என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உள்பட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு அர்ச்சனை நடந்தது.
    சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன்கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் வைகாசி திருவிழா நடத்த முடியவில்ைல. இதனால் கிராம மக்கள் தெய்வ குற்றம் இருப்பதாக கருதினார்கள். விழா கமிட்டியினரும் திருவிழா இல்லாமல் எளிமையாக பூஜை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி கொரோனா தொற்று நோயிலிருந்து இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உள்பட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு அர்ச்சனை நடந்தது. பூசாரி ராமசாமி பூஜைகள் செய்தார். சக்திவேல், நாகமணி, வரதராஜன், குமார் பாபு, அர்ஜுனன் உள்ளிட்ட விழா கமிட்டியினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.
    சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவின் 6-ம் நாள் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக பங்குனி மாதம் அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.

    வைகாசி அமாவாசைக்குப் பின்னர் திங்கட்கிழமையான 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.

    சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவின் 6-ம் நாள் திருவிழாவான நேற்று ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.



    சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள்.
    மங்கலை செங்கலை ,சம்முலையாள், மலையாள் வருணச்
    சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
    பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
    பிங்கலை நீலி செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே!

    பொருள்

    அன்னை அபிராமி என்றுமே மங்கலத்தை தருபவளாக இருக்கிறாள். செம்மையான கலசம் போன்ற தனங்களை உடையவளே. இவளே மலைமகளாய் பிறந்தவள். வெண் சங்கு போன்ற வளையல்களை அணியப்பெற்றவள். சிவந்த திருக்கரங்களை உடையவள். சகல கலைகளையும் தந்தருளுபவள் . இவள் மயில் போன்ற அழகுடையவள். நுரை பொங்கப் பாய்ந்தோடும் கங்கை உதிக்கும் இடமான சடாமுடியை கொண்ட பரமனின் இடப்பாகத்தை தனதாக்கி கொண்டவள். பொன் நிறம் படைத்த பிங்கலை. நீல நிறத்தினை உடைய காளி. செந்நிறம் உடைய லலிதாம்பிகை. வெண்ணிறம் படைத்த வித்யா தேவி இவள். பச்சை நிறம் உடைய உமா தேவி.
    மயிலாடுதுறையில் காவிரி துலாகட்டத்திற்கு வந்த காவிரி நீருக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அப்போது நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர் வேடங்கள் அணிந்து வரவேற்றனர்.
    கடந்த 12-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன்தினம் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி ஆற்றின் கதவணைக்கு வந்து சேர்ந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வினாடிக்கு 682 கனஅடி நீர் பொதுப்பணித்துறையினரால் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தை வந்தடைந்தது.

    காவிரி துலாக்கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராணங்களில் கூறப்படுவதால், மயிலாடுதுறை சிவாலயங்களில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது இங்கு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி துலா கட்டத்திற்கு வந்த காவிரி நீரை துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    துலாக்கட்டத்திற்கு பொங்கி வந்த காவிரி அன்னைக்கு மலர்தூவி வரவேற்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் பொதுமக்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மலர்தூவி வரவேற்றனர்.

    கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர் போன்ற வேடங்கள் அணிந்து வரவேற்றனர். தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை செய்து காவிரி நீரை வணங்கி வழிபாடு நடத்தினர்.
    கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக் கப்பட வில்லை.
    ராமேசுவரம்ராமநாதசாமி கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தின் மையப் பகுதிக்கு ராமர், சீதாதேவி லட்சுமணருடன் எழுந்த ருளினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த இலங்கை மன்னர் ராவணன் தம்பி விபீஷணருக்கு ராமபிரான் பரிவட்டம் கட்டி இலங்கை மன்னராக
    பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்து. சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
    ஆனைமலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பச்சரிசிமாவு, பால், தயிர், துளசி பொடி, நெல்லி பொடி, மாதுளை பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆனி மாத வளர்பிறை ஏகாதாசியை முன்னிட்டு சிறப்பு பூஜை விமரிசையாக நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பச்சரிசிமாவு, பால், தயிர், துளசி பொடி, நெல்லி பொடி, மாதுளை பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும், துளசி மாலை, குண்டுமல்லி பூ, செம்பருத்தி பூ, அரளிப்பூ, செண்பகப்பூ அணிவிக்கப்பட்டது. பின், மாம்பழம், ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பூஜையில் முகக்கவசம், சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
    மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி  பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக கருதப்படுகின்றன. ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி  விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை அடையலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி  விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.

    இன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும்.

    நிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
    ‘மகாபாரதம்.’ இந்த காவியத்தில் வரும் குருச்சேத்திரப் போர் முக்கியமான நிகழ்வாகும். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போர் குறித்த சில விவரங்களை சிறுசிறு துணுக்குகளாக பார்ப்போம்.
    இதிகாசங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றிருக்கிறது, ‘மகாபாரதம்.’ இந்த காவியத்தில் வரும் குருச்சேத்திரப் போர் முக்கியமான நிகழ்வாகும். குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றதால், இது இப்பெயர் பெற்றது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போர் குறித்த சில விவரங்களை சிறுசிறு துணுக்குகளாக பார்ப்போம்.

    போருக்கான காரணம்

    கவுரவர்களுடனான சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்தனர். 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்து வந்தால், நாட்டை திருப்பித் தருவதாக ஒப்பந்தம். ஆனால் வனவாசம் முடிந்து வந்தபின்னர், நாட்டைக் கொடுக்க கவுரவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இந்தப் போர் உருவானது.

    போரின் விதிமுறைகள்

    * போர் பகலில் மட்டுமே நடைபெறும்.

    * ஆயுதம் இல்லாதவர்களுடன் போரிடக்கூடாது.

    * புறமுதுகிடுவோரை துரத்திச் சென்று தாக்கக்கூடாது.

    * இருவீரர் சண்டையிடுகையில், மூன்றாவது ஒருவர் இடைபுகக்கூடாது.

    இப்படி பல விதிமுறைகள் இருந்தாலும், சில நேரங்களில் அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன.

    நான்கு பருவம்

    மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. அதில் கவுரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள் பிரிக்கப்பட்டன. மகாபாரதத்தில் அவை பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய பருவம். பீஷ்மர் முதல் 10 நாட்களும், துரோணர் 5 நாட்களும், கர்ணன் 2 நாட்களும், சல்லியன் ஒரு நாளும் தலைமையேற்றனர்.

    நால்வகை படைகள்

    * ரதப் படை (தேர்)

    * கஜப் படை (யானை)

    * துரகப் படை (குதிரை)

    * பதாதிப் படை (மனிதர்கள்)

    படைப்பிரிவுகள்

    * ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவுக்கு ‘பட்டி’ என்று பெயர்.

    * 3 பட்டிகள் - 1 சேனாமுகம்

    * 3 சேனாமுகம் - 1 குல்மா

    * 3 குல்மா - 1 கனம்

    * 3 கனம் - 1 வாகினி

    * 3 வாகினி - 1 பிரிதனா

    * 3 பிரிதனா - 1 சம்மு

    * 3 சம்மு - 1 அனிகினி

    * 10 அனிகினி - 1 அக்ரோணி

    அக்ரோணி என்பது

    21,870 தேர்கள் - தேரோட்டிகள்

    21,870 யானைகள்- யானை வீரர்கள்

    65,610 குதிரைகள் - குதிரை வீரர்கள்

    1,09,350 காலாட்படை வீரர்கள்

    போரிட்டமொத்த படைகள்

    குருச்சேத்திரப் போரில் மொத்தம் 18 அக்ரோணி படைகள் போரிட்டன. இதில் கவுரவர்கள் சார்பில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர்கள் சார்பில் 7 அக்ரோணி படைகளும் பங்கேற்றன.

    போரில் பிழைத்தவர்கள்

    மொத்தமாக 40 லட்சம் பேர் இந்தப் போரில் பங்கேற்றனர். கவுரவர்கள் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகியோரும், பாண்டவர்கள் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்யகி, யுயுத்சு ஆகிய 8 பேரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

    கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழகத்தில் கடந்தாண்டு தொடங்கிய கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அதன் பின்னர் பரவல் குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொற்று அதிகரித்து வந்ததால் ஏராளமானோர் பலியாகியும் வந்தனர்.

    இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு அறிவித்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது அத்தியாவாசிய பொருட்கள் விற்பனை, மளிகை கடை திறப்பு, உணவகங்கள், சலூன் கடைகள் திறப்பு, அழகு நிலையங்கள் திறப்பு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

    தற்போது ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் திறப்பு உள்ளிட்டவைகளுக்கு மட்டும் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும் தடை நீடித்து வருகிறது.

    ஊரடங்கு காலத்தில் கோவில்களில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்தாலும் பக்தர்கள் கோவிலின் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலின் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்து வரும் வேளையில் கோவில்களில் மட்டும் தரிசனம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளதால் இந்த மாவட்டம் ஆன்மிக மாவட்டமாக உள்ளது. இனிவரும் மாதங்கள் பெரும்பாலும் திருவிழா நடைபெறும். தற்போது கோவில்களில் வாசல் பகுதியில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விரைவில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பல்வேறு நேர்த்திக்கடன்களையும் செலுத்த முடியாமல் பக்தர்கள் கவலையுடன் உள்ளனர்.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். மேலும் இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவில் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    இக்கோவிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர பணம், முடி காணிக்கை, கிடாய் வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களையும் செலுத்த முடியாமல் பக்தர்கள் கவலையுடன் உள்ளனர்.

    எனவே தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கள்ளழகர் கோவில், 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களை திறந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.
    பாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (அங்காரகன்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு), ஸ்ரீவைகுண்டம் (சனி), தென்திருப்பேரை (புதன்), ராஜபதி (கேது), சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்). திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.

    நவ திருப்பதி

    ஸ்ரீவைகுண்டம்

    - வைகுண்டநாதர் (சூரியன்)

    நத்தம்

    - விஜயாசனப் பெருமாள் (சந்திரன்)

    திருக்கோளூர்

    - வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்)

    திருப்புளியங்குடி

    - காய்சின வேந்தப்பெருமாள் (புதன்)

    ஆழ்வார்திருநகரி

    - ஆதிநாதப் பெருமாள் (குரு)

    தென் திருப்பேரை

    - மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்)

    பெருங்குளம்

    - வேங்கட வாணப்பெருமாள் (சனி)

    தொலைவில்லிமங்கலம்

    - தேவபிரான் (ராகு)

    இரட்டைத் திருப்பதி

    - அரவிந்த லோசனர் (கேது)
    இந்த பரிகாரத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. இந்த பரிகாரம் செய்தால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
    அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

    உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.

    சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

    சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.

    சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

    சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

    சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

    சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

    சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

    சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

    சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

    சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

    சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

    மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.
    ×