search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில்
    X
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில்

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 18-ந்தேதி தொடக்கம்

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அனைத்து நிகழ்ச்சிகளும் கொரோனா வழிகாட்டுதல் படி ஏகாந்தமாக நடக்கிறது. 17-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    18-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன சேவை, 19-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 20-ந்தேதி காலை சிம்ம வாகன சேவை, இரவு முத்துப்பந்தல் வாகன சேவை, 21-ந்தேதி கல்ப விருட்ச வாகன சேவை, இரவு சர்வ பூபால வாகன சேவை, 22-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு சேவை, இரவு கருட சேவை.

    23-ந்தேதி காலை அனுமந்த வாகன சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 24-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 25-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவை, 26-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கோவிந்தராஜசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
    Next Story
    ×