என் மலர்
ஆன்மிகம்

சிவன்
சிவனுக்கு உகந்த நட்சத்திரம்
கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம்.
நட்சத்திர மண்டலத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம்; மற்றொன்று திருமாலுக்கானது.
‘திருவாதிரை’ நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இதனால் தான் இந்த நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்படுகின்றது.
எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவனேசன், சிவப்பிரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண்களுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

Next Story