என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
    திருப்பதிகோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று மாலை புஷ்ப யாகம் நடந்தது. முன்னதாக மலர்கள் நிரப்பப்பட்ட பூக்கூடைகள் ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த மலர்கள் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

    12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை ஏகாந்தமாக நடந்தது.

    ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் ஓரளவு வந்திருந்தனர். ஆனால் வெளியூரில் இருந்து குறைந்த பக்தர்களே வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
    கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 8-ந் தேதி முதல் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் பஸ்கள் ஓடாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

    ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்ளூர் பக்தர்கள் ஓரளவு வந்திருந்தனர். ஆனால் வெளியூரில் இருந்து குறைந்த பக்தர்களே வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வழக்கமாக சனிக்கிழமைகளில் திருநள்ளாறு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் இன்று பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
    சட்டங்களும் மரபுகளும் மனிதரின் நலனுக்காகவே பயன்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவை நம்மை அடிமைப்படுத்த முயன்றால், தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

    ஓய்வு நாள் சட்டம்

    ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார். (மாற்கு 2:23-28)

    "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை."

    நன்மை செய்வோம்

    இயேசு யூதர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?” என்று கேட்டனர். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை” என்றார். பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, “உமது கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது. (மத்தேயு 12:9-13)

    சட்ட மீறல் இல்லை

    “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்.” (யோவான் 7:21-24)

    மரபு தேவையில்லை

    பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார். (மாற்கு 7:5-13)
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் அலங்காரம், அமுது கண்டருளிய பின் முத்துசாய கொண்டை, அழகிய மணவாளன் பதக்கம், பவள மாலை, அரை நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் முத்துசாய கொண்டை, அழகிய மணவாளன் பதக்கம், பவள மாலை, அரை நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று உற்சவர் இருப்பிடத்தில் வைத்து காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெற சில விரதங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இத்தகைய விரதங்களை கடைப்பிடிக்கும் போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் அனேகம்.
    1.சோம வார விரதம்: திங்கள் கிழமைகளில் இருப்பது

    கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இந்த விரதத்தை இருத்தல் வேண்டும். சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது தான் முறை. இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே நல்லது.

    2.திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது

    சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்

    மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடிக்க வேண்டும்.

    3.உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது

    கார்த்திகை பௌர்ணமியில் இருக்கும் விரதம் இது.இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தி,இரவு பலகாரம்,பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    4.சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது

    இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

    5.கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையில், தீபாவளி தினத்தில் இருக்கும் விரதம்.

    சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்

    இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அஷ்டமி முதல், 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் ஆன  காப்பை,ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும்.

    6.கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

    இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும். ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, இரவில் பால் அருந்தலாம்.

    7.சூல விரதம்:

    இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உண்டு, இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

    8.இடப விரதம்:

    இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.

    9.பிரதோஷ விரதம்:

    சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்

    இந்த விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.இந்த விரதங்களில் ஏதேனும் ஒன்றை நம் வாழ் நாளில் கடைப்பிடித்து,இறை அருள் பெறுவோம்.
    ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது.
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக ராமேசுவரம் திட்டக்குடி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் எதிரே சாலையில் வைத்து ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    2-வது நாள் நிகழ்ச்சியாக தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் முன்பு ராமபிரான் விபீஷணருக்கு இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். 3-வது நாள் நிகழ்ச்சியாக கோவிலின் கருவறை சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.

    கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக ராமேசுவரம்ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. நேற்று ராவணசம்கார நிகழ்ச்சி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது. ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தின் மேற்கு பிரகாரம் வாயில் பகுதிக்கு வருகை தந்தார். ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விபீஷணர் பட்டாபிஷேகம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் வைத்து நடைபெறாமல் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    நாளை ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா பகல் 12 மணிக்கு கோவிலின் கருவறை சன்னதியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    கும்பகோணம் அருகே நாதன்கோவி்லில் ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுக்லபட்ச அஷ்டமியையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    கும்பகோணம் அருகே நாதன்கோவி்லில் ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுக்லபட்ச அஷ்டமியையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    அப்போது செண்பகவள்ளி தாயார் சன்னதியில் யாககுண்டம் அமைத்து காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து

    உலக நன்மைக்காகவும், கொரோனா நோய் தொற்று பிடியில் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டியும் மகா சங்கல்பம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர் சாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாத பெருமாள் கோவில் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.
    ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம்.
    திருச்சி அருகே உள்ள திருநாராயணபுரம் எனும் ஊரில் திருமால், வேதநாராயணப்பெருமாள் எனும் திருப்பெயரில் வேதநாயகியுடன் அருள்கிறார். தல விருட்சமாக வில்வமும், தலதீர்த்தமாக காவிரியும் உள்ள தலம் இது. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கும் இத்தலத்தின் புராணகாலப் பெயர் வேதபுரி என்பதாம். கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சகமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது. பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார்.

    அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். அதனாலேயே சுவாமிக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோவில் எழுப்பினார். மூலவர் வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்குக் காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.

    ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இதுபோன்ற அமைப்பு வெகு அபூர்வமானது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட, தோஷம் நிவர்த்தியாகும். பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சந்நதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அந்த ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன்மீது தீப்பிழம்புகள் விழுமாறு ஏற்றுக்கொண்டார்.

    குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிராகாரத்திலுள்ள ஆழ்வார் சந்நதியில் பிள்ளைத்திருநறையூர் அரையரை தரிசிக்கலாம். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர். பங்குனி உத்திர தினத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சந்நதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், கல்வியில் சிறப்பாக திகழ விரும்புவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

    பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோவில் கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகவும் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சந்நதி யில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், ‘காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!’ என்றாராம். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். அதனாலேயே சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.
    வடுகம் காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் வடுகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமம் பனங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி மாத வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது.

    இதில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் வடுகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    அப்போது அம்மன் பக்தர்களுக்கு திவ்விய அலங்காரத்தில் காட்சியளித்தார்.
    மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
    மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

    நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

    கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும்.

    மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும். மரகத லிங்கத்துக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

    அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் என பலவகை லிங்கங்கள் உள்ளது.
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.
    சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு சுனக்கம்,தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில் விருத்தியும், லாபமும் அடையலாம்.

    கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:

    சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்

    யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

    நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

    பொருள்:

    தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
    ×