என் மலர்

  ஆன்மிகம்

  கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்த போது எடுத்த படம்.
  X
  கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்த போது எடுத்த படம்.

  வைகாசி பெருந்திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று 9-ம் திருவிழாவையொட்டி கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்னதாக பங்குனி மாதம் அமாவாசை பின்னர் வரும் திங்கட்கிழமை மூன்று மாத கொடியேற்றம் நடைபெறும்.

  வைகாசி அமாவாசைக்குப் பின்னர் திங்கட்கிழமையான 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.

  இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.

  21-ம் தேதி 6-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.

  நேற்று 9-ம் திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
  Next Story
  ×