என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
‘சௌபாக்கியம்’ என்பது, நல்ல கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளும், எல்லா வகையான செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ்வதே ஆகும். அத்தகைய நிறை வாழ்வு வாழும் பாக்கியத்தைத் தரும் இந்த விரதத்தை பற்றி பார்க்கலாம்.
அன்னை பார்வதி தேவியைக் குறித்துச் செய்யப்படும் ஒரு விரதமே, ‘சௌபாக்கிய சுந்தரி விரதம்’. மிகப் பழங்காலத்தில் அனுசரிக்கப்பட்டு வந்த விரதங்களுள் ஒன்று இது. ஒரு பெண்ணை வாழ்த்தும் போது, ‘சௌபாக்கியவதியாக இரு’ என்று வாழ்த்துவது வழக்கம்.
‘சௌபாக்கியம்’ என்பது, நல்ல கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளும், எல்லா வகையான செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ்வதே ஆகும். அத்தகைய நிறை வாழ்வு வாழும் பாக்கியத்தைத் தரும் இந்த விரத பூஜையில், அன்னை பார்வதி தேவியை, ‘சௌபாக்கிய சுந்தரி’ என்னும் திருநாமத்தால், சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த விரதம் இருப்பதால், பார்வதி தேவி மனமகிழ்ந்து, எல்லா நலன்களும் அருள்வாள். வாழ்வில் தோன்றும் எல்லா விதமான இன்னல்களையும் நீக்கும் மகிமை பொருந்திய விரதம் இது. இதை முறையாகக் கடைபிடிப்போரின் சகல தோஷங்களும் நீங்கி, நலம் பெருகும். இந்த விரதம் அனுசரிப்பது காலமாற்றத்தினால் குறைந்து விட்ட போதிலும், சில பரிகார காரணங்களுக்காக அனுசரிக்கப் படுகின்றது.
குறிப்பாக, திருமணத் தடை விலகவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த விரதம் அனுசரிப்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும். அங்காரக தோஷம் இருக்கும் ஜாதகர்கள், இந்த விரதத்தை தோஷ நிவர்த்திக்காக அனுசரிக்கலாம்.

கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்கள் மிகுந்த யோகமான வாழ்வை வாழ்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் ஆறாவது ராசியாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசியை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். இயற்கையிலேயே சிறந்த அறிவாற்றலும், பல கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது அவசியம்.
நவக்கிரகங்களில் புதன் பகவானுக்குரிய கோயிலாக மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபடுவது புதன் பகவானின் நல்லருளை உங்களுக்குப் பெற்றுத் தரும். புதன் கிழமைகள் தோறும் பச்சை நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு யோகங்களை ஏற்படுத்தும். விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் உங்கள் தாய்மாமன்களிடம் ஆசீர்வாதம் பெறுவது கன்னி ராசியின் புதன் கிரக தோஷங்களை போக்கும்.
ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாள் மற்றும் தாயாருக்கு பச்சை நிற ஆடைகளை சாற்றி வேண்டுவது, உங்களுக்கு மிகுதியான அதிர்ஷ்டங்களை நிச்சயமாக ஏற்படுத்தும் ஒரு பரிகாரமாக இருக்கிறது. இதே போன்று வளர்பிறை புதன் கிழமைகளில் உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் வழங்குவது, கன்னி ராசியின் தோஷங்களை போக்கி நன்மைகளை ஏற்படுத்தும் மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம்.
நட்சத்திர மண்டலத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம்; மற்றொன்று திருமாலுக்கானது.
‘திருவாதிரை’ நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இதனால் தான் இந்த நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்படுகின்றது.
எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவனேசன், சிவப்பிரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண்களுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

சோமாசிமாற நாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சிறந்த சிவபக்தரான இவர், வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார்.
சோமாசிமாற நாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சிறந்த சிவபக்தரான இவர், வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். ஒரு முறை ‘நாம் செய்யும் வேள்வியில் தியாகராஜ பெருமானும் வந்திருந்து அருள்புரிந்தால் எப்படி இருக்கும்?’ என்ற எண்ணம், சோமாசிமாற நாயனாருக்கு உதித்தது.
அதை செயல்படுத்த என்ன செய்வது என்று யோசித்தார். இறைவனோடு தோழரைப் போல பழகும் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார், சோமாசிமாற நாயனார். “சுந்தரமூர்த்தி பெருமானே.. நான் ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்கு தியாகராஜப் பெருமானை தாங்கள் அழைத்து வர வேண்டும்” என்றார்.
அதற்கு இசைவு தெரிவித்த சுந்தரர், சோமாசிமாறருடைய விருப்பம் பற்றி, தியாகராஜப் பெருமானிடம் எடுத்துரைத்தார். பக்தனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தியாகராஜப் பெருமான், ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
“எனது பக்தனான மாறனின் வேள்விக்கு நான் நிச்சயமாக வருகிறேன். ஆனால் நான் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவேன். அவன்தான் என்னை கண்டுகொள்ள வேண்டும்” என்றார். சுந்தரர் மனம் மகிழ்ந்து, தியாகராஜப் பெருமான் சொன்ன நிபந்தனையை அப்படியே சோமாசிமாறரிடம் கூறிவிட்டார்.
சோமாசிமாறர் மனம் மகிழ்ந்தார். வேள்விக்கான நாள் வந்து விட்டது. ‘இதுவரை யாரும் இப்படியொரு வேள்வியை செய்ததில்லை’ என்று சொல்லும் விதமாக வேள்விக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், சோமாசிமாறர். பல நாட்களாக அவருக்கு பசியே மறந்து போயிருந்தது. ‘இறைவன் தன் வேள்விக்கு நேரில் வரப்போகிறார். அவர் எப்படி வரப்போகிறார்?’ என்ற ஆவல் அவரை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்திருந்தது.
மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு, பல நூறு வேதவல்லுனர்கள் வந்தமர்ந்து மந்திரம் சொல்லி வேள்வியைத் தொடங்கினர். ‘இறைவன் எப்போது வேண்டுமானாலும் வருவார்’ என்ற பேராவல் சோமாசிமாறரை ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்கவிடாமல் செய்தது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக வேள்விச்சாலையை நோக்கி ஒரு பெருங்கூட்டம் வந்தது.
பறை ஒலியும், எக்காளமும் முழங்க வந்த அந்தக்கூட்டத்தின் நடுவே, திடகாத்திரமான ஒரு இளைஞன் தென்பட்டான். வெட்டியான் கோலத்தில் இருந்த அந்த இளைஞன், தன்னுடைய தோளில் இறந்துபோன கன்றினை சுமந்திருந்தான். அவனது இடுப்பு பகுதியில் பறையும், ஒரு கரத்தில் குச்சியும், மறு கரத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட 4 நாய்களையும் பிடித்தவாறு இருந்தான். அவன் அருகில் இருந்த பெண், கள் பானையை தலையில் சுமந்திருந்தாள். காதைப் பிளக்கும் பறை ஒலியோடு வந்த அந்தப் பெருக்கூட்டத்தைப் பார்த்து, யாகசாலையில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர். சோமாசி மாறர் கூட, ‘இந்தக்கூட்டத்தால் யாகம் தடைபட்டு விடுமோ’ என்று அஞ்சினார். எந்த தடையும் இன்றி யாகம் நடைபெற வேண்டும் என்று அங்கிருந்த விநாயகரை வேண்டினார்.
அப்போது விநாயகர், ‘இவர்தான் பரம்பொருள்’ என்பதுபோல் செய்கை செய்தார்.
அப்போதுதான் சோமாசிமாறருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. ‘நான் எந்த உருவத்திலும் வருவேன்’ என்று சொன்ன இறைவன், இந்த உருவத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்ததும், ஓடிச் சென்று வெட்டியான் உருவத்தில் இருந்த சிவபெருமானின் காலில்போய் விழுந்தார். பின்னர் இறைவனுக்கு வேள்விக்கான அவிர்பாகத்தை வழங்கி ஆசிபெற்றார். வெட்டியான் உருவத்தில் இருந்த தியாகராஜப் பெருமான், தம்பதி சமேதராக சோமாசிமாறருக்கு காட்சி தந்து மறைந்தார்.

நல்லவர்களுடன் நல்ல விஷயங்களைப் பேசி உறவாடுவதால் கிடைக்கும் புண்ணியம், தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறப்பானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
கவுசிகன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஸ்வாமித்திரர், ஆரம்பத்தில் மன்னனாக இருந்து பின்னர் தன்னுடைய கடுமையான தவ வலிமையால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர். வசிஷ்டருக்கும், இவருக்கும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட மோதலே, மன்னனாக இருந்த கவுசிகனை, விஸ்வாமித்திர மகரிஷியாக மாற்றியது. அதன்பிறகு வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் நட்புடனேயே பழகி வந்தனர்.
அப்படி ஒரு காலகட்டத்தில் விஸ்வாமித்திரரை பார்க்க, வசிஷ்டர் வந்திருந்தார். அவர்கள் இருவரும் பல மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் விடைபெறும் நேரத்தில் விஸ்வாமித்திரர், வசிஷ்டருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க நினைத்தார். அதனால், தான் ஆயிரம் ஆண்டுகளாக செய்து வந்த தவத்தின் பலனை எல்லாம் வசிஷ்டருக்கு அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்றிருந்தார், விஸ்வாமித்திரர். வசிஷ்டர் அவரை அன்புடன் உபசரித்து விருந்து படைத்தார். அவரோடு பல மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் புண்ணியம் தரும் விஷயங்களை மட்டுமே இருவரும் பேசினார்கள். விடைபெறும் சமயத்தில், விஸ்வாமித்திரருக்கு பரிசளிக்க விரும்பிய வசிஷ்டர், “நாம் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்த நல்ல விஷயங்களால் ஏற்பட்ட புண்ணியத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் புன்னகையை இழந்தது. அவரது முக மாற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொண்ட வசிஷ்டர், “நீங்கள் எனக்கு ஆயிரம் ஆண்டுகளாக செய்த தவத்தின் பலனை அளித்தீர்கள். ஆனால் நானோ, இந்த அரை நாளில் நல்ல விஷயங்கள் பற்றி பேசியதால் கிடைத்த புண்ணியத்தை கொடுத்தேன். இந்த இரண்டும் எப்படி சமமாகும் என்றுதானே நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். ‘ஆம்’ என்பது போல தலையசைத்தார், விஸ்வாமித்திரர்.
“நாம் இருவரும் பகிர்ந்துகொண்ட பலன்களில், எது சிறந்தது என்பதை பிரம்மதேவனிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்” என்றபடி, விஸ்வாமித்திரரை அழைத்துக் கொண்டு சத்தியலோகம் வந்தார், வசிஷ்டர்.
அங்கு பிரம்மனிடம் தங்களின் பிரச்சினைக்கான தீர்வைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த பிரம்மன், “இந்த விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. நீங்கள் இருவரும் விஷ்ணுவிடம் முறையிடுங்கள்” என்று கூறிவிட்டார்.
இதைடுத்து மகா முனிவர்கள் இருவரும் விஷ்ணுவிடம் சென்று, தங்களின் சந்தேகத்திற்கான தீர்வை கேட்டனர். மகாவிஷ்ணுவோ, “என்னை விட சிவனுக்குத் தான், தவ வாழ்வில் அதிக அனுபவம் இருக்கிறது. எனவே அவரிடம் கேட்டால் உண்மை விளங்கும்” என்று அனுப்பிவைத்துவிட்டார்.
இருவரும் இப்போது கயிலாயத்தில் வீற்றிருந்த ஈசனின் முன்பாக வந்து நின்றனர். அவர்களின் பிரச்சினையைக் கேட்ட சிவனும், “உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள்” என்று சொல்லிவிட்டு, தவத்தில் ஆழ்ந்தார்.
பாதாளலோகம் வந்த வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனிடம் எடுத்துக்கூறி, தீர்வு கேட்டனர். “இந்த விஷயத்தில் யோசித்துதான் பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த பூமி பந்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். பூமியை என்னைப் போல் தலையில் சுமக்க உங்களால் இயலாது. எனவே உங்களின் சக்தியை பயன்படுத்தி இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள்” என்றார், ஆதிசேஷன்.
உடனே விஸ்வாமித்திரர், “நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும்” என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.
அடுத்ததாக வசிஷ்டர், “அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தைக் கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்” என்றார்.
இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி மேலெழும்பி, அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் தன் தலை மீது வைத்துக்கொண்டு, “இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது. போய் வாருங்கள்” என்றார்.
இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ‘எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லாமல், போகச் சொன்னால் எப்படி?’ என்பது போல் ஆதிசேஷனைப் பார்த்தனர். அவர்களின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட ஆதிசேஷன், “உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவ சக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?. நல்லவர்களுடன் நல்ல விஷயங்களைப் பேசி உறவாடுவதால் கிடைக்கும் புண்ணியம், தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறப்பானது” என்றார் ஆதிசேஷன்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைவார். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில், அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.
விழாவின் 7-ம் நாளான்று (24-ந்தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம்நாள் (26-ந்தேதி) அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவது, தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருள்வது சிறப்பம்சமாகும்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.

பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது.
திருப்பதி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் முழு பொது முடக்கம், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தங்கள் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனத்தில் வந்த நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட், நன்கொடையாளர்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தர்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர்.
ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் காலை 9 மணிக்கு பின்னர் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கொரோனா விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே.
மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்று இயேசு கிறிஸ்து போதித்தார். நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுத்த அவர், உண்மையை நிலைநாட்ட துன்புறவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.
பொதுவான சந்தேகம்
“மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்கா 12:49) என்றும், “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத்தேயு 10:34) என்றும் இயேசு போதித்தார். “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியதால், ‘கண்ணுக்கு கண்’ போன்ற பழைய ஏற்பாட்டு சட்டங்களை அவர் ஆதரித்தார். ஆனால், அவரது உண்மை முகத்தை மறைத்து, அவர் அன்பை போதித்ததாக கிறிஸ்தவர்கள் கதை அளக்கின்றனர் என்று ஒரு பிரிவினர் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.
"மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்."
சட்டத் தெளிவு
“‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38-39) “‘உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” (மத்தேயு 5:43-45) “நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டு கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” (மாற்கு 7:13) என்று இயேசு கண்டிக்கிறார். இவ்வாறு, மனித விருப்பத்துக்கு ஏற்ப வளைக்கப்பட்ட சட்டங்களுக்கு பதிலாக, மனிதகுல நலனுக்கான கடவுளின் சட்டங்களை இயேசு தெளிவாக போதித்தார்.
நிறைவேற்றவே
“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே. ஆனால், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் மறைநூல் பகுதிகளைக் குறித்தே இயேசு கூறினார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” (லூக்கா 24:44) என்று உயிர்த்த இயேசு நினைவூட்டியதாக நற்செய்தியில் காண்கிறோம். ஆகவே, இயேசுவின் வாழ்வும் போதனைகளுமே திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவு செய்கின்றன. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக மன்றாடிய இயேசு, அன்பையே போதித்தார் என்று உறுதியாக கூற முடியும்.
தீயும் வாளும்
“உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்” (யோவான் 18:37) என்ற இயேசுவின் வார்த்தைகளில், “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்” (லூக்கா 12:49) என்று அவர் கூறியதன் பொருளை உணர முடிகிறது. அதாவது கடவுளைப் பற்றிய உண்மையை அறியும் ஆர்வத்தையே, தீ என்று உருவகமாக இயேசு குறிப்பிடுகிறார். உண்மையை ஏற்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே பிளவு ஏற்படும் என்பதை வாள் என்ற உருவகத்தால் இயேசு விளக்குவதைக் காண்கிறோம்: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.” (மத்தேயு 10:34-37) தம்மைப் பின்பற்றுவோர் அனைவரும் துன்பத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போதித்த ஆண்டவர் இயேசுவை அன்பின் வடிவாக மட்டுமே பார்க்க முடியும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் அருள்பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் பக்தர்களின்றி துவங்கியது.
வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றபட்டு, மலர்சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26 அன்று நிறைவடைகிறது.

சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களைக் கொண்டவர். நம்முடைய பயத்தையெல்லாம் போக்குபவர் என்பதால் பைரவர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.
ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம் |
டக்கா சூல கபால பாசகதரம்
ரக்ஷாகராம் பைரவம் ||
நிர்வாணம் ஸுநவாஹனம்
த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||
இதன் கருத்து சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத்
திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும்,
பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக்
கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்குத்
தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையும் மாலையும் சொல்லிவரலாம். அதேபோல
ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" என்னும் பைரவ காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம்.
பைரவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே செல்லும்போது வழியில் பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி நாளை கொண்டாடப்படுகிறது. எனவே நாளை குறைந்தபட்சம் சிவப்பு நிற மலர்களையேனும் பைரவருக்கு சாத்தி
சகல நன்மைகளையும் பெறலாம்.

தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை-நாகை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.
சித்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
கோவிலில் உள்ள சித்தி விநாயகர் வெள்ளி கவசத்தில்(தங்க முலாம் பூசப்பட்டுள்ளது) பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
லட்சுமி குபேரர் சன்னதியை படத்தில் காணலாம்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.
1991-ம் ஆண்டு முதன் முதலில் இந்த கோவில் ஒரு சிறிய கொட்டகையில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கோவிலை சுற்றி பல்வேறு சாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டன.
தற்போது இங்கு சித்தி விநாயகர், கல்யாண வெங்கடேச பெருமாள், லட்சுமி குபேரர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், லட்சுமி ஹயக்ரீவர், காளிங்க நர்த்தனார், லட்சுமி நரசிம்மர் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாலட்சுமி ஆகிய சாமிகளுக்கும் மற்றும் அனைத்து பரிகார தலங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்து உள்ளன.
தொடக்கத்தில் சிறிய கொட்டகையில் விநாயகர் கோவில் அமைந்து இருந்தாலும் ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் முக்கிய விழாக்களின் போதும் இந்த கோவிலில் ஒவ்வொரு சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஜோதி நகர். ராதாகிருஷ்ணன் நகர். அழகரசன் நகர், மருதுபாண்டியர் நகர், அரி நகர். ரம்யா நகர், மருது நகர், விக்டோரியா நகர், கவுதம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்து இருக்கும்.
திருமண தடை நீக்கும் தலம்
இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் விழா, கந்த சஷ்டி விழா, நவராத்திரி விழா, விநாயகர் சதுர்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா, சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி விழா, குருப்பெயர்ச்சி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் இங்குள்ள தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, ரோகிணி, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சுவாதி, அமாவாசை, திருவோணம் ஆகியவை இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானவை ஆகும்.
ஒவ்வொரு அமாவாசையன்றும் குபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஐப்பசி மாத அமாவாசை அன்று சிறப்பு யாகம் நடத்தப்படும்.
நிகழ்ச்சி தகவல்கள்
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அங்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்டு முழுவதும் என்னென்ன மாதம் மற்றும் கிழமைகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
புனித நீர் வைபவம்
இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தபோது காவிரியில் புனித நீர் எடுத்து வருவதற்காக சென்றனர். முதலில் காவிரி பாலம் அருகே புனிதநீர் எடுப்பது என முடிவு செய்தனர். பின்னர் புஷ்ய மண்டப படித்துறைக்கு சென்று அங்கு புனித நீர் எடுக்கலாம் என முடிவு செய்து அங்கு சென்றனர்.
அங்கு சென்று புனிதநீர் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக்கொண்டிருந்த திருவையாறு கோவில் யானை திடீரென திரும்பி புனித நீர் எடுக்க சென்றவர்கள் மீது தும்பிக்கையால் நீரை தெளித்து உள்ளது. புனிதநீர் எடுப்பதற்காக சென்றவர்கள் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு வியந்தனர். குடமுழுக்கு விழாவை விநாயகரே வந்து வாழ்த்தியதாக இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.
பெருமாள்-ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு கோவிலுக்குள் விநாயகர் புறப்பாடு நடைபெறும். இதேபோல் கிருத்திகை அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அன்று மாலையில் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலையில் கோவிலுக்குள் பெருமாள் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள காரியசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். இதுபோல் சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
ராகு-கேது ேதாஷ நிவர்த்தி பெற சிறப்பு பிரார்த்தனை
இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).
ரமலான் மாதம் புனிதமானது என்று அழைக்கப்படுவதற்கு காரணம்- அந்த நாட்களில் பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு வைத்து நற்செயல்களை செய்வதால் மட்டுமல்ல. அந்த மாதத்தில் தான் புனிதமிகு அருள்மறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.
“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (திருக்குர்ஆன் 2:185).
மனித குலம் பெற்ற மாபெரும் பாக்கியம் திருக்குர்ஆன் என்பதை பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
“அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அலைஹிவஸல்லாம் மூலமாக நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய இதுதான் வேத நூல், இதில் சந்தேகமே இல்லை. இறையச்சம் உடையவர்களுக்கு இது நேரான வழியை காட்டும்”. (திருக்குர்ஆன் 2:1-2)
“(நபியே) அல்லாஹ்வே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் (திருக்குர்ஆனையும்) இறக்கியுள்ளான். (திருக்குர்ஆன் 3:3,4)
“இது (திருக்குர்ஆன்) உலக மாந்தர் அனைவருக்கும் நல் உபதேசமே ஆகும்”. (திருக்குர்ஆன் 6:90)
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).
திருக்குர்ஆன் அருளப்பட்டது ஒரு நாட்டினருக்காகவோ, ஒரு மதத்தினருக்காகவோ, ஒரு சாராருக்காகவோ அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத்தான் அருளப்பட்டது. இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அத்தனை உயிர்களும் உலகில் மேம்பட்டு வாழ சொல்லப்பட்ட நன்னெறி வாழ்வியல் தத்துவங்கள் தான்.
‘இறைவன் ஒருவனே’ என்பது இதன் அடிப்படை. ஆனால் அதையும் தாண்டி சொல்லப்பட்ட மற்றவை எல்லாமே மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளின் தீர்வாக தான் அமைந்திருக்கின்றது.
மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், சகோதரர்கள் என்று சமத்துவத்தையும், பெண்ணினத்தின் உயர்வையும், அதன் விடுதலையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் வலியுறுத்தியது. பக்கத்து வீட்டாரின் உரிமைகள், உறவுகளோடு மனிதர்களின் ஈடுபாடு, வணிகங்களில், தொழில்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியாயம், அனாதை-ஏழைகளை அரவணைக்க கூடிய அன்பு... என்று எல்லா விஷயங்களிலும் உள்ள நடைமுறைகள், நெறிமுறைகளை திருக்குர்ஆன் விளக்குகிறது.
இறைவணக்க வழிபாடுகளில் எந்தவித வேறுபாடுகள் இன்றி தோளோடு தோள் சேர்ந்து அனைவரும் சமம் என்ற தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது திருக்குர்ஆன். அதுபோல ஆணுக்குரிய எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்று அரபு உலகில் புரட்சியைக்கொண்டு வந்தது திருக்குர்ஆன். விதவைகள் மறுமணம் புரிய வழி செய்யப்பட்டது, சொத்துரிமையில் மூன்றில் இரண்டு பங்கு, மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட பல்வேறு பெண்ணிய உரிமைகள் குறித்து திருக்குர்ஆன் விளக்குகிறது.
பக்கத்து வீட்டார், எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் உரிமைகள் பேணப்பட வேண்டும். அவர் பசித்திருக்க நீ வயிறார உண்பதற்கு உரிமை கிடையாது. நல்ல உணவு நீ சமைக்கும்போது அவருக்கான பங்கையும் அதில் சேர்த்து விடு. அவர் சுக துக்கங்களில் பங்கு எடுப்பது உனது கடமை என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
அதுபோல, ‘உறவுகளை பகைத்து வாழ்பவன் சொர்க்கத்தின் நறுமணத்தை கூட நுகர முடியாது’ என்று எச்சரிக்கையை விடுத்து உறவுகளோடு இணைந்து வாழ வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.
“நிறுவைகளை அளவுகளை நீதமாய் அளந்து கொடுங்கள்” என்கின்றது திருக்குர்ஆன். பொருள்களின் உண்மை தன்மையைச் சொல்லி வியாபாரம் செய்யுங்கள், பதுக்கல், கலப்படம் செய்யாதீர்கள், அதிக விலைக்கு விற்காதீர்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறது.
இப்படிப்பட்ட நன்னெறிகளை சொல்வதால் திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எந்த மதத்தவர் ஆனாலும் இதனை படிக்கலாம், அதன்படி நடக்கலாம். அதன் தத்துவங்களை நடைமுறைப்படுத்தலாம், எந்தத் தடையும் இல்லை.
எனவே மனிதம் வாழ நன்னெறிகளின் தத்துவமாய் கிடைத்த புனிதநூல் திருக்குர்ஆன், நாம் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இதுகிடைத்திருப்பது மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம் என்றால் அது மிகையல்ல.
மு. முகமது யூசுப், உடன்குடி.