search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து அபிஷேகம்
    X
    சோலைமலை முருகன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து அபிஷேகம்

    சோலைமலை முருகன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து அபிஷேகம்

    சோலைமலை முருகன் கோவில் சஷ்டி மண்டப வளாகத்தில் 5 இடங்களில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு புஷ்பங்களால் கலச அபிஷேகம் நடந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற 6-ம படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் ஆனி மாத விசாக நட்சத்திரத்தையொட்டி உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் 5 இடங்களில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு புஷ்பங்களால் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் பல்வேறு மூலிகைகளால் யாக பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியர்களின் வேத மந்திரம் முழங்க இந்த பூஜைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை, சமேத தமிழ் கடவுள் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும், சர விளக்கு தீபாராதனைகளும் நடந்தன.

    கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக மூலவர் வித்தக விநாயகர், மூலவர் சுவாமிகள் மற்றும் ஆதி வேல் சன்னதியிலும் பூஜைகள் நடந்தன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×