்களும் அந்த தொழுநோய் துயர் அடைவீர்கள் என்று சாபமிட்டார்.

    சாபம் பெற்ற நவக்கிரகங்கள் பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தினை அறிந்து அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழையை பொறுத்து தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைகேட்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், நவக்கிரக நாயகர்களாகிய நீங்கள் எனது கட்டளையை மீறி நடந்ததால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.

    நீங்கள் பூலோகத்திற்கு சென்று காவிரி ஆற்றின் வடகரையில் தங்கியிருந்து தவம் புரியுங்கள். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் புரிய வேண்டும் என்று கூறினார். அதன்படி நவக்கிரகங்கள் 78 நாட்கள் தவம் புரிந்து 79-ம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர். அப்போது தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.

    பின்னர் பிராணநாதரை அணுகி வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதர், மங்களநாயகியுடன் நவநாயகர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் பிராணநாதர், நவநாயகர்களை நோக்கி நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு என தனி ஆலயம் உண்டாக்கி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மத்தியில் சூரியபகவான் கர்ப்பக்கிரகமும் அதைச் சுற்றி ஒரு பிரகாரமும், நாற்புறமும் உயரமான மதில்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோல் வினைதீர்த்த விநாயகர் கோவிலும், வடக்கு பிரகாரத்தில் தீர்த்தக்கிணறும் உள்ளன. சூரிய பகவானின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டி நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்று 7 பேருக்கும் தனித்தனி சிறு கோவில்கள் உள்ளன. சூரியனார்கோவில் தலத்தை அடைந்து மன்னர்களும், முனிவர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளதாக புராண வரலாறுகள் தெரிவிக்கிறது.

    சூரியனார் கோவிலின் பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சூரிய பகவான் காட்சி அருள்கிறார். இவருக்கு இடப்புறம் உஷா தேவியும், வலப்புறம் சாயா தேவியும் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறார்.

    சூரிய பகவானின் கருவறைக்கு முன்பு மகா மண்டபத்தில் குருபகவான் எழுந்தருளி இருப்பதுபோல கருவறைக்கு வெளியே தென்மேற்கில் சனீஸ் வரனும், தெற்கில் புதனும், தென்கிழக்கில் அங்காரகனும், கிழக்கில் சந்திரனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும் தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் ஏனைய எட்டு கிரக நாயகர்களும் எழுந்தருளி உள்ளனர் என்பது சிறப்பாகும்.

    கோவிலில் வழிபடும் முறை

    இந்த கோவிலில், கோல் வினை தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபடவேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும் தொடர்ந்து புதன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசை முறையில் வழிபாடுகள் ஆற்றி நிறைவாக தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும்.

    கோள்வினைதீர்த்த விநாயகர்

    பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணி எனும் வினை நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோள்களின் வினையை விநாயகர் தீர்த்து வைத்தால் இவருக்கு கோள்வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. இவ் விநாயகர் கோவில், பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.

    கோவிலின் அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
    துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.
    முக்கியமாக வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம்.

    துளசி சுற்றி தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.

    துளசி அருகில் செல்பவர்கள் மாமிசம் உட்கொள்ளக்கூடாது முக்கியமாகப் பெண்களின் தீட்டு, எச்சில் ஆகாது. வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியுடன் ஒரு புது காற்று பரவும், தரித்திரம் அகலும் மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வருவாள்.

    துளசியில் மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அனைத்து தேவதைகளும் குடிகொண்டு உள்ளார்கள். துளசியை மூன்று நாள்கள் பூஜையில் வைக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துவாதசியில் துளசியைப் பறிக்கக் கூடாது.

    விஷ்ணுவின் மனைவியாக பிருந்தா என்கிற துளசியை கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி தேவியை மணந்ததாக ஒரு ஐதீகம். அன்றைய தினத்துக்கு ‘பிருந்தாவன துவாதசி ‘ என்று வழிபடுவார்கள். கர்நாடகாவில், சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றிச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

    தென் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக வழிபடுவார்கள். துளசியை தினமும் வழிபட்டால் பில்லிசூனியம் அகலும், திருமணம் கைகூடும், மனக்குழப்பம் குறையும், சுப நிகழ்ச்சிகள் நிகழும், புதன் தோஷம், சத்ரு தொல்லை, பித்ரு தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் உங்களை விட்டு விலகும்.
    திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
    கோடை காலம் என்றாலே வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வேலூரை வெயிலூர் என்று அழைக்கிறார்கள். இந்தாண்டும் கோடை வெயிலின் கொடுமையை மக்கள் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பிப்ரவரி மாத இறுதியிலேயே 100 டிகிரியை எட்டியது. இதனால் வேலூர் மாநகரில் மதியவேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இரவிலும் அனல் காற்று வீசுவதால் தூங்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    ‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.
    புனித ரமலானுக்கு ‘ரபீஉல்குர்ஆன்’- ‘திருக்குர்ஆனின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. திருக்குர்ஆன் புனித ரமலான் மாதத்தில் தான் இறங்கியது.

    ‘உலகிலேயே சிறந்த மனிதர் யார் தெரியுமா?’. திருக்குர்ஆனை ஓதுபவர், அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர், அதன்படி நடப்பவர் என்பது நபி மொழியாகும்.

    ‘உங்களில் சிறந்தவர் திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: புகாரி)

    ‘திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளசிச்செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது; அதன் வாடையும் வெறுப்பானது. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர் ஆவார். அதன் சுவை நன்று; அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்படக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

    ‘எவர் ஒருவர் இரவில் திருக்குர்ஆனின் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் பொடு போக்கானவராக எழுதப்படமாட்டார்; ஐம்பது வசனங்களை ஓதுபவர் இறைதியானிப்பவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; நூறு வசனங்களை ஓதுபவர் இறைவழிபாடு செய்தவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார்; இருநூறு வசனங்களை ஓதுபவர் இறையச்சம் உள்ளவர்களில் ஒருவராக எழுதப்படுகிறார். முன்னூறு வசனங்களை ஓதுபவர் வெற்றியாளராகவும், 500 வசனங்களை ஓதுபவர் பெரும் முயற்சியாளராகவும், ஆயிரம் வசனங்களை ஓதுபவர் பெரும் தங்கக்குவியலை பெற்ற பாக்கியசாலியாகவும் எழுதப்படுகிறார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    திருக்குர்ஆன் ஓதத் தெரியாதவர் இத்தகைய நற்பாக்கியங்களை அடையமுடிய வில்லையே என ஏங்க வேண்டாம். ஓதுவதை செவிமடுத்தாலும் அதற்கும் நன்மையும், அந்தஸ்தும் உண்டு.

    ‘திருக்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை தான் ஓதாமல், பிறர் ஓதுவதை செவியுறுபவருக்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு பாவம் அழிக்கப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (நபிமொழி).

    ‘உங்களின் இல்லங்களை திருக்குர்ஆனை ஓதுவதைக் கொண்டு ஒளிமயமாக ஆக்குங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: லைஸ் பின் அபூசலீம் (ரலி), நபிமொழி)

    “நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது”. (திருக்குர்ஆன் 17:9)

    குர்ஆனை ஓதினால் மட்டுமே சத்தியமும், நேர்வழியும், பாக்கியமும் கிட்டிவிடாது. அதன்படி நடந்தால்தான் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

    “நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்” (திருக்குர்ஆன் 86:13).

    “நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடை யவர்களுக்கு நல்லுபதேசமாகும்” (திருக்குர் ஆன் 69:48).

    புனித ரமலான் மாதம் திருக்குர்ஆனின் வசந்த மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் திருக்குர்ஆனை ஓதி நன்மைகளை அடையவும், மேன்மைகளை பெறவும் முயல வேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    மோகனூரை அடுத்த மணப்பள்ளியில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி தினமும் சாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரசில் இருந்து விடுபட வேண்டியும் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப்படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் சிரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி
    மதுரையில் உள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக நடராஜர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில்தான் காட்சியளிப்பார். ஆனால் மதுரையில் உள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார்.

    மதுரையை ஆட்சி செய்த ராஜசேகர பாண்டியன் என்பவன், நடனம் கற்று வந்தான். ஒருமுறை இத்தல நடராஜரைப் பார்த்தவனுக்கு, ஒரு வருத்தம் உண்டானது. அவன் “இறைவா.. நான் நடனம் கற்கும்போதுதான், அதில் உள்ள கஷ்டத்தை அறிந்தேன். நீயோ காலம் காலமாக வலது கால் ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடி வருகிறாய். எனக்காக கால் மாறி ஆடக் கூடாதா?” என்று கேட்டான். தன் பக்தனுக்காக நடராஜர் இத்தலத்தில் கால் மாறி நடனம் புரிகிறார். பஞ்ச சபைகளில் இது, வெள்ளி சபை ஆகும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருமலை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி. 16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம், 17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி, 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி, 25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி.

    மேற்கண்ட உற்சவம் நடக்கிறது.
    செங்கல்பட்டு ஹயக்ரீவப் பெருமாள் ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது செட்டிபுண்ணியம் என்ற ஊர். இங்கு யோக ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார்.

    வெற்றிக்காக போராடுபவர்கள், குறிப்பாக மாணவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தங்களின் படிப்பு தொடர்பான பொருட்களை மூலவரின் காலடியில் வைத்து வாங்கிச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகிறார்கள்.

    இத்தலத்தில் இருக்கும் ராமன் சிலையில், அவரது கணுக்காலில் ஒரு ரட்சை (கயிறு) கட்டப்பட்டுள்ளது. தாடகை வதத்தின்போது, விசுவாமித்திர முனிவரால், இந்த கயிறு கட்டிவிடப்பட்டதாக தல புராணம் சொல்கிறது. செங்கல்பட்டில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
    ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக ஏற்படும் சிரமங்கள் அகல ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து செய்ய வேண்டி துர்க்கையை வழிபடும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக ஏற்படும் சிரமங்கள், பிரச்சனைகள் நீங்க துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. மேலும், சிக்கல்கள் தீர ஒவ்வொரு கிழமைகளிலும் துர்க்கை வழிபாடு செய்தால் வேண்டும். ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம்.

    ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
    பஞ்சாங்கத்தில் கூறப்படும் 27 விதமான யோகத்தில் ஏதேனும் ஒரு யோகத்தில் நாம் பிறந்திருப்போம். நாம் பிறந்த யோகம் நன்றாக இருந்தால், நமக்கு யோகமான வாழ்க்கை அமையும்.
    பஞ்சாங்கத்தில் கூறப்படும் 27 விதமான யோகத்தில் ஏதேனும் ஒரு யோகத்தில் நாம் பிறந்திருப்போம். நாம் பிறந்த யோகம் நன்றாக இருந்தால், நமக்கு யோகமான வாழ்க்கை அமையும்.

    விஷ்கம்ப நாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால், செல்வ வளம் பெற்றவர்களாக விளங்குவீர்கள். சுற்றத்தார் போற்றும் வாழ்வு உங்களுக்கு அமையும்.

    சவுபாக்கிய நாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால், அறிவு வளம், செல்வ வளம் பெற்றவராகவும், சகல சவுபாக்கியத்துடனும் வாழ்பவர்களாகவும் விளங்குவீர்கள்.

    விருத்திநாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களுக்கு தலைமைப் பதவிகள் உண்டு. அரசியல், மற்றும் பொதுநலத்தில் தலைமைப் பொறுப்புகள் வந்து சேரும். அமைச்சர், எம்.எல்.ஏ. போன்ற பொறுப்புகளும், சுயஜாதகத்தில் கிரகங்களின் பலத்தைப் பொறுத்தே வந்து சேரும்.
    நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும்.
    நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானால், நாளை அடிப்படையாக வைத்து வழிபாட்டை முன்னெடுக்க வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை செய்ய வேண்டும்.

    நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து இறைவனை வழிபட்டு வர வேண்டும். காரியங்களில் வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கின்றோம்.

    இதன் அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். ‘ஐந்திற்கு இரண்டு பழுதில்லை’ என்பார்கள். அதன்படி நாள், நட்சத்திரம் இரண்டும், நமக்கு அனுகூலமாக ஒன்று கூடும் நேரத்தில் செய்யும் வழிபாடு உடனடியாகப் பலன் தரும்.
    ×