என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைவார். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில், அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

    விழாவின் 7-ம் நாளான்று (24-ந்தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம்நாள் (26-ந்தேதி) அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவது, தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருள்வது சிறப்பம்சமாகும்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.
    Next Story
    ×