search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்

    கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
    திருவண்ணாமலை:

    கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்
    திருவண்ணாமலை
    க்கு வருகிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி  கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமிஇன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்த மாத
    பவுர்ணமி
    க்கும்திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பவுர்ணமிகிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
    Next Story
    ×