என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.துளசி செடியை பூஜை செய்து நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பிரார்த்திக்கவும்..
    துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

    கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘பிருந்தாவன துளசி’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும்.

    ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .

    மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய
    பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம்
    ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்.
    என்பதையும் சொல்லவும்.,

    பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். .
    துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள்.
    எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்
    பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடைய
    தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;
    கிருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா 7-ம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    18-ம்தேதி உற்சவர் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது.

    ஆனிப்பெருந்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் வைபவம் நடந்தது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும், ஆண்டாள் தந்தையுமான பெரியாழ்வாரின் ஜென்ம நட்சத்திரமான (ஆனி-சுவாதி) நேற்று கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பெரியாழ்வார் ரெங்கநாதர் மூலஸ்தனம் எதிரே உள்ள சந்தனு மண்டபத்திற்கு சென்றார். அங்கு பெரியாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் வலம் வந்து சன்னதியை வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    சோலைமலை முருகன் கோவில் சஷ்டி மண்டப வளாகத்தில் 5 இடங்களில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு புஷ்பங்களால் கலச அபிஷேகம் நடந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற 6-ம படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் ஆனி மாத விசாக நட்சத்திரத்தையொட்டி உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் 5 இடங்களில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு புஷ்பங்களால் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் பல்வேறு மூலிகைகளால் யாக பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியர்களின் வேத மந்திரம் முழங்க இந்த பூஜைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை, சமேத தமிழ் கடவுள் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும், சர விளக்கு தீபாராதனைகளும் நடந்தன.

    கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக மூலவர் வித்தக விநாயகர், மூலவர் சுவாமிகள் மற்றும் ஆதி வேல் சன்னதியிலும் பூஜைகள் நடந்தன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும்.
    உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

    கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது.

    இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான்.

    வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.

    அதேபோன்று சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கிறது.
    அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.
    திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் கோவிலுக்குள்ளேயே இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேசுவரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார்.

    இப்பெருமானின் - அசலேஸ்வரர் கோவில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்திற்குள் இறப்பவர் நோக்கினால் அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோவிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூஜைக்கும் கோவிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கலவெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால் அசலேசர் எனப் பெயர் பெற்றார். அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.

    63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோவிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோவில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது.

    அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள் கோவில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோவிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட வீட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர்.

    "கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று" என்று சமணர்கள் பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட இறைவன் அசரீரியாக "அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று"' என்று கூறினார்.

    இதைக்கேட்ட நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்

    ஆலய முகவரி    அருள்மிகு அசலேசுவரர் திருக்கோவில்
    தியாகராஜசுவாமி திருக்கோவில் தேவஸ்தானம்
    திருவாரூர்
    திருவாரூர் வட்டம்
    திருவாரூர் மாவட்டம்
    PIN - 610001
    திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க வாசலில் உற்சவர் போகசீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் போகா சீனிவாசமூர்த்தி அருள்பாலித்து வருகிறார். போக சீனிவாசமூர்த்தி விக்ரகத்தை கி.பி.614-ம் ஆண்டு தொண்டை மண்டல பல்லவ ராணியாக ஆட்சி செய்த சாமவாய் பெருந்தேவி என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் 18 அங்குலம் உயரத்தில் வெள்ளியால் தயார் செய்யப்பட்டதாகும். அந்த விக்ரகத்தை பல்லவ ராணி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய தகவல் அடங்கிய கல்வெட்டு விமான வெங்கடேஸ்வரசாமி சிலைக்கு கீழே இருக்கும் சுவரில் உள்ளது. கோவிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான போகா சீனிவாசமூர்த்தியை கவுதுகமூர்த்தி, மணவாள பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

    கோவிலில் உள்ள தங்க வாசலில் நேற்று உற்சவர் போகசீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேகர்ரெட்டி, குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    வியாபாரிகள் வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை வைத்து அதையே தனலட்சுமியாக வழிபடலாம். வழிபட்ட காசிலிருந்து சில நாணயங்களை எடுத்துச் சென்று வியாபாரம் தொடங்க மிகுந்த லாபம் கிட்டும்.
    கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ணவர்ண ஸமன்விதாம்
    ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸன ஸமன்விதாம்
    பரிபூர்ணம்ச கும்பம்ச தக்ஷிணேந கரேணது
    சக்ரம் பாணம்ச தாம்பூலம்த தாவாம  கரேணது
    சங்கம் பத்மம்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
    ஸத்கஞ்சுக ஸ்தனீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோஹராம்.

    - தனலட்சுமி தியானம்.

    பொதுப் பொருள்: நிறைந்த அழகு கொண்ட பொன்னிற மேனியை உடையவளே. சகல அணிகலன்களும் அணிந்திருப்பவளே. மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமயமான மண்டபத்தில்  திகழ்பவளே. நிறைகுடம், சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, தாமரை, வில், ஏந்தியருளும் அழகே உருவான தனலட்சுமியை வணங்குகிறேன். வணங்குவோர்க்கு தனம் எனும் செல்வச் செழிப்பை  அருள்பவளே தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

    இன்று நடைபெற உள்ள பிரதோ‌ஷ விழாவிற்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவொற்றியூர் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விழா ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்களின் போது 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோ‌ஷ விழா எப்பொழுதும் வெகு சிறப்பாக நடத்தப்படும். ஆனால் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் https://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    விசேஷங்கள் நிறைந்த ஆனி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான ஆனி மாதத்தில் வருகின்ற இந்த ஆனி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.

    ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் மட்டும் சாப்பிட்டும் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் வீட்டின் பூஜையறையில் சிவபெருமான் படத்திற்கு பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    வீட்டில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் யாசகர்களுக்கு கீரை சாதம், பழச்சாறு போன்றவற்றை தானம் வழங்கலாம். இம்முறையில் ஆனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு நீண்ட நாள் வியாதிகள் அனைத்தும் நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் கணவனும் – மனைவியும் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். கர்ம வினைகளும், பூர்வ ஜென்ம பாவ வினைகளும் நீங்கும்.
    காரைக்காலில் மாங்கனி திருவிழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
    காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், பக்தர்கள் இன்றி விழா முழுவதும், கைலாசநாதர் கோவில் வளாகத்திலேயே நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை காரணம் காட்டி கோவிலுக்குள்ளே விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டார்.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் உபயதாரர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவி வருவதால் சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாணம் நிகழ்ச்சி முடிந்தவுடன், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். முதலில் 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அவர்கள் வெளியேறிய பிறகு அடுத்த பகுதியாக 100 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், 24-ந் தேதியும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
    மனம் மாறி, நற்செய்தியைக் கைக்கொண்டு, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதராக வாழ நாம் முயற்சி மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இயேசுவின் மணவிருந்தில் நாம் கலந்துகொள்ள முடியும்.
    அந்நாட்களில்... யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார்கள். எனவே, யோவானின் சீடரும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்’’ என்றார். இதன் மூலம் தன்னுடைய விண்ணேற்றத்திற்கு பிறகு, தன்னுடைய சீடர்களும், மக்களும் நோன்பிருப்பதை முன்கூட்டியே அறிவித்தார்.

    மேலும் அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார், “எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த ஒட்டு பழைய ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும். புதிய துண்டு பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பையில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் புதிய மது தோற்பையை வெடிக்கச் செய்யும், மதுவும் சிந்திப்போகும், தோற்பையும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது. மேலும் பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர்கள் கருத்து” என்றார்.

    இயேசுவின் காலத்தில் நற்செய்தியைக் கேட்டும் பரிசேயர்கள் மனம் மாறவிரும்பவில்லை. திருச்சட்டத்தின் சடங்குகளைக் கைக்கொண்டு, பழைய ஆடையாகவும் பழைய தோற்பைகளாகவும் இருக்கவே விரும்பினார்கள் . “அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் திருச்சட்டத்தின் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே, தடைக்கல்லின் மேல் தடுக்கி விழுந்தார்கள்’’, என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

    இக்காலத்தில் நாமும்கூட பரிசேயரைப்போல் பழையதே நல்லது என்று எண்ணுகிறோம். நாம் பழைய ஆடையாகவும், பழைய தோற்பையாகவும் இருக்கிறோம். நம்மில் பலர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டாலும் அதை கைக்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில், அது நம்மை கிழித்துவிடுகிறது. நம் தவறுகளை அறியவோ, மனம் மாறவோ, இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவோ நாம் விரும்புவதில்லை. நாம் வெளிவேடக்காரராக வாழ்கிறோம். இயேசுவைத் துதிக்கிறோம். இறைவழிபாட்டின் சடங்குகளை நிறைவேற்றுகிறோம்.

    வெளிவேடக்காரராக வாழ்வதை நாம் அறியவேண்டும். மனம் மாறி, நற்செய்தியைக் கைக்கொண்டு, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதராக வாழ நாம் முயற்சி மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இயேசுவின் மணவிருந்தில் நாம் கலந்துகொள்ள முடியும். நாம் புதிய தோற்பையாக இருக்கிறோமா?
    ×