என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
‘கோசம்’ என்பதற்கு ‘உறை’ என்றும், ‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள். மனித உடலில் இருக்கும் ஐந்து விஷயங்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.
பிரபஞ்சம் எனப்படும் இந்த உலகத்தில் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக பல மகான்கள் சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில்‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்’ என்ற வாக்கியம் உருவானது. வேதங்களை விளங்கிக்கொள்வதற்காக உருவானவையே உபநிடதங்கள் என்று சொல்லப்படுகிறது. உபநிடதங்கள் மனித உடலை, பகுத்துக் கூறுகின்றன. தைத்ரிய உபநிடதம் என்பதில், மனித உடல் பஞ்ச கோசங்களாக பிரித்து கூறப்பட்டுள்ளது. ‘கோசம்’ என்பதற்கு ‘உறை’ என்றும், ‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள். மனித உடலில் இருக்கும் ஐந்து விஷயங்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும்தான் ‘பஞ்ச கோசங்கள்’ என்கிறார்கள்.
அன்னமய கோசம்
‘அன்னம்’ என்பது உணவைக் குறிக்கும். கண்ணுக்கு புலப்படும் நமது உடலானது, உணவால் தோன்றி உணவால் வளர்கிறது. பின் உணவின் அடிப்படையாக இருக்கும் மண்ணில் சிதைந்து அழிகிறது. உடலுக்கும், வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவதை உணர்த்துவதே ‘அன்னமய கோசம்’ ஆகும்.
பிராணமய கோசம்
காற்று அனைத்து இடங்களிலும் உள்ளது. இது மனித உடலிலும் மூச்சுக் காற்றாக இருக்கிறது. இந்த காற்றின் இயக்கத்தினால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் சுதந்திரமாக இயங்குகின்றன. காற்றின் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள் ஆகியவை ‘பிராணமய கோசம்’ என்று சொல்லப்படுகின்றன.
மனோமய கோசம்
மனித உணர்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது, மனம். அந்த மனதின் பல்வேறு அடுக்குகள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவையே ‘மனோமய கோசம்’ என்று வகைப்படுத்தப்படுகின்றது.
விஞ்ஞானமய கோசம்
இதனை பகுத்தறிவு என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். எது சரி.. எது தவறு?, எதைச் செய்யலாம்.. எதைச் செய்யக்கூடாது? எது உண்மை.. எது பொய்? நிலையானது எது.. நிலையற்றது எது? போன்ற விவாதத்திற்கு உரிய விஷயங்களை மேற்கொள்வதுதான், நம்முடைய பகுத்தறிவும், சிந்தனைத் திறனும். அறிவுசார்ந்த இயல்புகளும், செயல்பாடுகளும் அடங்கிய இடமே, ‘விஞ்ஞானமய கோசம்’ எனப்படுகிறது.
ஆனந்தமய கோசம்
மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, ‘ஆனந்தமய கோசம்’ ஆகும். மற்ற நான்கு கோசங்களையும், நாம் உணரவோ, அறியவோ முடியும். ஆனால் ஆனந்தமய கோசம் என்பது நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையை உணர்வதும், அடைவதும்தான் ஆன்மிகத்தின் லட்சியமாகும். அந்த ஆனந்தத்தையே ‘பரப்பிரம்மம்’ (அடிப்படை மெய்பொருள்) என்கிறார்கள்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அனைத்து நிகழ்ச்சிகளும் கொரோனா வழிகாட்டுதல் படி ஏகாந்தமாக நடக்கிறது. 17-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
18-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன சேவை, 19-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 20-ந்தேதி காலை சிம்ம வாகன சேவை, இரவு முத்துப்பந்தல் வாகன சேவை, 21-ந்தேதி கல்ப விருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை, 22-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு சேவை, இரவு கருட சேவை.
23-ந்தேதி காலை அனுமந்த வாகன சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 24-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 25-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவை, 26-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கோவிந்தராஜசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

தஞ்சாவூர் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற 275 சிவாலங்களில், இது 38-வது திருத்தலம் ஆகும்.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார்.
தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, “உன் வேண்டுதல் பலிக்கும்” என்று அசரீரி கேட்டது.
அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில், ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பாணம் அதிக உயரம் கொண்டதாக காட்சி தருகிறது. இவரது சன்னிதிக்கு செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும், துவார பாலகிகள் போல வீற்றிருக்கின்றனர். இருவரும் கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதியின் கையில் வீணை காணப்படவில்லை.
அம்பாள் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு அம்மன்தான், வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அவளது திருப்பெயரால்தான் ஆலயம் வழங்கப்படுகிறது. அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவன்- அம்பாள் இருக்கும் ஆலயங்களில் திருக்கல்யாணம் என்பது காலை வேளையில் நடைபெறும். மதியம் கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் இரவு வேளையில்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பங்குனியில் நடைபெறும் ஆலய பிரம்மோற்சவத்தின் போது, இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும், சிவபெருமானின் இரண்டு கண்களாக விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை இரண்டும், ஈசனை குளிர்விப்பதற்காகவே இங்கு தீர்த்தங்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவனுக்கு இரண்டு தீர்த்தங்களின் நீரையும் சேர்த்துதான் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
எருக்கு இலையில் தயிர் சாதம்
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
நவக்கிரகங்களின் சாபம் போக்கிய ஈசன்
ஒரு முறை காலமா முனிவருக்கு ஏற்படவிருந்த நோயை, நவக்கிரகங்கள் தங்களின் சக்தியைக் கொண்டு தடுத்தன. எனவே அந்த நோய், நவக்கிரகங்களைத் தாக்கும்படி பிரம்மதேவன் சாபம் கொடுத்தார். இதை யடுத்து நவக்கிரகங்கள் அனைவரும், இந்த திருத்தலம் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங் களின் சாபத்தைப் போக்கிய இறைவனாகவும், பிராணநாதேஸ்வரர் திகழ்கிறார். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேஸ்வரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.

நம்முடைய பாவங்களே நமக்கும், இயேசுவுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலும் நாம் பாவத்தில் விழ முக்கிய காரணம், இருக்க வேண்டிய நேரத்தில், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போவதுதான்.
இன்றைய உலகில் பல போராட்டங்கள், வேதனைகளின் மத்தியில் வாழ்ந்து வரும் நாம், அனுதினமும் அவற்றில் இருந்து விடுதலை பெற இயேசுவிடம் வேண்டுகிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமது வேண்டுதலுக்கு விடை கிடைக்காத பட்சத்தில், அதற்கான காரணம் தெரியாமல் வருந்துகிறோம்.
ஆனால் எசாயா 59-ம் அதிகாரம் 1 மற்றும் 2-ம் வசனத்தில், “மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆம்.. நம்முடைய பாவங்களே நமக்கும், இயேசுவுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலும் நாம் பாவத்தில் விழ முக்கிய காரணம், இருக்க வேண்டிய நேரத்தில், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போவதுதான்.
2 சாமுவேல் புத்தகம் 11-ம் அதிகாரத்தில், ‘இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம்’ என்று கூறப்பட்டிருந்தாலும், தாவீது போர்க்களத்திற்கு செல்லாமல் யோவாபையும், பணியாளர்களையும் போருக்கு அனுப்பி வைத்தான். போர்க்களத்தில் இருக்க வேண்டிய மன்னன் உப்பரிகையில் உலாவியதால், பெண்ணின் மீது மோகம் கொண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தான்.
ஆதியாகமத்தை பார்க்கும் போது, ஆதாமின் அருகில் இருக்க வேண்டிய ஏவாள், அவனை விட்டு விலகி சென்றதால்தானே சாத்தானின் வலையில் விழுந்தாள். அவள் மட்டுமின்றி அவளோடு ஆதாமும், மனுக்குலம் முழுவதுமே ஏதேன் தோட்டத்தில் இறைவனின் அருகில் இருக்கும் வாய்ப்பை இழந்து தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.
இவ்வாறு விவிலியத்தில் பலரும் இறைவன் சித்தப்படி இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், தங்கள் விருப்பப்படி சென்றதால் தான் பாவத்தில் விழுந்தார்கள் அல்லது இறை பிரசன்னத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள்.
உதாரணமாய்.. வானதூதர்கள், கடவுளுக்கு கீழ் இருக்க விரும்பாமல், அவருடைய இடத்தை அடைய விரும்பியதால், அவர்கள் இறை பிரசன்னத்தில் இருந்து தள்ளப்பட்டார்கள். அன்று ஆண்டவர் நோவாவின் மூலம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையை ஏற்று மனம் திருந்தி, இறைவனின் எதிர்பார்ப்புப்படி பேழைக்குள் நுழையாமல் தங்கள் இடத்தில் பிடிவாதமாய் இருந்ததால்தான் நோவா குடும்பத்தையும், ஜோடியான விலங்குகளும், பறவைகளையும் தவிர மற்ற அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி அழிவிற்கு உள்ளானார்கள்.
மோசே, சீனாய் மலைக்கு சென்றபோது, இறைவனைத் தேடாமல் பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வழிபட்டதால் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரும்பாலான இஸ்ரவேல் மக்கள் அழிவிற்கு உள்ளாயினர். ஆண்டவரின் வார்த்தைப்படி நீனிவேக்கு போகாமல், தர்சீசுக்கு ஓட முயன்றதால்தான் யோனா மூன்றுநாள் திமிங்கிலத்தின் வயிற்றில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது மட்டும் அல்ல.. புதிய ஏற்பாட்டில் பேதுரு, கடவுள் மீது வைக்க வேண்டிய விசுவாசத்தை, கடல்நீரின் மீது காட்டியதால் மூழ்க நேரிட்டது. இறைவன் மீது விசுவாசத்தை வைக்காமல் தங்கள் மீது வைத்ததால்தான் சீடர்கள் பலர் தடுமாற நேர்ந்தது. இப்படி ஒன்றல்ல பல உதாரணங்கள் விவிலியத்தில் உள்ளன.
லாசரின் மரணத்திற்கு பிறகு மரியாள் இயேசுவிடம் வந்து “ஆண்டவரே.. நீர் இங்கு இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று கூறி அழுதாள். அதுபோல் நாமும் தாவீது மட்டும் இறைவனின் கட்டளைப்படி போர்க்களத்தில் இருந்திருந்தால்.. அன்று ஏவாள் மட்டும் ஆதாமை விட்டு விலகி இறைவன் தொடக்கூடாது, உண்ணக் கூடாது என்று கூறிய மரத்தின் அருகில் செல்லாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் இருந்திருந்தால்... இருந்திருந்தால்.. என்று கேட்டோமானால், ‘இறைவனின் பிரசன்னத்தை, ஆசிர்வாதத்தை யாரும் இழந்திருக்க மாட்டார்கள்’ என்ற பதில்தான் நமக்குக் கிடைக்கும்.
நம்மில் எத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில், சரியாக இருக்கிறோம்.
குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி தங்கள் இருவருக்குள் காட்ட வேண்டிய அன்பை இடம் தவறி காட்டுவதாலும், ஒருவரை ஒருவர் நம்பாததாலும், புரிந்து கொள்ளாததாலும் தான் பிரச்சினைகளும், பிரிவுகளும், தவறான உறவுகளும் ஏற்படுகின்றன.
படிக்கும் பிள்ளைகளின் தோல்விக்கு காரணம், புத்தகத்தின் முன் அமர்ந்திருக்க வேண்டிய நேரங்களில், விளையாட்டுகளிலும், பிற காரியங்களிலும் அதிக நேரத்தை செலவழிப்பதுதானே. இப்படி எத்தனை உதாரணங்கள் நம் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
‘மகனே.. மகளே.. நீ மட்டும் என்னுடைய அருகாமையை உணர்ந்தால், நான் உனக்கு போதித்து நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்’ என்ற கர்த்தரின் வார்த்தையை பற்றிக் கொண்டு நடப்போம். இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம். அவருடைய அருகாமையை எந்த நேரத்திலும் உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அப்படி நாம் வாழும் பட்சத்தில், இயேசு நம்முடைய ஜெபத்தைக் கேட்டு உடனடியாக பதில் அளிப்பார்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மே மாதம்) முழுவதும் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மே மாதம்) முழுவதும் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருகிற 8, 15, 22, 28-ந்தேதிகளில் சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா, 11-ந்தேதி அமாவாசை அன்று காலை 6.30 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம், அபிஷேகம்.
இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 17-ந்தேதி புனர்வாசு நட்சத்திரத்தையொட்டி காலை 11 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், மாலை 5.30 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா, 26-ந்தேதி பவுர்ணமியையொட்டி காலை 9 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், மாலை 5.30 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது. சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவகிரக யாகம், தனபூஜை நடந்து ருத்ர யாகம் நடந்தது.
மாலையில், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாகுதி நடந்து, 6 மணிக்கு மேல் மகா ருத்ர, மகா அபிஷேகம் நடைபெற்றது.

திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கநாதாஷ்டகத்தை தினமும் சொல்வதால் துன்பங்கள் பறந்தோடும்.
ஆநந்தரூபே நிஜபோதரூபே பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே
காவேரிதீரே கருணாவிலோலே மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே
லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப
வாஸே க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே
ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே
வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே
ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே
அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே
ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே
இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம் யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம்
ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்
(ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது)

பு.சங்கேந்தியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பு.சங்கேந்தி அய்யனார்புரம் கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.
நேற்று காலை 9 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
இரவு 8 மணிக்கு அழகு முத்துமாரியம்மன் சிங்க வாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருளினார். இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாக பகுதியில் ஊராட்சி மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவினர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளில் நம்பெருமாள் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது.
முதல் நாள் திருவிழாவில் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும் எழுந்தருளினார்.
விழாவின் 3-ம் நாளான நேற்று நம்பெருமாள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய எழுந்தருளினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
வருகிற 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இனாபா’- ‘இறைவனின் பக்கம் திரும்பும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இறைவனின் பக்கம் திரும்புவது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது.
1) இறைவன் தன்னை படைத்து பரிபாலிப்பவன் எனும் அடிப்படையில் படைப்பினங்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வு இன்றி, தங்களுக்கு பிரச்சினை வரும்போது இறைவன் பக்கமே திரும்பி, அவனை அழைக்கின்றனர். பிரச்சினை தீர்ந்ததும் அவனை மறந்து, அவனுக்கு மாறு செய்கின்றனர். இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 30:33)
2) அல்லாஹ் தான் நமது இறைவன் எனும் அடிப்படையில் அவன் பக்கம் அவனது நேசர்கள் திரும்புவது- அன்புள்ள அடிமையின் திரும்புதல் ஆகும்.
இத்தகைய திரும்புதலைத்தான் ரமலான் மாதம் இறையடியார்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இது முகத்தை மட்டுமே திருப்புவது ஆகாது. மாறாக இறைவனை நோக்கி உள்ளத்தை திருப்புவது.
‘ரமலான் மாதத்தில் பிறை 21 -ல் இருந்து 30 வரை இறையில்லத்தில் ஒருவர் இஃதிகாப் இருப்பது, அதாவது உடலை இறைவனுக்கு மட்டுமே சிறைப்படுத்தி வைப்பது போன்றதாகும்’ என இப்னுல் கய்யூம் (ரஹ்) கூறுகிறார்.
உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
இத்தகைய பண்புகளுடன் ஒவ்வொரு நபியும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
‘தாவூத் (அலை) தமது இறைவனிடம் மன்னிப்புக்கோரி குனிந்து விழுந்தவராக (அவன் பக்கம்) திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:24)
‘இன்னும் சுலைமான் (அலை) அவர்களைத் திட்டமாகச் சோதித்தோம்; அவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை போட்டோம்; ஆகவே, அவர் நம்மளவில் திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:34)
‘நிச்சயமாக இப்ராகீம் (அலை) சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக் கூடியவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 11:75)
‘மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை; அவனையே நான் சார்ந்துள்ளேன்; இன்னும் அவன் பக்கமே திரும்புகிறேன்’ என்று சுஅய்ப் (அலை) கூறினார். (திருக்குர்ஆன் 11:88)
‘அல்லாஹ்வே எனது இறைவன். அவனையே நான் சார்ந்துள்ளேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன், என நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக’ (திருக்குர்ஆன் 42:10)
எனவே, நாம் நமது வாழ்வில் எந்த நிலையிலும் இறைவனையே சார்ந்து இருந்து, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து நற்பேறுகளைப் பெறுவோம், ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர், நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மே மாதம் 4-ம் தேதியில் இருந்து மே மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
4-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
* தேய்பிறை அஷ்டமி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
5-ம் தேதி புதன் கிழமை :
* தேய்பிறை நவமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூசம், புனர்பூசம்
6-ம் தேதி வியாழக்கிழமை :
* தேய்பிறை தசமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- பூசம், ஆயில்யம்
7-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
8-ம் தேதி சனிக்கிழமை :
* இன்று கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
9-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
10-ம் தேதி திங்கள் கிழமை :
* மாதசிவராத்திரி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்