என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,472 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர். நேற்று உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 63 லட்சம் கிடைத்தது.
திருப்பதி கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..
நம்மால் செய்ய இயலும் காரியங்களை மட்டும் வாக்குறுதிகளாகக் கூறக் குர்ஆன் வலியுறுத்துகிறது. செய்ய இயலா ஒன்றைப் பெருமைக்காகப் பேசிவிட்டுச் செல்வது அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் செயலாக குர்ஆன் கண்டிக்கின்றது.
மனித சமூகம் நல்லொழுக்கங்களுடன் வாழ, ஒழுக்கம் சார்ந்த அம்சங்களை இஸ்லாம் போதனை செய்யத் தவறியதில்லை. ஒரு மனிதன் நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்று வழங்கினாலும், அனைத்திற்கும் முதன்மையானது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா மனிதன் நிறை மனிதனல்ல’ என்கிறது இஸ்லாம்.
வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவதே இறை நம்பிக்கையாளரின் அடையாளங்களில் ஒன்றாக முன்வைத்து அதனை முழுமைப்படுத்துவதை ஆணையிடுகிறது திருக்குர்ஆன்.
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள். (திருக்குர்ஆன் 5:1)
படாடோபத்திற்குப் போகிற போக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதனை அலட்சியம் செய்வது இறை நம்பிக்கைக்குச் சேதம் ஏற்படுத்தும் செயலாக பார்க்கிறது இஸ்லாம்.
“எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ, அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)
கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது நயவஞ்சகனின் குணங்களில் ஒன்றாக நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது. நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான். 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான். (நபி மொழி)
நம்பிக்கையின் மறு பிரதிபலிப்பே வாக்குறுதிகளாகும். அதனை நிறைவேற்றாமல் கடந்து செல்வது மனிதனுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளை மீறுவதாகும். நாளை மறுமையில் இதற்கான கேள்விகளுக்குப் பதில் கூறும் சங்கட நிலை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும் அநியாயம் என்கிறது இஸ்லாம்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவைகளை முறையாகச் செய்துவந்து, ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், செய்த நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்.
நம்மால் செய்ய இயலும் காரியங்களை மட்டும் வாக்குறுதிகளாகக் கூறக் குர்ஆன் வலியுறுத்துகிறது. செய்ய இயலா ஒன்றைப் பெருமைக்காகப் பேசிவிட்டுச் செல்வது அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் செயலாக குர்ஆன் கண்டிக்கின்றது.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 61:2-3)
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இறைவனின் பண்பாகும். மற்றும் அவனது தூதுவர்களின் பண்புகளில் ஒன்றாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்றும் குறிப்பிடுகின்றான்.
‘(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54)
வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றவர்களுக்கு நம்மைப் பண்பாளர் என்பதை அறிமுகம் செய்கிறது. இதனை கவனித்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் விரும்பும் அறங்களில் ஒன்றாகும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 17-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது.
இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் மாதம் 22-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
22-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
23-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
24-ம் தேதி வியாழக்கிழமை :
* பௌர்ணமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- கார்த்திகை
25-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ரோகிணி
26-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்
27-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* திருவோணவிரதம்
* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
28-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* சிறிய நகசு
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
23-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
24-ம் தேதி வியாழக்கிழமை :
* பௌர்ணமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- கார்த்திகை
25-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ரோகிணி
26-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்
27-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* திருவோணவிரதம்
* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
28-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* சிறிய நகசு
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
முழு ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.
ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலின் தலவரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக ராவண சம்காரமும், 2-வது நாள் நிகழ்ச்சியாக விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய 12 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் சாமி சன்னதி பிரகாரம் வழியாக கொண்டுசென்று கருவறையில் உள்ள சாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் வேடம் அணிந்த கோவில் குருக்கள் சந்தோஷ், விசுவநாதர் சன்னதியில் இருந்து சாமி விக்ரகத்தை தோளில் வைத்து தூக்கியபடி முதல் பிரகாரத்தில் ஆடியபடி வலம் வந்தார். தொடர்ந்து சாமி விக்ரகம் கருவறையில் வைக்கப்பட்டது. பின்னர் சாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் கோவில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி இணை ஆணையர் பழனிகுமார், ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, நேர்முக உதவியாளர் கமலநாதன், காசாளர் ராமநாதன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணி அளவில் சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தா்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம். ஆனால் மற்ற ஆர்ஜித சேவைகளில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை.
ஸ்ரீகாளஹஸ்தி :
ஆந்திர மாநில அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் ஒருசில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தா்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம். ஆனால் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோவில் சார்பில் நடத்தப்படும். அதில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.
என்னதான் சம்பாதித்தாலும் சில வீடுகளில் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு, கணவன் மனைவிக்குள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் , சண்டை , சச்சரவுகள் நீடித்துக்கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் இதனை ஒரு எளிய பரிகாரம் மூலம் சரி செய்து விட முடியும். இதனை நம்பிக்கையுடன் செய்து வர சிறப்பான பலன்களை பெறலாம். வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்து வீட்டின் அனைத்து மூலைகளிலும், திசைகளிலும் தூவி விடலாம்.
24 மணி நேரம் கழிந்ததும் வீட்டை சுத்தமாக பெருக்கி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இதனைச் செய்வதால் வீட்டில் அமைதி நிலவுவதை அனுபவத்தில் உணரலாம். இதே போல் வாரம் 1 அல்லது 2 முறைகள் , விசேஷ தினங்கள் சாம்பிராணி புகை போடலாம். அதிலும் வெண்கடுகு தூபம் போடலாம். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு, சாம்பிராணி, குங்குலியம், ஏலக்காய் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழுவதை உணர முடியும்.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள் .அதே போல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம விதிப்படி சாமிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது.
நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி விழா முழுவதும் கோவிலுக்குள்ளே நடந்து முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கோவிலுக்குள்ளேயே விழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். அவரது வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்த மாங்கனி திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், பக்தர்கள் இன்றி விழா முழுவதும் கோவிலுக்குள்ளே நடந்து முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கொரோனாவை காரணம் காட்டி கோவிலுக்குள்ளேயே விழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24-ந் தேதி காலை கோவில் உள்ளேயே பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு, இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த 5 நாள் விழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாறாக, கோவில் உபயதாரர்கள், அறங்காவல் குழுவினர், முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணியினர், மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில், காரைக்கால் அம்மையார் கோவில் அருகே மாங்கனி திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களின் பங்களிப்போடு விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கானா ஊர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதே இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதம். இயற்கை மீதான இயேசுவின் அதிகாரத்தைக் காட்டும் இந்த அற்புதமே, அவரது இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது.
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
பின்பு இயேசு, “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகவே பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (யோவான் 2:1-11)
இறையியல்
தமது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு கிறிஸ்து கூறியபோதும், அவரால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அவரது தாய் மரியா உறுதியாக நம்புகிறார். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” (மாற்கு 9:7) என்று விண்ணகத் தந்தை கூறியது போன்றே, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) அன்னை மரியா கூறுகிறார்.
அன்னையின் தூண்டுதலால் நிகழ்ந்த இந்த அற்புதமே, இயேசுவின் இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது. ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்தது போல, இயேசுவின் மீட்பு பணியைத் தொடங்க மரியா காரணமாக இருக்கிறார்.இந்த அற்புதத்தில் சுவையற்ற தண்ணீர் இனிமைமிகு திராட்சை இரசமாக மாறியது, பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு அருள்நிலைக்கு கடந்து செல்வதைக் குறிக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இதனால் கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்தானதும், அதன்தொடர்ச்சியாக பல பெரிய கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோவிலின் உள்ளேயே மிக எளிமையாக நடத்தப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆனிமாத ஊஞ்சல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் 2-ம் நாளில் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடை எழுந்தருளினர்.
6-வது நாளான நேற்று சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருமீயச்சூர் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்கு ஒரே காரணம், லலிதாம்பாள் தான்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ‘திருமீயச்சூர்’ திருத்தலம். இங்கு ‘ஸ்ரீலலிதாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அம்பாள் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பெருமைகள் உள்ளன. ‘சனீஸ்வரன், எமதர்மன், சூரியனின் தேரோட்டியான அருணன், கருடன், வாலி, சுக்ரீவன்’ ஆகிய 6 பேரும் அவதரித்த தலமாக இது போற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருமீயச்சூர் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்கு ஒரே காரணம், லலிதாம்பாள் தான்.
உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்து, இந்த அன்னையை வேண்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். அந்த பாடலை பாராயணம் செய்தாலே நம்முடைய மனதில் உள்ள பாரங்களும், செய்த பாவங்களும் நீங்கிவிடும். அதுவே அன்னையை நேரில் சென்று வணங்கி வந்தால், அதன் பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். சிறப்புமிக்க சக்திகொண்ட ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ உருவான தலமாகவும் திருமீயச்சூர் திகழ்கிறது.
ஒரு முறை பண்டாசுரன் என்னும் அரக்கனால், தேவர்களுக்கும், முனிவர்களும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைந்தது. இதனால் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தனர். அவரோ அந்த அரக்கனை அழிக்க, பார்வதியை ‘ஸ்ரீலலிதை’ என்ற நாமத்துடன் அவதரிக்கச் செய்தார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய அந்த அன்னை, நீண்ட காலம் போராடி அந்த அரக்கனை அழித்தாள். அவனை அழித்த பிறகும், அன்னையின் உக்கிரம் குறையவில்லை. இந்த உக்கிரத்தை பூமி தாங்காது என்பதால் அனைவரும் மீண்டும் ஈசனை தஞ்சமடைந்தனர். அவர், ஸ்ரீலலிதையிடம் “நீ சென்று, ஸ்ரீபுரம் என்ற இடத்தில் தவம் செய்து வா.. உனது உக்கிரம் தணியும்” என்றார்.
அதன்படி ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அப்போது அன்னையின் உள்ளிருந்து எட்டு பேர் வெளிப்பட்டனர். அவர்கள் ஸ்ரீலலிதையை சுற்றி நின்று கொண்டு, அவளது கண்கள், கன்னம், நெற்றி, பாதம், கூந்தல் என்று அவளது அழகை புகழ்ந்து பாடினர். “அடடா.. என் கண்கள் இத்தனை அழகா? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாக பார்க்க வேண்டும்?” என்றாள் ஒருத்தி. மற்றொருத்தியோ, “என் கன்னமும், நெற்றியும் அழகு பொருந்தியவையா? பின் எதற்காக முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?” என்றாள். அடுத்து ஒருத்தி, “என் கரிய கூந்தலின் நீளம்தான் எத்தகையது. இதை இப்படி தலைவிரிக் கோலமாகவா வைத்திருப்பது?” என்றாள். இப்படி எட்டு பேரும் ஸ்ரீலலிதை அன்னையின் அழகை பாராட்டிப் புகழ்ந்தனர். இதனால் அன்னையின் உக்கிரம் தணிந்து, அவள் சாந்தமாக மாறிப்போனாள்.
பின்னர் அந்த திருத்தலத்திலேயே தேவி கோவில் கொண்டாள். அங்கு வரும் அன்பர்களுக்கு தன்னுடைய அருளை அள்ளி வழங்குகிறாள். உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங்களைத் தந்து மகிழ்பவளாக இந்த அன்னை திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்கரத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்தபடி அன்னை இந்த உலகத்தை ஆட்சி செய்கிறாள். விஜயதசமி, மாசி மாதத்தில் வரும் அஷ்டமி தினம், வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்கள், இந்த அன்னைக்கு அன்னப் பாவாடை சாத்தும் வைபவம் நிகழ்கிறது. இதைக்காண்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நிகழாது என்பது நம்பிக்கை.
திருவாரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமீயச்சூர் திருத்தலம்.