என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவையொட்டி சுவாமி நடராஜருக்கு சிவப்பு, பச்சை சாத்தி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.
8-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி நடராஜருக்கு காலையில் சிவப்பு சாத்தி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நடராஜருக்கு பச்சை சாத்தி அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தங்க திருவோட்டை பூதம் சுமக்க தங்கச் சப்பரத்தில் வீதி உலா வரக்கூடிய கங்காளநாதர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்க கூடியதாகும். ஆனால் கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இருந்தாலும் தேருக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் காவலாக இருக்கக்கூடிய தேரடி கருப்பசாமிக்கு தேரோட்டத்திற்கு முன்தினம் கொடை விழா நடைபெறும். அதேபோல் நேற்று இரவில் கருப்பசாமிக்கு கொடைவிழா நடந்தது. இதையொட்டி தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படப்பு தீபாராதனையும் நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்களில் ஒளிபரப்பப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுக்கும் வருடாந்திர 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது.
திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமியும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களும் ஸ்நபனபேரம் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே தினசரி ஆர்ஜித சேவையின் போது திருமஞ்சனங்கள் நடைபெறுவதுடன் மாடவீதி வலத்திலும் மலையப்ப சுவாமி மட்டுமே நாச்சியார்களுடன் வலம் வருகிறார்.
உற்சவமூர்த்தியின் மேல் தங்கக் கவசம் என்றும் சாற்றப்பட்டிருக்கும். அதனால் மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுக்கும் தலையிலிருந்து திருமஞ்சனம் நடத்தப்படாமல் திருப்பாதங்களில் மட்டுமே பால், தயிர், இளநீர், உள்ளிட்ட திருமஞ்சன பொருள்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தங்கக் கவசத்தை ஆண்டுக்கு ஒருமுறை அகற்றி அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து செப்பனிட்டு மீண்டும் அணிவித்து வருவதுடன் கவசங்கள் அகற்றப்பட்ட பின் உற்சவமூர்த்தியின் சிலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகிறது.
இதனை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் என்று தேவஸ்தானம் அழைத்து வருகிறது. இந்த ஜேஷ்டாபிஷேகம் 3 நாள்கள் நடத்தப்படும்.
முதல்நாள் தங்கக் கவசம் களையப்பட்டு உற்சவமூர்த்திகளுக்கு வைர கவசமும், 2-ம் நாள் முத்துக் கவசமும், 3-ம் நாள் மகாபூர்ணாஹுதி நடத்தி தங்கக் கவசத்தை செப்பனிட்டு அதற்கு பூஜைகள் செய்து மீண்டும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.
அதன்படி நேற்று திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. முதல் நாளன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களின் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டு சாந்தி ஹோமம் மற்றும் சதகலச திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு வைர கவசம் அணிவித்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலையப்ப சுவாமிக்கு வைர கவசமும், முத்துக் கவசமும் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் உற்சவமூர்த்திகள் வைர கவசத்துடன் மாடவீதியில் வலம் வந்தனர். இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து 2-வது நாளான இன்று ஏழுமலையானுக்கு முத்து கவசம் பொருத்தப்பட்டது.

சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் தலத்தின் கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.
துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங்கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.
ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர். அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.
இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.
நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.
பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.
சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள்ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குபவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சாரதாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த்தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.
சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலைகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.
முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.
கோவில் அமைப்பு :
சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.
கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.
பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.
சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.
அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.
கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.
இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகா நந்திக்கு மஞ்சள், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் உள் விழாவாக நடத்த அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக கோவில்களில் நடக்கும் விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகா நந்திக்கு மஞ்சள், பால், தயிர் இளநீர் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது, இதையொட்டி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் உள் விழாவாக நடத்த அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக கோவில்களில் நடக்கும் விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நேற்று பிரதோஷ விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நந்தி பகவானுக்கு பால் தயிர் இளநீர் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய காட்சி அளித்தனர். இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை,

கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும், காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார். கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும், காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
கை சூம்பியவர்
இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசு மீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. (மாற்கு 3:1-5)
கூன் முதுகாளர்
ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா 13:10-13)
காதை இழந்தவர்
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:47-51)

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் உள் விழாவாக நடத்த அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக கோவில்களில் நடக்கும் விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று வழிபாடு செய்தனர்.

தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் அடங்கப்பட்ட மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் தலைமை டவுன் ஹாஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் தர்கா ஹக்தார்கள் மற்றும் ஆலிம்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மவுலிது ஓதப்பட்டது.
உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வருகிற 4-ந் தேதி மாலை உரூஸ் எடுக்கப்பட்டு 5-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று 9-ம் திருவிழாவையொட்டி கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக பங்குனி மாதம் அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.
வைகாசி அமாவாசைக்குப் பின்னர் திங்கட்கிழமையான 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.
21-ம் தேதி 6-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.
நேற்று 9-ம் திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
சோமவார விரதம்
கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.
பிரதோஷம்
தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷவிரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.
சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல், மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதினால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.
சித்ரா பவுர்ணமி விரதம்
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .
தை அமாவாசை விரதம்
சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில், காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும் அபிவிருத்தி அடையும்.
கந்தசஷ்டி விரதம்
ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.
மங்களவார விரதம்
தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.
தைப்பூச விரதம்
தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால், திருமண யோகம் கூடி வரும்.
கேதார விரதம்
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை .
கிருத்திகை விரதம்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்காக அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.
நவராத்திரி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.
இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.

பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிகாம்பிகை உடனுறை ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் சாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிகாம்பிகை உடனுறை ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.
அப்போது சாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேசுவரரும், நந்தியும் காட்சியளித்தனர்.
இதேபோல் அய்யம்பாளையம் அருள் முருகன் கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதி, காந்திபுரம் சிவன்கோவில் ஆகியவற்றிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடக்கிறது.
காரைக்கால் பாரதியார் வீதியில், இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது.
இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, மாங்கனித் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால், கடந்த ஆண்டைப் போலவே, பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விழாவில், சமூக இடைவெளி, முககவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளின்படி பக்தர்களை அனுமதிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. விழாவின் 2-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகமும், நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பது, பிற்பகல் 12.30 மணிக்கு அமுது படையல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.