என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்
    X
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க வாசலில் உற்சவர் போகசீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் போகா சீனிவாசமூர்த்தி அருள்பாலித்து வருகிறார். போக சீனிவாசமூர்த்தி விக்ரகத்தை கி.பி.614-ம் ஆண்டு தொண்டை மண்டல பல்லவ ராணியாக ஆட்சி செய்த சாமவாய் பெருந்தேவி என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் 18 அங்குலம் உயரத்தில் வெள்ளியால் தயார் செய்யப்பட்டதாகும். அந்த விக்ரகத்தை பல்லவ ராணி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய தகவல் அடங்கிய கல்வெட்டு விமான வெங்கடேஸ்வரசாமி சிலைக்கு கீழே இருக்கும் சுவரில் உள்ளது. கோவிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான போகா சீனிவாசமூர்த்தியை கவுதுகமூர்த்தி, மணவாள பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

    கோவிலில் உள்ள தங்க வாசலில் நேற்று உற்சவர் போகசீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சேகர்ரெட்டி, குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×