search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்
    X
    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

    பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண வைபோகத்திற்கு பழங்கள், இனிப்புகள், பூக்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு என என 35 தட்டுகளில் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டன.
    தஞ்சை பெரியகோவிலில் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.வழக்கமாக திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி மிக எளிமையாக இந்த திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பழங்கள், இனிப்புகள், பூக்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு என என 35 தட்டுகளில் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வரப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×