என் மலர்

  ஆன்மிகம்

  பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்
  X
  பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்

  மாங்கனி திருவிழா: பிச்சாண்டவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
  காரைக்கால் பாரதியார் வீதியில், இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது.

  இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, மாங்கனித் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால், கடந்த ஆண்டைப் போலவே, பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
   
  காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விழாவில், சமூக இடைவெளி, முககவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளின்படி பக்தர்களை அனுமதிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

  தொடர்ந்து, 21-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. விழாவின் 2-ம் நாளான 22-ம்தேதி முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையார்  திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  தொடர்ந்து, மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நேற்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக, மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  இன்று (வியாழக்கிழமை) காலையில் பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பது, பிற்பகல் 12.30 மணிக்கு அமுது படையல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.
  Next Story
  ×