என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சிவகங்கை மாவட்டம் திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா இந்த கோவிலில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்வார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சி
ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்குமுகமாக விநாயகர் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 30-ந் தேதி வரை சூரிய கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும்.
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 6.15 முதல் 6.25 மணி வரையும்,தொடர்ந்து 6.40 முதல் 6.50 மணி வரையிலும் சூரிய கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும். ஆனால் கடந்த 3 நாட்களாக மழை மேகமாக இருந்ததால் சூரியன் சரியாக தெரியவில்லை.
நேற்று தெள்ளத் தெளிவாக வானம் இருந்ததால், சூரிய கதிர்கள் கோவிலின் மூன்று துவாரங்கள் வழியாக கருவறைக்குள் சென்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாடாக கருதி சாமி தரிசனம் செய்தனர்.

250-வது ஆண்டுகளை கடந்து, கம்பீரமாக ராமேசுவரம் கோவிலுக்கு பெருமை சேர்க்கும் இந்த 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பமாகும்.
அகில இந்திய புண்ணியதலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமாகும்.
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள திருக்கோவில்களில் ராமேசுவரம் கோவிலும் ஒன்றாகும்.
காசியை நிகராக கருதப்படும் ராமேசுவரம் கோவிலும், அக்னி தீர்த்தக்கடல், தீர்த்தக்கிணறுகளும் பல சிறப்புகளையும், ஆன்மிக ஐதீகங்களையும் உள்ளடக்கியவை.
இதே போல் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், ஒரே மாதிரியான தூண்களை கொண்ட 3-ம் பிரகாரம் ஆகும்.
இது கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 3-ம் பிரகாரத்தின் திருச்சுற்று 5.10 மீட்டர் அகல பாதையை உடையதாகும். இதில் 9 மீட்டர் உயரமான தூண்கள், உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரகாரம் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள், மண்டபங்கள் மற்றும் தீர்த்தங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
3-ம் பிரகாரத்தின் தெற்கு பகுதி 207 மீட்டர் நீளமும், வடக்கு பகுதி 195 மீட்டர் நீளமும், கிழக்கு பகுதி 137 மீட்டர் நீளமும், மேற்கு பகுதி 119 மீட்டர் நீளமும் கொண்டது.
பிரகாரத்தில் மொத்தம் 1212 தூண்கள் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த பிரகாரத்தின் பிரதான சிறப்பு. இது சொக்கட்டான் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.
3-ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தூணையும் மிக நுணுக்கமாக உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு தூணும் பல பொருட்களின் கலவையாகவும், கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. இவ்வளவு வேலைப்பாடு அமைந்த தூண்களை பார்த்தால், யாருக்கும் வியப்பும் மலைப்பும் ஏற்படாமல் இருக்காது.
இந்த பிரகாரமானது ராமநாதபுரம் சீமையை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் கட்டப்பட்டது. 1740-ல் தொடங்கிய ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தின் திருப்பணிகள் முழுமையாக 1770-ல் தான் முடிவடைந்து உள்ளன.
ராமேசுவரம் கோவிலில் உள்ள 3-ம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகளை தற்போது கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் உள்ள 1212 தூண்களிலும் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. லேசான மஞ்சள் நிறத்துடன் கூடிய வர்ணம் பூசப்பட்டு, பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது.
250-வது ஆண்டுகளை கடந்து, கம்பீரமாக ராமேசுவரம் கோவிலுக்கு பெருமை சேர்க்கும் இந்த 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் அல்லது யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்து, அதற்குரிய பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகள், பக்தர்களின் விருப்பமாகும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.
பாபாவை குருவாக ஏற்று நம்பிக்கை வைத்து அவரை தியானிப்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். அப்படி மூல மந்திரத்தை சொல்ல சொல்ல அது பாபா காட்டும் பாதைக்கு நம்மையும் அறியாமல் நம்மை அழைத்துச் செல்லும்.
“சாய்.... சாய்... என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்” என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்” மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.

திருப்பதி கோவிலில் இந்த முறையும் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருள்வார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடந்தது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த முறையும் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடைபெறும். சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் வாகன உற்சவங்கள் நடைபெற உள்ளது.
ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்குள் ஆன்லைனில் வழங்கப்படும். தேவஸ்தான வெப்சைட்டை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால் சர்வர் முடங்குகிறது. எனவே சர்வரை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சர்வர் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்குள் ஆன்-லைனில் வெளியிடப்படும்.
கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏழுமலையானின் தீவிர பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையான் குறித்து எழுதிய 4 ஆயிரம் கீர்த்தனைகளை தேவஸ்தானம் அச்சடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடுகம்பாளையம் கிராமம். இங்கு அனுமந்தராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கல் சிற்பங்கள் நிறைந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே தல விருட்சமாக ஆலமரம் நிற்கிறது. கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால் அனுமன் வீற்றிருக்கும் சன்னிதி உள்ளது.
இந்தப் பகுதி சுமார் 900 வருடங்களுக்கு முன்பு, பசும் சோலைகள் நிறைந்த நந்தவனமாக இருந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், அவரது குலகுருவான வியாசராஜ தீர்த்தர், இங்கு நடந்தே வந்துள்ளார். அப்போது இங்கு ஒரு ஆளுயர அழகிய பாறை தென்பட்டது. அந்த பாறையில்தான் ராமாயண காலத்தில் அனுமன் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.
சுயம்புவாக தோன்றிய இந்த பாறை, அனுமனின் அருள் நிறைந்த பாறை என்பதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர், அந்த பாறையின் முன்பாக விழுந்து வணங்கினார். அவரின் உத்தரவுப்படியே, இந்தப் பாறையில் அனுமனின் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அனுமனுக்காக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு, பொதுமக்களின் பேராதரவால் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அனுமனுக்கு ‘சுந்தரன்’ என்ற பெயரும் உண்டு. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். சீதாபிராட்டியை தேடி இலங்கை செல்லும் வழியில் அனுமன் பல தடங்கல்களை சந்திக்கிறார். அவற்றை தன் வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி காண்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இங்குள்ள பாறை மீது அனுமன் வந்து அமர்ந்து தவம் இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள அனுமன் சிற்பத்தில், ஓங்கிய வலது திருக்கரத்தில் தெய்வீக வகையான சுதர்சன ரேகை வடிக்கப்பட்டுள்ளது. இது சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரின் சக்தியை குறிப்பதாகும். எனவே அனுமனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள், முற்பிறவியில் செய்த பாவங்கள், இப்பிறவியில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள அனுமனின் திருவுருவத்தில் பல்வேறு தோற்றங்கள், மற்ற கோவில்களில் உள்ள சிற்பங்களை விட மாறுபட்டு உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். இந்த திருவுருவை வணங்குவோருக்கு நான் என்ற ஆணவம் நீங்கும். நாம் என்ற ஒற்றுமை மனதில் பிறக்கும். இதனால் அவர்களின் தலைமை பண்பு தரணியை ஆளும் என்பது ஐதீகம்.
ராமபிரானின் திருவடிகளை ஏந்திய வலது திருக்கரம், அபய திருக்கரமாக அமைந்துள்ளது. ஓங்கி உயர்ந்து தலைக்குமேல் தூக்கிய திருக்கரம், அடியவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் விளங்குகிறது. தெய்வீகமான சவுகந்திக மலரைக் கொண்டு ராமபிரானின் திருவடிகளை ஆஞ்சநேயர் பூஜித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த வகையில் இந்தக் கோவிலில் அனுமன் தனது திருக்கரத்தில் கவுகந்திக மலரை தாங்கிய திருக்கோலம் உள்ளது. இந்த கோலத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு நோய்கள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் கைகூடும். இடது தொடையில் ஊன்றிய திருவடி பக்தர்களுக்கு அருளும் வீரத்தினை உணர்த்துவதாக உள்ளது.
இந்த திருத்தலத்திற்கு வந்து அனுமனை வழிபட்டால் கலையாத கல்வியும், நீண்ட ஆயுளும், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், பிணி இல்லாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் கிடைக்கப்பெறும்.
இந்த கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு கதலிப்பழம், சுடு பால், பருப்பு, நெய் சாதம், அவல், கல்கண்டு, வெண்பொங்கல், சர்க்கரை, நெய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் இனிப்பு, வடை, எலுமிச்சை அன்னம், புளியோதரை சாதம், தயிர்சாதம், தேங்காய் சாதம், சுண்டல் உள்ளிட்ட பொருட்களால் நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை இந்த கோவிலில் விஷேசமானது. வாரந்தோறும் சனிக் கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவையில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறுமுகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் இடுகம்பாளையம் அமைந்துள்ளது.

முப்பெரும் தேவியர் பவானியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது.
புளியங்குடியில் அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானியம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
இரவு 7 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரோனா நோய்த்தொற்று முழுமையாக அழிந்து போகவும் சிறப்பு மந்திரம், பிரார்த்தனை, 1,008 லிட்டரில் சிறப்பு பால்அபிஷேகம் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சமுக இடைவெளியுடன் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இந்த விரதத்தை மேற்கொண்டால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு வந்து சேரும்.
சிவபெருமானை வழிபட எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதாக எட்டு விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:- ‘சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகியவை ஆகும். இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைப்பிடித்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவுக்கு அனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய விரதமாக ‘உமாமகேஸ்வர விரதம்’ இருக்கிறது.
சிவபெருமானின் காருண்ய மூர்த்தங்களாக 25 மூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஈசனின் ஐந்து முகங்களான ஈசான முகம், தத்புருஷம், அகோரமுகம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களுக்கும், தலா ஐந்து காருண்ய மூர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் சத்யோஜாதம் முகத்திற்குரிய காருண்ய மூர்த்தங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘உமாமகேஸ்வர வடிவம்.’ சிவபெருமானின் ஈடுஇணையற்ற வடிவங்களில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த உருவத்தில் சிவபெருமானும், சக்தியும் இணைந்து, சிவ-சக்தி தத்துவத்தை உணர்த்துவதால், இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிவனையும், சக்தியையும் ஒரு சேரத் தியானித்து வழிபட்டால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அவர்களை வழிபட சிறந்த நாளாக, புராட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் இருக்கிறது.
இந்த விரதத்தை ஒரு புரட்டாசி மாத பவுர்ணமியில் தொடங்கி, 16 வருடங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து ஷோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.
பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு, அதன் பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இந்த விரதத்தை மேற்கொண்டால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு வந்து சேரும்.
பவுர்ணமியும்.. சிறப்பும்..
சித்திரை மாதம் - சித்ரா பவுர்ணமி
வைகாசி மாதம் - வைகாசி விசாகம்
ஆனி மாதம் - சாவித்திரி விரதம்
ஆடி மாதம் - கோபத்ம விரதம்
ஆவனி மாதம் - ஆவணி அவிட்டம்
புரட்டாசி மாதம் - உமாமகேஸ்வர விரதம்
ஐப்பசி மாதம் - சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா
கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா
மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்
தை மாதம் - தைப்பூசம்
மாசி மாதம் - மாசி மகம்
பங்குனி மாதம் - பங்குனி உத்திரம்

நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது.
வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் வழிபாடுகளில் மகாளய பட்சம் வழிபாடுதான் முதன்மையானது. மிகவும் எளிதானது. ஆண்டுக்கு ஒரு தடவைதான் நமக்கு இந்த வழிபாட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும். மகாளய பட்சம் வழிபாடு என்பது பித்ருக்களான மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய ஒன்றாகும்.
நம்மை பெற்றவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் இதர முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்கள் தெய்வத்துக்கு சமமாக மாறி விடுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் அவர்களுக்கென்றே பித்ருலோகம் உள்ளது. மரணத்துக்கு பிறகு அங்கு சென்று விடும் நம் மூதாதையர்கள், பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப அங்கிருந்து கொண்டு நமக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.
பொதுவாக பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலானவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16-வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.
அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலை போட்டு கும்பிட்டு விட்டு திருப்திபட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் சுரத்து இல்லாமல் போய் விடுவதுண்டு. அதன்பிறகு அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிடும்.
உயிரோடு இருந்த போது காணப்பட்ட பந்தம், பாசம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமலே போய் இருக்கும். சிலர் ஏதோ உறவே அத்து போய் விட்டது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படியே விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை. உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.
உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்.
நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. யார் ஒருவர் தன் முன்னோருக்கு அமாவாசைதோறும் தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவரது குடும்பம் அமைதி பெற்று, மங்கள வாழ்வு பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும்.
சாஸ்திர விதிப்படி ஒருவர், மறைந்த தன் மூதாதையர்களுக்கு ஆண்டுக்கு 96 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால் எல்லோராலும் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய முடிவதில்லை. என்றாலும் முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கிட்டு பெரும்பாலானவர்கள் திதி கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் செய்து விடுவார்கள்.
இப்படி எதுவுமே செய்யாமல், அதாவது திதி, தர்ப்பணம், சிரார்த்தம் என்று எதுவுமே செய்யாமல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அத்தகையவர்களுக்காகவே மகாளய பட்ச காலம் உள்ளது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அம்மாவாசை வரையிலான 15 நாட்களே மகாளயபட்ச நாட்களாகும்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட, இந்த மகாளய அமாவாசை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும், இன்னும் சொல்லப் போனால் எந்த அமாவாசையும் இதற்கு நிகரே கிடையாது.
ஏன் தெரியுமா?
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் அனைவரும் வான் உலகில் இருந்து, தம் குடும்பத்தாரைத் தேடி பூமிக்கு வந்து விடுவார்கள். இந்த 15 நாட்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள். நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து நல்ல நிலைக்குஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்துவிட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிட்டால், அது நியாயமா? இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக்கூடாது.
அதற்கு நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக மகாளய பட்ச நாளில் அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து கருட சேவை (தங்கக் கருட வாகன வீதி உலா) நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை நடந்தது.
உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் தேவஸ்தான அதிகாரிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட ஒரு அண்டாவில் வேதமந்திரங்கள் முழங்க சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 வரை மகாபூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப பிரதட்சணை, நைவேத்தியம், மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
இதையடுத்து பவித்ர புனிதநீர் நிரப்பப்பட்ட ஒரு அண்டாவில் வேதமந்திரங்கள் முழங்க சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.
உற்சவத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை கஸ்தூரிபாய், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மூன்று கால அபிஷேகத்துக்கு பிறகு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று காலை யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா ஆரத்தி நடந்தது. கோவிலில் மூன்று கால அபிஷேகத்துக்கு பிறகு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
மேலும் துணைச் சன்னதிகள், நான்கு கோபுரங்கள், ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபம், பாதாள விநாயகர், செங்கல்வராயசாமி உள்பட அனைத்துச் சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. அதன் பிறகு நைவேத்தியம், மகா தீபாராதனை நடந்தது.
பவித்ரோற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு குடும்பத்தினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.