என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பக்தர்கள் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை ஒரு சிறிய கதையின் மூலமாக நாம் பார்க்கலாம்..
இறைவனை வழிபாடு செய்வதில், நைவேத்தியம் என்னும் படையலுக்கு முக்கிய இடம் உண்டு. இறைவனை வழிபடுபவர்கள் அனைவரும் தங்களின் வசதிக்கு ஏற்றபடி சிறிய அளவில் இருந்து பெரும் படையல் வரை போட்டு, நைவேத்தியம் செய்வார்கள். இதை சிலர், ‘நைவேத்தியம், படையல் என்ற பெயரில் இறைவன் முன்பாக உணவுகளை வைத்து விட்டு, பக்தர்கள்தான் அதைச் சாப்பிடுகிறார்கள். இறைவன் எங்கே சாப்பிடுகிறான்?’ என்று விதண்டாவாதமாக கேட்பதும் உண்டு. ஆன்மிகத்தின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கும் கூட, ‘அவர்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது?’ என்பதாகத்தான் தோன்றும்.
ஆனால் பக்தர்கள் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை ஒரு சிறிய கதையின் மூலமாக நாம் பார்க்கலாம்..
அது ஒரு மடாலயம். அதன் தலைவராக இருந்த குரு, மிகவும் அமைதியான ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய சீடர்கள், ஆன்மிக அறிவைப் பெறுவதற்காக சேர்ந்திருந்தனர். அதில் ஒரு சீடன், சமீபத்தில்தான் சேர்ந்திருந்தான். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவனது ஆர்வமும், அதற்காக அவன் கேட்கும் கேள்விகளும், குருவுக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு புண்ணிய நாளில் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தார்கள். அந்த வழிபாட்டின் முடிவில் குருவிடம் வந்த சீடன், “குருவே.. நாம் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால், நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக அந்த நைவேத்தியத்தை வழங்க முடியும்? கடவுள், நாம் படைக்கும் நைவேத்தியத்தை சாப்பிடுகிறார் என்றால், அது குறையவில்லையே?” என்று கேட்டான்.
ஆனால் அப்போது அவனுக்கு குரு பதில் சொல்லவில்லை. மாறாக, “ஆன்மிக வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பறையை தயார் செய்து, மற்ற சீடர்களை அமரச் செய். அதற்குள் நான் வந்துவிடுகிறேன்” என்றார்.
தன் கேள்விக்கு பதில் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், குருவின் சொல்லை தட்டக்கூடாது என்பதற்காக அவர் சொன்னதைச் செய்யச் சென்றுவிட்டான். ஆன்மிக வகுப்பு தொடங்கிவிட்டது. இறைவனை வழிபடுவதற்கான ஒரு மந்திரத்தை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்தார், குரு. அதை தங்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து, அனைத்து சீடர்களும் வாசித்தனர். பின்னர் மனப்பாடம் செய்யத் தொடங்கினர்.
இப்போது தன்னிடம் நைவேத்தியம் பற்றிய சந்தேகம் கேட்ட சீடனை, தன் அருகில் வரும்படி அழைத்தார், குரு.
அவனும் குருவின் அருகில் சென்று நின்றான். அவனிடம், “என் அன்புக்குரிய சீடனே.. இப்போது நான் கூறிய மந்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டாயா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த சீடன், “முழுமையாக என்னுடைய மனதில் உள்வாங்கிக் கொண்டேன் குருவே” என்றான்.
“எங்கே ஒரு முறை அந்த மந்திரத்தை சொல் பார்ப்போம்” என்று குரு கேட்க, கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்தியவன் கணீர் குரலில் அந்த மந்திரத்தை ஒப்புவித்து முடித்தான்.
குரு மென்மையான சிரிப்புடன், “நீ மந்திரத்தை சரியாக மனதில் நிறுத்தியதாக தெரியவில்லையே..” என்றார்.
பதறிப்போனான் சீடன். “குருவே.. நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் புத்தகத்தில் இருப்பதைப் போலவேதான், நான் இப்போது கூறினேன்” என்று கூறி, புத்தகத்தைக் காண்பித்தான்.
அதை கையில் வாங்கிய குரு, “இந்த புத்தகத்தில் இருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்துதான் உள்வாங்கினாய் என்றால், மந்திரம் புத்தகத்திலும் இருக்கிறதே. நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக்கொண்டாய் என்றால், புத்தகத்தில் அது இருக்கக் கூடாது அல்லவா?” என்றார்.
குருவின் கேள்வியில், அந்த சீடன் குழம்பிப் போனான்.
சிறிய புன்னகையுடன் குரு தொடர்ந்தார். “நீ கேட்ட நைவேத்திய கேள்விக்கு பதில் இங்கேதான் இருக்கிறது. கவனமாக கேள். புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம் (கண்ணுக்கு புலப்படும் உருவம்) ஆனது. ஆனால் அதில் இருந்து உள்வாங்கிய மந்திரம் உன்னுடைய மனதில் பதிந்து உன் நினைவில் சூட்சும வடிவில் (உருவமில்லாதது) இருக்கிறது. அது போலவே இறைவன், சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் ஸ்தூல வடிவமாக இருந்தாலும், அதை இறைவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின்னரும் புத்தகத்தில் உள்ள மந்திரம் அளவில் குறையாதது போலவே, இறைவன் உட்கொள்ளும் நைவேத்தியமும் அளவில் குறையாமல் இருக்கிறது. ஸ்தூலமாக இருக்கும் நாம், ஸ்தூலமாகவும்; சூட்சுமமாக இருக்கும் இறைவன், சூட்சுமமாகவும் நைவேத்தியத்தை சாப்பிடுகிறோம். இப்போது புரிந்ததா?” என்று முடித்தார், குரு.
தனக்கு அனைத்தும் அற்புதமாக விளங்கியதை சொல்லும் வகையில், குருவின் பாதம் பணிந்து வணங்கினான், சீடன்.

காசியில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலம், விஸ்வநாதர் கோவில் ஆகும். காசியை சிவபெருமானே உருவாக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்தக் கோவிலில் சாயங்காலம் நடைபெறும் பூஜையின் போது, தீபாராதனைக்கு முன்பாக 108 வில்வ இலைகளைக் கொண்டு, சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வார்கள்.
அந்த நூற்றி எட்டு வில்வ இலைகளிலும், சந்தனத்தைக் கொண்டு ‘ராமா’ என்று எழுதி, அதனையே அர்ச்சனை செய்கிறார்கள்.
ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக இப்படிச் செய்வதாக சொல்கிறார்கள்.
பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது.
பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது. அதேபோல் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக தங்கம், வெள்ளி பொருட்கள், தாலி முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் பக்தர்கள் பழனியாண்டவர் மீது வைத்துள்ள பக்திக்கு தங்கள் சொத்துகளையும் காணிக்கையாக பக்தர்கள் அளித்துள்ளனர். அந்த வகையில் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு காணிக்கைகளாக நிலங்கள், மண்டபங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளதை அறிய முடிகிறது. கோவிலுக்கும், சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காணிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

“நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்மன். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது.
“நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.

தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.
காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.
இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.
இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு
கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.
முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.
ஆலய முகவரி
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.
எப்படிப் போவது?
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

வைகாசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்தங்கள் உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடிப்பட்டி :
பொதுவாக சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. தற்போது வைகாசி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் உச்ச நிலையை அடைந்துள்ள போதிலும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவலுக்கு சுப நிகழ்ச்சிகளில் அலட்சியம் காட்டப்படுவதும் முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் என்பதால் அதனை சிறப்பாகக்கொண்டாடவே பலரும் விரும்புவர். ஆனால் தற்போதுள்ள சிக்கலான சூழலில் எளிமையான முறையில் திருமணங்களை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் திருமண வீட்டார் அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அரசு அறிவித்துள்ள முககவசம், சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நுழைவாயிலில் கண்டிப்பாக கிருமி நாசினி, முககவசங்கள் போன்றவற்றை வைத்திருங்கள். கண்டிப்பாக உணவுக்கூடத்தில் சமூக விலகலுடன் அமர்ந்து சாப்பிட வகை செய்யுங்கள். உணவு சாப்பிடும் முன் கை கழுவுவதற்கு சோப் அல்லது திரவ சோப் வையுங்கள். சமையல்காரர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் தொடர்ச்சியாக முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்துங்கள். ஏனென்றால் பெரும்பாலான விழாக்களில் உணவுக் கூடத்தில்தான் கொரோனா பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அதேநேரத்தில் திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்றினால் சிக்கலில் மாட்டுவதை தவிர்க்கலாம்.அதன்படி மிக நெருங்கிய உறவினர் தவிர்த்து பிறருடைய திருமணத்துக்கு செல்வதை தவிர்க்கலாம். திருமணம் நிகழுமிடத்துக்கு மாவட்ட, மாநில எல்லைகளை தாண்டி செல்ல வேண்டியதிருந்தால் கண்டிப்பாக இ-பதிவு செய்து கொள்ளுங்கள். திருமணத்துக்கு செல்லும் போது முடிந்தவரையில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிருங்கள்.
பயணத்தின் போது இ-பதிவு விவரம் மற்றும் திருமணப் பத்திரிகையை உடன் எடுத்துச் செல்லுங்கள். திருமணம் நடக்குமிடத்துக்கு சென்றதும் ஆர்வம் மிகுதியால் மற்றவரிடம் கைகுலுக்குவதோ, கட்டிப் பிடிப்பதோ செய்ய வேண்டாம். மற்றவர்களிடமிருந்து விலகியே இருங்கள். மண மேடைக்கு சென்று மணமக்களை சந்திக்கும் போது புகைப்படக்காரர் வற்புறுத்தலினால் முக கவசத்தை கழற்ற நேரிடும். அதுபோன்ற சூழலில் உடனடியாக முக கவசத்தை அணிந்திடுங்கள்.
முடிந்தால் போட்டோ எடுப்பதையே தவிர்ப்பது நல்லது. மேலும் புகைப்படக்காரரிடமோ மற்றவர்களிடமோ உங்கள் மொபைல் போனைக் கொடுத்து போட்டோ எடுக்கச் சொல்லாதீர்கள். யாரிடமும் போன் இரவல் வாங்கிப் பேசுவதோ கொடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். திருமணம் நடைபெறும் இடத்திலிருந்து அருகில் வீடுள்ளவர்களாக இருந்தால் முடிந்தவரை விருந்து உண்பதை தவிர்த்து வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள்.
தவிர்க்க முடியாத நிலையில் சாப்பிட நேரிட்டால் கண்டிப்பாக சோப் போட்டு கைகளைக் கழுவிய பிறகே சாப்பிடுங்கள். உணவருந்தும் இடத்தில் கண்டிப்பாக சமூக விலகலை வலியுறுத்துங்கள். தண்ணீரை வீட்டிலிருந்தே கொண்டு செல்வது நல்லது. மேலும் முடிந்தவரையில் திருமணம் முடிந்ததும் அதிக நேரம் அங்கே இருக்காமல் வீடு திரும்புவது நல்லது. கொரோனா பரவலால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டும் அலட்சியம் காட்டினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதும் பலரும் முன்பதிவு செய்திருந்த மண்டபங்களை ரத்து செய்து விட்டனர். இவ்வளவு பேர்தானே அதற்கு எதற்கு வீண் செலவு, வீட்டிலேயே சமாளிச்சுக்கலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் போதிய வசதிகளில்லாத நிலையில் வீடுகளில் நெருக்கடியாக நடத்தப்படும் திருமணங்கள் தொற்று பரவலை அதிகப்படுத்த கூடும். இதனால் அரசு விதித்த கட்டுப்பாடு பயனற்றுப் போகும் அபாயம் உள்ளது. எனவே நெருக்கடியான இடத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டல்களையும் அரசு வழங்க வேண்டும். குறைந்த நபர்களுடன் நடந்தாலும் மண்டபம் போன்ற விசாலமான இடங்களில் நடத்தப்படுவதே பாதுகாப்பானதாகும்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாவது நாளில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலையில் ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 7நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோவிந்தராஜசாமி வீதி உலாவந்தார்.
இரண்டாவது நாளான நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கல்யாணமண்டபத்தில் திருமஞ்சம் நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஹம்சவ வாகனத்தில் வீதி உலா நடந்தது.

ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
உலகில் இன்றைய நிலவரப்படி 14.4 கோடி ஆதரவற்றவர்கள் உள்ளனர். ஒவ்வொரு 14 நொடியிலும் ஒரு ஆதரவற்ற குழந்தை உருவாகுவதையும், 2 நிமிடத்திற்கு ஒரு ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு, போதிய ஊட்டச்சத்து இன்றி இருப்பதாகவும் ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாய்-தந்தை இல்லாத குழந்தைகள், பெற்ற பிள்ளைகளின் துணையின்றி தவிக்கும் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்கள் ஆகியோரே சமூகத்தால் ஆதரவற்றவர்கள், அநாதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் மகன்-மகள்கள், அதேபோல் பெற்ற குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுச் செல்லும் தாய்மார்களும் உள்ளனர்.
ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ‘அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மிகச்சிறந்தது ஆதரவற்றவர்களை அரவணைப்பதாகும்' என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வலியுறுத்தலாகும்.
ஆதரவற்றவர்களிடம் மிகச்சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் வலியுறுத்தல்கள் நீண்டுசெல்கின்றன. இந்த செயல்கள் அனைத்தும் இறைவணக்கமாக கருதப்படும் என்பது இஸ்லாத்தின் சிறப்பான பார்வையாகும். ஆதரவற்றவர்கள், அநாதைகள் ஆகியோருக்கு உதவுபவர்கள் சொர்க்கத்தில் கற்பூரம் கலந்த ஊற்று நீரை பருகுவார்கள் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
ஆதரவற்றவர்களை மனித சமூகம் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது. சாதாரணமாக யாசகம் கேட்டு வருபவர்களிடம்கூட முகத்தை திருப்பிக்கொள்வதும், ‘ஒன்றும் இல்லை போ’ என்று விரட்டுபவர்களும் தாம் மனிதர்களில் அதிகம். அதேநேரம் ஆதரவற்றவர்களை அரவணைக்க ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
நமது குடும்பத்தில், உற்றார்-உறவினர்களில் ஆதரவற்றவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நமது தாய்-தந்தையாக, சகோதர-சகோதரியாக, பெற்ற பிள்ளையாக கருதி அவர்களை பராமரித்து வர வேண்டும். அந்த வீட்டைத்தான் இறைவனும் விரும்புகிறான். நபிகள் நாயகம் சொல்கிறார்கள் ‘ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீய முறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு’ என்று.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நானும் அநாதைகளின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்: புகாரி).
நபிகளாரை உயிருக்குமேலாக நேசிப்பவர்கள் அவர் அருகில் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் ஆதரவற்றவர்களை அரவணைத்து செல்வது அவசியமாகும்.
சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் ஆதரவற்றவர்களையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துவதோ கூடாது. அப்படி நடந்துகொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என இறைவன் திருக்குர்ஆனில் கண்டிக்கிறான். மறுமையை நம்பாதவர் இறைவனை நம்பாதவர் போலாவார். ஆதரவற்றவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் இறை மறுப்புக்கு உண்டான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே இறைவனின் செய்தி.
‘நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையாக்க விரும்பினால் ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் தலையை கருணையோடு நீவி விடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம். ஆம், இவ்வாறு அனைவரும் நடந்துகொண்டால் இதயம் மென்மையாவது மட்டுமல்ல இறைவனின் அருளும் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- வி. களத்தூர் பாரூக்

ராமபிரான் ஆலயம் என்பதாலும் வரலாறு சிறப்பு பெற்ற இடமாக விளங்குவதால் இதனை சுற்றுலாதலமாக அறிவித்துள்ள மத்திய, மாநில அரசுகள் இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொண்டி :
ராமபிரான் தம்பி லெட்சுமணனோடு சீதாதேவியை தேடி இலங்கைக்கு செல்லும் வழியில் தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானத்தில் கடலில் நீராடி அவரது தந்தை தசரதனுக்கு தில தர்ப்பணம் கொடுத்து சிவபூஜை செய்து வழிபட்டு உள்ளார்.
இங்கு இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இடையன் வயல் எனும் இடத்தில் அமைந்துள்ளது ராமர் பாதம்கோவில். வருணனிடம் ராமர் தனது நினைவாக பாதங்களை வைத்து பூஜை செய்யுமாறு வரம் அளித்ததை தொடர்ந்து இங்கு கோவில் கட்டி வழிபட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள ராமர் பாதம் ஆலயத்தை பராமரித்து இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
ராமபிரான் ஆலயம் என்பதாலும் வரலாறு சிறப்பு பெற்ற இடமாக விளங்குவதால் இதனை சுற்றுலாதலமாக அறிவித்துள்ள மத்திய, மாநில அரசுகள் இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இங்கு பயணியர் விடுதி, சமுதாய கூடம், அலங்கார வளைவு, அங்கார சாலைகள், கழிப்பறை வசதி, பூங்கா, சுற்றுச்சுவர், ஆழ்குழாய், குடிநீர் வசதி, சிதிலமடைந்த கோவில் சீரமைப்பு மற்றும் புதிய கோவில் கட்டுதல், சுற்றியுள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு படித்துறை, முள்வேலி அமைத்தல், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா தலம்
இதற்காக மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புல்லக் கடம்பன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெயர்பலகை வைக்கப்பட்டு இங்கு மண்டி கிடந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து புல்லக்கடம்பன் ஊராட்சி மன்ற தலைவர் மாதவி கண்ணன் கூறியதாவது:-வரலாற்று சிறப்பு பெற்ற இடையன் வயல் ராமர் பாதம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் இங்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தினமும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்பாடு
சுமார் 16.16 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர்பாத கோவில், விநாயகர், சுப்பிரமணியர், கஜலெட்சுமி ஆலயங்கள், மன்னர்கள் தங்கும் விடுதி, 4 குளங்கள், சுரங்கப்பாதை போன்ற பல்வேறு அம்சங்களும் இங்கு உள்ளது. கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த உடன் ராமேசுவரம் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இங்கு இருந்த கோவில்கள், கல்வெட்டுகள் போன்ற பல வரலாற்று தொடர்புடைய சின்னங்கள் மண்ணில் புதைந்துள்ளன. எனவே இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என மத்தியஅரசு, பிரதமர் மற்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருமண தோஷம் இருப்பவர்களுக்கு என்ன செய்தாலும் திருமணம் தடை பட்டுக்கொண்டே போகும். இவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று காலை கோவில் வளாகத்திலேயே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இதில் வருகிற 25-ந் தேதி பொங்கல் திருவிழாவும், 26-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழாவும், 27-ந் தேதி தேரோட்டமும் கோவில் வளாகத்தின் உள்ளேயே நடைபெறுகிறது. 29-ந் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
கொரோனா தொற்றால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாளான இன்று மலையப்பசாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இரண்டாவது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) அஸ்வ வாகனத்திலும், 3-வது நாளான சனிக்கிழமை கருட வாகனத்திலும் வீதி உலாவருகிறார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
திருக்கல்யாண உற்சவம் நடக்கும் 3 நாட்களும் நிகழ்ச்சி நேரத்தில் மற்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.