என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
    காரைக்கால் பாரதியார் வீதியில், இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது.

    இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, மாங்கனித் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால், கடந்த ஆண்டைப் போலவே, பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
     
    காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விழாவில், சமூக இடைவெளி, முககவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளின்படி பக்தர்களை அனுமதிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, 21-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. விழாவின் 2-ம் நாளான 22-ம்தேதி முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையார்  திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து, மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நேற்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக, மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) காலையில் பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பது, பிற்பகல் 12.30 மணிக்கு அமுது படையல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண வைபோகத்திற்கு பழங்கள், இனிப்புகள், பூக்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு என என 35 தட்டுகளில் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டன.
    தஞ்சை பெரியகோவிலில் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.வழக்கமாக திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி மிக எளிமையாக இந்த திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பழங்கள், இனிப்புகள், பூக்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு என என 35 தட்டுகளில் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    கிரிவலம் செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு ஒரு சில பக்தர்கள் மட்டுமே செல்வதால் அவர்களை போலீசாரால் முழுமையாக தடுக்க முடியவில்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஆனி மாதத்திற்கான பவுர்ணமி காலம் இன்று காலை 3.32 மணிக்கு தொடங்கி இரவு 12.09 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று ஏற்கனவே கலெக்டர் அறிவித்தார்.

    அதன்படி கிரிவலப் பாதையில் போலீசார் தடுப்புகள் வைத்து இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். அந்த வழியாக செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கிரிவலம் செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு ஒரு சில பக்தர்கள் மட்டுமே செல்வதால் அவர்களை போலீசாரால் முழுமையாக தடுக்க முடியவில்லை.

    அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் ஆசிரமங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் அண்ணாமலையை சுற்றி வந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

    பக்தர்கள் வருகை இல்லாததால் கிரிவலப் பாதையில் தங்கியிருக்கும் சாதுக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

    கிரிவலப்பாதையில் பவுர்ணமி காலங்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்த சிறு வியாபாரிகளும் ஊரை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

    மேலும் கிரிவல பாதையில் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வந்த கிராம பெண்களும் அந்த தொழிலை செய்ய முடியாமல் வருமானமின்றி வாடுகின்றனர். பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பயணிகள் யாரும் வரவில்லை.

    திருவண்ணாமலையில் தினமும் கிரிவலம்செல்லும் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் சென்று வருவார்கள். அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில்
    கிரிவலம் சென்று வருவது வழக்கம்.

    ஊரடங்கால் அவர்களும் கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
    விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று.
    இறைவன்: உத்திராபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர்
    இறைவி:     திருக்குழல் அம்மை, சூளிகாம்பாள்
    தீர்த்தம்:     சூர்ய தீர்த்தம்
    பாடியோர்: சம்பந்தர், அப்பர்

    கோயிலின் சிறப்புகள்:

    தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து செய்யுலால் அறியலாம்.

    மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது.பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன.பல்லவ மன்னனின் படை தளபதியாக வாழ்ந்த பரஞ்சோதியாரை அவரது சிவபக்தியை மெச்சி சிவத்தொண்டு புரிய மன்னன் வேண்டுகொண்டான். அவரும் சிறுத்தொண்டர் என்ற பெயருடன் மங்கை நல்லாள் என்பவரை மணந்து சீராளன் என்ற மகனை பெற்று சீராட்டி வளர்த்து வந்தார். தினமும் சிவதொண்டர்களுக்கு உணவு படைத்து பிறகுதான் உணவு உண்பார்கள்.

    ஒரு நாள் சிவனடியார்கள் யாரும் வராததால் சிவதொண்டரே கோயிலில் உள்ள திரு ஆத்திமரத்தின் கீழே அமர்ந்து இருந்த ஒரு சிவனடியாரை உணவருந்த அழைத்தார். சிவனடியாரோ திருத்தொண்டரிடம் அவரின் மகனை அறுத்து சமையல் செய்தால் மட்டுமே உணவருந்த வருவேன் என்று கூறுகிறார். சிறுத்தொண்டரும் மகனை வெட்டி கறி சமைத்தார். சிவனடியார் சாப்பிடும் முன்பு சிறுத்தொண்டரிடம் அவரின் மகனோடு உணவருந்த விருப்பம்தெரிவித்தார்.

    என்னசெய்வது என்று தெரியாமல் அவர் வெளியில் நின்று மகனை அழைக்கிறார். அப்போது அதிசயமாக கறிசமைத்த மகன் ஓடிவருவதை கண்டு மகனுடன் வீட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு உணவருந்த வந்த சிவனடியார் சிவனாக அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த அடியார் பெருமகனார், திருஞானசம் பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர்.

    சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுது படையல் என்றே அது வழங்குகிறது. இங்கு பிரகாரத்தில் அட்ட வீரட்ட தலங்களில் எட்டு சம்ஹார மூர்த்திகளையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்துகள் உள்ளன.

    கோயிலின் முகவரி:

    அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்,
    திருச்செங்காட்டங்குடி,
    நாகப்பட்டினம் மாவட்டம் 609704.

    தொலைபேசி:

    முத்துசுவாமி குருக்கள் – 9443113025, 04366 270278
    இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி  கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத பவுர்ணமிக்கும் பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

    கடந்த 15 மாதங்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமிகிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். அடுத்த பவுர்ணமிக்காவது கிரிவலம் செல்ல அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அதே போல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிகிரிவலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
    தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நாளை (24-ந்தேதி) ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம்  முருகன் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி  கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இங்கு மலையே சிவன் வடிவில் காட்சியளிப்பதால் மதுரை மட்டுமல்லாது விருது நகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

    தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இன்று (24-ந்தேதி) ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    எனவே மேற்கண்ட நாளில் பக்தர்கள் யாரும் திருப்பரங்குன்றத்திற்கு கிரிவலம் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
    திருவண்ணாமலை:

    கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி  கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமிஇன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்த மாத பவுர்ணமிக்கும்திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பவுர்ணமிகிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
    உலகம் உங்களை வெறுக்க இயலாது. ஆனால் ,என்னை வெறுக்கிறது. ஏனெனில், உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.
    இயேசு கலிலேயாவில் நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருந்தனர்.  யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். நீர் புரியும் செயல்களைக் காண முடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை.

    நீர் இவற்றை எல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே என்றனர். ஏனெனில், அவரது சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம் ‘‘எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை’’ உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான். உலகம் உங்களை வெறுக்க இயலாது. ஆனால் ,என்னை வெறுக்கிறது. ஏனெனில், உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.

    நீங்கள் திருவிழாவிற்கு போங்கள், நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை என்றார். - (யோவான் 7: 1-8) காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் வெட்டப்பட்டது. பின்பு, நெருப்பில் சூடேற்றப்பட்ட கம்பி மூங்கிலைத் துளைத்தபோது, ஐயோ! உடம்பு புண்ணாகிறதே என்று மூங்கில் கதறியது. உடனே காற்று மூங்கிலைப் பார்த்து கொஞ்சம் பொறுமையாக இரு என்று ஆறுதல் கூறியது. அதன்பிறகு மூங்கில் அருமையான புல்லாங்குழல் ஆயிற்று. மனதை மயக்கும் இசையை அள்ளிப்பொழிந்ததைப் பார்த்த காற்றினுடைய மேனி சிலிர்த்தது. உடனே காற்று புல்லாங்குழலைப் பார்த்து, ‘புண்பட்டவன் பண்பட்டவன் ஆனான்’ என்று கூறியது.

    பாதித்திருவிழா நேரத்தில் இயேசு கோயிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். ‘‘படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?’’ என்று யூதர்கள் வியப்புற்றார்கள். இயேசு மறுமொழியாக, ‘‘நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல. அது என்னை அனுப்பியவருடையது. அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர், இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா? என்பதை அறிந்துகொள்வர். தாமாகப் பேசுகிறவர் தமக்கே பெருமை தேடிக் கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்.

    மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைபிடிப்பதில்லை.

    இப்போது என்னையும் கொல்லப் பார்க்கிறீர்களே?’’ - (யோவான் 7: 14-19) மனிதனே வெயிலை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்கு நிழலின் அருமை புரியும். நெருப்பை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்குத் தண்ணீரின் அருமை புரியும். பிரிவை எண்ணிப்பார். அப்போதுதான் உனக்கு நட்பின் அருமை விளங்கும். அனாதைகளை எண்ணிப்பார்.

    அப்போதுதான் உனக்குப் பெற்றோரின் அருமை தெரியும். ‘‘வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள். எருசலேம் நகரத்தவர் சிலர், ‘‘இவரைத்தானே கொல்லத் தேடுகிறீர்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தாரே? யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?’’ என்று பேசிக் கொண்டனர்.

    கோயிலில் கற்பித்துக்கொண்டிருந்த இயேசு, உரத்த குரலில், நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என்பது பற்றி உங்களுக்குத் தெரியும். ஆயினும், நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே என்றார். இதைக்கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும், அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.’’
    - (யோவான் 7: 24-30)
    கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையிலும், 6.50 முதல் 7.20 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு உத்தரவுபடி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில்

    அதே போல் திருமணம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு திருமணத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்ச்சிகளில் வீடியோ, புகைப்படம் எடுக்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    ஒரு நாளைக்கு எத்தனை திருமணங்கள் வரை நடத்தலாம் என்பது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அதே சமயத்தில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம்  ஏகாதசிவிரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் . இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் ; வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும்.

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி  விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று “பாரணை ” என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.
    வைகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    இனி 25 ஏகாதசிகளை பார்ப்போம்

    சித்திரை - வளர்பிறை ஏகாதசி - காமதா ஏகாதசி

    சித்திரை - தேய்பிறை ஏகாதசி - பாப மோசனிகா ஏகாதசி

    வைகாசி - வளர்பிறை ஏகாதசி - மோகினி ஏகாதசி

    வைகாசி - தேய்பிறை ஏகாதசி - வருதினி ஏகாதசி

    ஆனி - வளர்பிறை ஏகாதசி - நிர்ஜல ஏகாதசி

    ஆனி - தேய்பிறை ஏகாதசி - அபரா ஏகாதசி

    ஆடி - வளர்பிறை ஏகாதசி - விஷ்ணு சயன ஏகாதசி

    ஆடி - தேய்பிறை ஏகாதசி - யோகினி ஏகாதசி

    ஆவணி - வளர்பிறை ஏகாதசி - புத்திரத ஏகாதசி

    ஆவணி - தேய்பிறை ஏகாதசி - காமிகா ஏகாதசி

    புரட்டாசி - வளர்பிறை ஏகாதசி - பரிவர்த்தன ஏகாதசி

    புரட்டாசி - தேய்பிறை ஏகாதசி - அஜ ஏகாதசி

    ஐப்பசி - வளர்பிறை ஏகாதசி - பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி - தேய்பிறை ஏகாதசி - இந்திரா ஏகாதசி

    கார்த்திகை - வளர்பிறை ஏகாதசி - பிரபோதின ஏகாதசி

    கார்த்திகை - தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி

    மார்கழி - வளர்பிறை ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி

    மார்கழி - தேய்பிறை ஏகாதசி - உற்பத்தி ஏகாதசி

    தை - வளர்பிறை ஏகாதசி - பீஷ்ம, புத்திர ஏகாதசி

    தை - தேய்பிறை ஏகாதசி - சபலா ஏகாதசி

    மாசி - வளர்பிறை ஏகாதசி - ஜெய ஏகாதசி

    மாசி - தேய்பிறை ஏகாதசி - ஷட்திலா ஏகாதசி

    பங்குனி - வளர்பிறை ஏகாதசி - ஆமலகி ஏகாதசி.

    பங்குனி - தேய்பிறை ஏகாதசி - விஜயா ஏகாதசி.

    - அதிக ஏகாதசி - கமலா ஏகாதசி
    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது.
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது. திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழக்கமாக பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது. பக்தர்கள் இன்றி மிக எளிமையாக இந்த திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்றுமாலை நடந்தது. இதையொட்டி நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி இந்த பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    மாங்கனித் திருவிழாவில் வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    பிறப்பும், இறப்பும் இல்லாதவர் சிவபெருமான். ஆனால் அவருக்கும் ஒரு ‘அம்மை’ இருக்கிறார் என்றால், அது காரைக்கால் அம்மையார்ர் மட்டுமே. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத்துக்கு முன்மாதிரியானவை, இவர் பாடிய பதிகங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழில் முதன் முதலாக பதிகம் பாடும் முறையை அறிமுகம் செய்தவரே காரைக்கால் அம்மையார் தான். இவர் பாடிய பதிகங்களைப் பின்பற்றியே, மூவரின் தேவார பதிகங்கள் பாடப்பட்டன. தமிழுக்கு ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவர்.

    புனிதவதியாக பிறந்து மண வாழ்க்கையில் நுழைந்தவர், காரைக்கால் அம்மையார். ஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். அதோடு தயிர் அன்னமும் படைத்து அனுப்பினார்.

    மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் கூற, புனிதவதி திகைத்துப் போனார். ‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ?’ என பயந்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று ஈசனை வேண்டினார். அப்போது அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார்.

    முன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை கிடைக்கும் என்று சந்தேகித்த புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, நடந்த விவரங்களைச் சொன்னார்.

    இப்போதுதான் கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், “அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றுவா” என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார். இதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார். அந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார். இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார். அதைப் பார்த்த பார்வதிதேவி, “இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?” என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.

    இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில், ஒரே ஒரு பெண் நாயன்மாராக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். மேலும் அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்வதைக் காணலாம். ஏனெனில் தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது.

    இவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. இறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள். அப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவும் கயிலாசநாதர் கோவிலுக்குள்ளேயே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இம்முறையும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விழா நடத்தப்பட உள்ளது.
    ×