என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளிய காட்சி.
    X
    ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளிய காட்சி.

    வைகாசி பெருந்திருவிழா: ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மன்

    சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவின் 6-ம் நாள் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக பங்குனி மாதம் அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.

    வைகாசி அமாவாசைக்குப் பின்னர் திங்கட்கிழமையான 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.

    சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவின் 6-ம் நாள் திருவிழாவான நேற்று ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.



    Next Story
    ×