என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
என்னுடைய கீர்த்தனைகளை யார் ஒருவர் ஆழ்மனதில் இருந்து பாடுகிறாரோ அவருக்கு முழுமையான பேரின்பம் கிடைக்கும். அவருக்கு மன அமைதியையும், திருப்தியையும் நான் அருளுவேன்.
யார் ஒருவர் சாய் சத் சரிதம் புத்தகத்தை படிக்கிறாரோ அவருக்கு பாபாவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். பாபாவின் அற்புதங்களை படிக்க படிக்க விலைமதிப்பில்லாத ஞானம், பக்தி உண்டா கும். அவரது கதைகள் சராசரி மனிதர்களின் வாழ்க்கையில் நல்ல தெளிவை ஏற்படுத்தும்.
பாபாவின் போதனைகளை யார் ஒருவர் உள்வாங்கிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அஷ்டாங்க யோகம், தியான பேரின்பம் செய்த அளவுக்கு நன்மைகள் வந்து சேரும். இதன் காரணமாக வாழ்வில் பேரானந்த பெருநிலையை எட்ட முடியும்.
முதலில் இந்தநிலைக்கு செல்ல முடியாவிட்டாலும் பாபாவின் சத் சரிதத்தை படிக்க படிக்க நம்மை நாமே உணர முடியும். பாபா சொல்லி இருக்கும் அறிவுரைகள் நமக்குள் நம்பிக் கையை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சாய்பாபாவே சொல்லி உள்ளார். அதையும் கேளுங்கள்.
எனது புகழைப்பாடுபவனும், சரித்திரத்தை சுவையாக சொல்பவனும் எப்போதும் என்னைப் பார்க்க முடியும். அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களை சுற்றியே நான் இருந்து கொண்டிருக்கிறேன்.
சத் சரிதத்தில் உள்ள கதைகளை கேட்டு உணருபவர்கள் ஆத்மார்த்தமாகவும், இதய பூர்வமாகவும் என்னிடம் அன்பை பெறுவார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே மகிழ்ச்சி உண்டாகும்.
சாய் சத் சரிதத்தை அவசியம் ஒவ்வொரு பாபா பக்தரும் படிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் சாய் சத் சரிதத்தை படித்து முடித்தால் நாம் கேட்ட வரங்களையெல்லாம் சாய்பாபா நிறைவேற்றி தருவார் என்பது உலகம் முழுக்க வாழும் பாபா பக்தர்களின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இப்படி ஒரு வாரம் சத் சரிதம் பாராயணம் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. பாபா படம் அல்லது சிலையை தயார் செய்து வைத்து கொள்ளவும். அதன் அருகில் ஆசனத்தின் மேல் சுத்தமான துணி விரித்து அதன் மேல் சத் சரிதம் புத்தகத்தை வைத்து பூஜைகள் நடத்தவும்.
ஏதாவது ஒரு வாரம் வியாழக்கிழமை சத் சரிதம் படிக்க தொடங்கவும். சத் சரிதம் மொத்தம் 50 அத்தியாயங்களைக் கொண்டது. இவற்றை 7 நாட்களில் படித்து முடிக்க வேண்டும். முதல் நாள் (வியாழக்கிழமை) 1 முதல் 7 அத்தியாயம் வரை படிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை 8 முதல் 15, சனிக்கிழமை 16 முதல் 22, ஞாயிற்றுக்கிழமை 23 முதல் 30, திங்கட்கிழமை 31 முதல் 37, செவ்வாய்க்கிழமை 38 முதல் 44, புதன்கிழமை 45 முதல் 50 என்ற வகையில் படித்து முடிக்க வேண்டும்.
50-வது அத்தியாயத்துக்குப் பிறகு உள்ள முடிவுரை, ஆரத்தி, ஸ்ரீ சாய்பாபா அஷ்டோத்ர சதநாமவளி ஆகியவற்றையும் இறுதியில் சேர்த்துப் படிக்கலாம்.
தினமும் காலையில் குளித்து விட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாய்பாபா உருவத்தை மனதுக்குள் கொண்டு வந்து சத் சரிதத்தை பாராயணம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் மனதில் பக்தியும், அமைதியும் நிரம்பி இருக்க வேண்டும்.
சத் சரிதம் பாராயணம் நிறைவு செய்யும் நாளில் பாபாவுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும். அந்த பூஜைக்கு உறவினர்கள், நண்பர்களையும் அழைக்கலாம். உங்கள் சக்திக்கேற்றவாறு அவர்களுக்கு விருந்து கொடுத்து, தட்சணையும் கூட கொடுக்கலாம். இத்தகைய வழிபாடுகள் மூலம் சத் சரிதத்தின் பலன்களை பெற முடியும்.
குறிப்பாக சத் சரிதத்தை நம்பிக்கையோடு படிப்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தினமும் சத் சரிதம் படித்து வந்தால் பாபா கூறி உள்ள நல்ல கருத்துக்களை நம் மனதுக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியும். நாளடைவில் சில கருத்துக்கள் நம் ஆழ் மனதுக்குள் நிலைபெற்று விடும். இதன் காரணமாக நமது வாழ்க்கை அமைதியான சூழ்நிலைக்கு மாறும். ஒரு கட்டுக்கோப்பான நிலையை சாய் சத் சரிதம் கொண்டு வந்து சேர்க்கும். இதனால் பக்தர்களின் வாழ்க்கை நெறி தவறாத ஒன்றாக இருக்கும்.
இத்தகைய சிறப்புடைய சாய் சத் சரிதம் முதலில் மராட்டிய மொழியில் எழுதப்பட்டது. பிறகு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. நேபாள மொழியில் கூட சத் சரிதம் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது.
சாய் சத் சரித நூலை சீரடி சாய்பாபா டிரெஸ்ட் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. தமிழில் மொழி பெயர்த்து வெளியாகி உள்ள நூலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதுவரை 22 பதிப்புகளில் பல லட்சம் சாய் சத் சரிதம் தமிழ் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
சத் சரிதத்தில் உள்ள கருத்துக்களை படிக்க படிக்க வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை பக்தர்கள் உணர்வதால்தான் நிறைய பேர் அதை வாங்கி அன்பளிப்பாகவும் கொடுக்கிறார்கள். எனவே சத் சரிதம் படிக்க வேண்டும் என்பது பாபா காட்டிய வழி.
முடிந்தால் தினமும் சத் சரிதம் பாராயணம் செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கையை கற்பனைக்கும் எட்டாத வகையில் மேம்படுத்தும். சாய் சத் சரிதம் படிக்க, படிக்க அது நம் உயிர் மூச்சாகவே மாறிவிடும். நமது மனநிலையில் வைராக்கியம் பலப்படும். நாளடைவில் நம் மனம் தெய்வீக சக்தி மண்டலமாக மாறி விடும்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சாய் சத் சரிதம் படித்தவர்களுக்கு சாய்பாபா ஏதாவது ஒரு வகையில் காட்சிக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவங்களே இதற்கு ஆதாரம்.
சத் சரிதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தை கொடுக்கும். ஆசைகள் நிறைவேறும். பாபா பாத கமலங்களை உங்கள் மனதால் நினைப்பதால் சம்சார சாகரத்தை எளிதில் கடப்பீர்கள் என்று சத் சரிதத்தின் முடிவுரையில் கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு இன்றே சத் சரிதம் படிக்கத் தொடங்குங்கள்.
இதேபோன்று சாய் பாபாவை தினமும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகும். இதற்கும் பாபா வழிகாட்டி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தி 13-ம் நாளை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 14 நாட்கள் கொண்டாடப்படும். முதல்நாளான விநாயகர் சதுர்த்தி அன்று 60 கிலோ கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்பின் ஒவ்வொரு நாளும் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உள்ள உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூல கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன.
13-ம் நாளான நேற்று மதியம் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் விநாயகருக்கு திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம், அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்பட 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
14-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனையும் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.
உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த மனிதர்கள் ஒவ்வொரு வரும் பலவிதமான இன்னல்களை தினமும் சந்திக்கிறார்கள். 27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு.அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.
புரட்டாசி-1- (17-ந் தேதி,வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: திருவோணம்
சுக்கிரன், சந்திரனின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் இந்த நாளில் காலை 8 மணி முதல் -9 மணி வரையான சந்திர ஒரையில் மல்லிகைப் பூ சாற்றி மாரியம்மனை வழிபட்டால் மாமியார்- மருமகள் பிணக்கு, தாய்-மகள் கருத்து வேறுபாடு மறையும்.
புரட்டாசி-2- (18-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: அவிட்டம்
சனி, செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மாலை 4.30 - மணி முதல் 6 மணி வரையான சனிப் பிரதோஷ நாளில் நந்தியம் பெருமானுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட்டால் தீராத வழக்கு, சொத்து பிரச்சினைகள் தீரும்.
புரட்டாசி-3- (19-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் : சதயம்
சூரியன்,ராகுவின் ஆதிக்கம் மிகுந்த இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் -6 மணி வரையான ராகு வேளையில் நெய் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் தந்தை மகன் பிணக்கு, இருதய நோய், பார்வை குறைபாடு ராகு/ கேது தோஷம், கால சர்ப்ப தோஷத்தின் தன்மை குறையும்.
புரட்டாசி-4- (20-ந் தேதி, திங்கட்கிழமை)
நட்சத்திரம்: பூரட்டாதி
குருச்சந்திர யோகமும் பவுர்ணமியும் இணைந்த நாளில் பிராமணர்களுக்கு உணவு, உடை தானம் தந்தால் தன வரவு தாராளமாகும்.
புரட்டாசி-5- (21-ந் தேதி, செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: உத்திரட்டாதி
செவ்வாய், சனி ஆதிக்கம் இணைந்த நாளில் இரவு 8-மணி முதல் 9 மணி வரையான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட்டால் விபத்து, கண்டம், தீராத, இனம் புரியாத நோய் குணமாகும்.
புரட்டாசி-6- (22-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: ரேவதி
புதனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் காலை 6 -மணி முதல் 9 மணி வரையான புதன் ஓரையில் ஹயக்கிரீவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கற்றல் குறைபாடு நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.
புரட்டாசி-7 - (23-ந் தேதி , வியாழக்கிழமை)
நட்சத்திரம்: அஸ்வினி
குரு, கேது ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் ஆஞ்ச நேயருக்கு வாழைப்பழ மாலை சாற்றி வழிபட்டால் கோபித்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர்கள், தலைமறைவாக வாழ்பவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.
புரட்டாசி-8- (24-ந் தேதி, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம் : பரணி
சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் வயதான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், ஜாக்கெட் பிட், இனிப்பு கொடுத்து ஆசி பெற திருமணத்தடை அகலும்.
புரட்டாசி-9- (25-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: கிருத்திகை (காலை 11.34- மணிக்கு பிறகு)
சனி மற்றும் சூரியனின் கதிர் வீச்சுகள் நிறைந்த நாள். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் -5 மணி வரையான சூரிய ஓரையில் ஒரு கிலோ கோதுமையை தானம் தர அரசியல் பதவியில் உள்ள இடர்கள் நீங்கும்.
புரட்டாசி-10- (26-ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை)
நட்சத்திரம்: ரோகிணி (மதியம் 2.33- மணிக்கு மேல்)
சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் இயங்கும் நாள்.சித்த பிரம்மை மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, சுய முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பவர்கள் மாலை 4 -மணி முதல் 5 மணிக்குள் சந்திர ஒரையில் பச்சரிசியால் செய்த உணவை தானம் தர மாற்றம் உண்டு
புரட்டாசி-11- (27-ந் தேதி. திங்கட்கிழமை)
நட்சத்திரம்: ரோகிணி (மாலை 5.42 மணி வரை)
சந்திரனின் பரிபூரண இயக்கம் நிறைந்த இன்றைய நாளில் காலை 6-மணி முதல் 7 மணி வரையான சந்திர ஒரையில் பச்சரிசி மாவில் விளக்கு செய்து 2 நெய் தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபட்டால் விரும்பிய ஊருக்கு உத்தியோக மாற்றம் கிடைக்கும்.
புரட்டாசி-12- (28-ந்தேதி, செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: மிருகசீரிடம்
செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 3 -மணி முதல் 4.30 மணி வரையான ராகு வேளையில் எலுமிச்சை சாதம் செய்து 7 பேருக்கு தானம் செய்வதுடன் துர்க்கை, காளியை வழிபட்டால் திருமணத் தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலும். அதே நாளில் மகா வியதீ பாதம் இருப்பதால் புனித நீர் நிலைகளில் நீராடி நீத்தார்களை வழிபட்டால் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும்.
புரட்டாசி-13- (29-ந் தேதி. புதன்கிழமை)
நட்சத்திரம்: திருவாதிரை
புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் எதிரொலிக் கும் இந்த நாளில் பகல் 12- மணி முதல் 1.30 மணி வரையான ராகு வேளையில் சரபேஸ்வரரை வழிபட்டால் பட்டா, சிட்டா அடங்கல் இல்லாத சொத்துப்பிரச்சினை, உயிலால், முறையான பத்திரங் கள் இல்லாததால் நிலவும் சொத்துப்பிரச்சினைகள் தீரும்.
புரட்டாசி-14 (-30-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம்: புனர்பூசம்
குருவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 1- மணி முதல் 2 மணி வரையான குரு ஓரையில் ராமர் பட்டாபிசேக படத்தின் முன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் எழுதினால் பிரிந்த கணவன் மனைவி, இழந்த சொந்தங்கள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.இழந்த பொன், பொருள் மீண்டும் கிடைக்கும்.
புரட்டாசி-15 -(1--10-2021, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: பூசம்
சனி,சுக்கிரனின் ஆசிகள் நிறைந்த இந்த நாளில் 8 உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் தந்தால் செய்யும் தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தி யோகத் தில் உயர் அதிகாரிகளால் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.
புரட்டாசி-16 -(2--ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம் : ஆயில்யம்
புதன் மற்றும் சனியின் ஈர்ப்பு அதிகம் உள்ள இந்த நாளில் மாலை 6 - மணி முதல் 7 மணி வரை யான புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு 5 நெய்தீபம் ஏற்றி துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாமின் தொடர்பான பிரச்சினை அகலும். தத்துக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புரட்டாசி-17 -(3-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் : மகம்
சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் பகல் 12 மணி முதல்-1.30 மணி வரையான எம கண்ட நேரத்தில் ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை 108 முறைச் சொல்வதுடன் சாலை யோரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் 7 பேருக்கு முழுச் சாப் பாடு தண்ணீருடன் தானம் தந்தால் அரச பதவி நிலைக்கும்.அரசாங்க உத்தியோகத்தில் உள்ள இடர் தீரும்.
புரட்டாசி-18 -(4-ந் தேதி, திங்கட்கிழமை
நட்சத்திரம்: பூரம்
சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இணைந்த அதே நாளில் பிரதோஷமும் இருப்ப தால் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மாது ளைச் சாறால் சிவனுக்கு அபிசேகம் செய்தால் கருப்பை, மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச் சினைகளும் தீரும்.
புரட்டாசி-19- (5-ந் தேதி, செவ்வாய்க் கிழமை)
நட்சத்திரம்: உத்திரம்
செவ்வாய் மற்றும் சூரியனின் சக்தி சேர்ந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரை யான சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்து சூரிய நமஸ் காரம் பண்ண அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும்.
புரட்டாசி-20 -(6-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: ஹஸ்தம்
புதன் மற்றும் சந்திரனின் சக்திகள் வெளிப் படும் இந்த நாளில் சிறு குழந்தைகளுக்கு கல்வி, உணவு சம்பந்தமான உதவி செய்ய தீராத தோல்வியாதி, வலிப்பு நோய் தீரும். அன்றைய தினம் மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து உணவுப்படையலிட்டு வழிபட வேண்டும். இயன்ற அளவு உணவு தானம் வழங்குவது மேலும் சிறப்பு.
புரட்டாசி-21- (7-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம் : சித்திரை
குரு மற்றும் செவ்வாயின் அதிர்வு கள் மிகுந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரையான செவ்வாய் ஓரையில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு 108 செங்கல் தானம் வழங்கினால் நிதிப் பற்றாக்குறையால் தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதப் படுத்தப்படும்.
புரட்டாசி-22- (8-ந் தேதி, வெள்ளிக் கிழமை)
நட்சத்திரம் : சுவாதி
சுக்கிரன்,ராகுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் விதவை பெண்களுக்கு அசைவ பிரியாணி தானம் வழங்கினால் தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி குடும்பத்துடன் இணைவார்கள்.
புரட்டாசி- 23- (9-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: விசாகம்
குரு,சனி ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் காலை 7 மணி முதல் -8 மணி வரையான குரு ஒரையில் கோ பூஜை நடத்தினால் தோஷம் குறையும். இயலாதவர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை தந்தால் போதும்.
புரட்டாசி-24- (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம்: அனுஷம்
சூரியன், சனியின் ஆதிக்கம் கலந்த இந்த நாளில் சிவனுக்கு காலை 6- மணி முதல் 7 மணி வரையான சூரிய ஓரையில் வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தந்தை- மகன் மீண்டும் இணைவார்கள்.குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபிராப்தி கிட்டும்.
புரட்டாசி-25- (11-ந் தேதி, திங்கட்கிழமை)
நட்சத்திரம்: கேட்டை (பகல் 12.56 மணி வரை)
சந்திரன் மற்றும் புதனின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிலுவையில் உள்ள வரா கடன்கள் வசூலாகும்.
புரட்டாசி-26- (12-ந் தேதி,செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: பூராடம் (காலை 11.26 மணிக்கு பிறகு)
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ள இந்த நாளில் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகருக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்.
புரட்டாசி-27- (13-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: உத்திராடம் (காலை 10.19 மணிக்கு பிறகு)
புதன் மற்றும் சூரியன் இணைந்து புதன் ஆதித்ய யோகம் பெற்ற இந்த நாளில் நவ கிரகத்தில் உள்ள சூரியன் மற்றும் புதன் பகவானை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
புரட்டாசி-28- (14-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம்: திருவோணம் (காலை 9.36 மணிக்கு மேல்) சரஸ்வதி பூஜை
அன்று சகல கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை மாணவ மணிகள் வழிபட்டால் ஞான விருத்தி உண்டாகும்.
புரட்டாசி-29- (15-ந்தேதி, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: அவிட்டம் (காலை 9.17 மணிக்கு மேல்) விஜய தசமி
அனைத்து வித வெற்றியை தந்தருளும் நாளான விஜயதசமி அன்று தடைபட்ட சுப விஷயங்களைத் தொடங்கினால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
புரட்டாசி-30- (16-ந் தேதி சனிக்கிழமை)
நட்சத்திரம்: சதயம் (காலை 9.23 மணிக்கு மேல்)
சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் 9 -மணி முதல் 10.30 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட்டால் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
புரட்டாசி-31 - (17-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம்: பூரட்டாதி (காலை 9.53 மணிக்கு மேல்)
சூரியன் மற்றும் குருவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் அல்லது சிவன் கோவில்கள், சித்தர்கள் சமாதிகளில் உலவாரப்பணிகள் செய் தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

ராகவேந்திரர் தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவர் நடத்திய ஒரு அற்புதத்தைப் பற்றியே இங்கே பார்க்க இருக்கிறோம்.
ராகவேந்திர சுவாமிகள், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஆவார். இவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்ற பக்த பிரகலாதரின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இவர் தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவர் நடத்திய ஒரு அற்புதத்தைப் பற்றியே இங்கே பார்க்க இருக்கிறோம்.
ராகவேந்திரர் ஒவ்வொரு ஊராகக் சென்று, அங்கு மக்களிடத்தில் வைணவ நெறியைப் பற்றி எடுத்துரைத்து வந்தார். ஒரு முறை ஒரு ஊரில் தங்கியிருந்தார். அந்த ஊரில் உள்ள கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக, ஒரு அண்டா நிரம்ப, பழச்சாறு செய்து வைக்கப்பட்டிருந்தது.
அப்போது கிராம தலைவரின் வீட்டில் இருந்த சிறிய குழந்தை, அங்கே விளையாடிக்கொண்டிருந்தது. அது பழச்சாறு இருந்த அண்டாவைப் பார்த்து வாய் பிளந்தபடி அதன் அருகேச் சென்றது. பெரிய அளவில் இருந்த அண்டாவினுள் எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, தடுமாறி அண்டாவுக்குள் விழுந்து விட்டது. அருகில் யாரும் இல்லாத காரணத்தால், குழந்தை பழச்சாறுக்குள் மூழ்கிப்போனது. அனைவரும் ராகவேந்திரருடன் சேர்ந்து மூலவராமருக்குரிய பூஜையில் தங்கள் விழிகளை அகற்றாமல் ஈடுபட்டிருந்தனர்.
அதனால் சமயலறையில் நடந்த அந்த விபரீதத்தை யாரும் அறியவில்லை. குழந்தை அண்டாவுக்குள் மூழ்கிய அதே நேரம், ராகவேந்திரர் பூஜைக்காக வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்துவிட்டது. பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டுப் பெற்ற ராகவேந்திரர், உள்ளே நடந்ததை அறிந்து கொண்டார். பூஜை முடிந்ததும், பிரசாதங்கள் வழங்கும் நேரம் வந்தது. உடனே ராகவேந்திரர், கிராம தலைவரை அழைத்து, “உங்கள் குழந்தையை அழைத்துவாருங்கள்” என்றார்.
அப்போதுதான் கிராம தலைவரும், அவரது மனைவியும் பிள்ளையைத் தேடினர். குழந்தையை, ராகவேந்திரர் காலில் விழுந்து வணங்க வைக்க வேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இருவரும் நாலாபுறமும் குழந்தையைத் தேடினர். முடிவில் சமையலறையில் பழச்சாறு வைக்கப்பட்டிருந்த அண்டாவுக்குள் குழந்தை விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் துவண்டு போனார்கள். குழந்தை இறந்த விஷயம் அறிந்தால், வீட்டிற்கு வந்தவர்கள் அபசகுனமாக கருதுவார்கள். மேலும் அனைவரும் பட்டினியாக செல்லும் நிலை ஏற்பட்டுவிடுமே என்று கணவனும், மனைவியும் வருந்தினர்.
எனவே குழந்தை இறந்ததை அவர்கள் மறைக்க முயற்சித்தனர். ஆனால் ராகவேந்திரர், விடாப்பிடியாக குழந்தையை அழைத்து வந்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி, கிராம தலைவர் நடந்த விவரத்தை ராகவேந்திரரிடம் கூறினார். அதோடு குழந்தையைக் கொண்டு வந்து அவரது பாதத்தில் சமர்ப்பித்து கதறி அழுதார்.
ராகவேந்திரர் தனது கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து குழந்தையின் மீது தெளித்தார். பின் கண் மூடிப் பிரார்த்தித்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறந்து போன அந்தக் குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டது. நின்றுபோன இதயம் மீண்டும் துடித்தது. குழந்தை பழைய படியே துள்ளி எழுந்து அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது. கூடியிருந்தவர்கள் அனைவரும் பரவசம் அடைந்தனர்.
கிராமத் தலைவரும், அவரது மனைவியும், பூஜைக்காக வந்திருந்த மக்கள் அனைவரும் ராகவேந்திரரின் சக்தியைக் கண்டு மெய்யுருகி நின்றனர்.

திருநீற்றுப் பட்டை அடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. வேதங்கள் மட்டுமின்றி, மேலும் பல பொருட்களும் அந்த மூன்று திருநீற்று பட்டைகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றுள் சில..
சிவாலயங்களுக்குச் செல்லும் பலர், கோவிலில் இறை தரிசனம் முடிந்ததும் தரும் விபூதியை வாங்கி, நெற்றியில் மூன்று விரல்களால் நீண்ட கோடுகளை பூசிக்கொள்வார்கள். இதற்கு ‘திருநீற்றுப் பட்டை’ என்று பெயர். நாம் பட்டை அடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக பார்க்கப்படுகிறது. ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ‘ரிக்வேதம்’, நடுவிரல் கொண்டு இடும் கோடு ‘யஜூர் வேதம்’, மோதிரவிரலால் இடும் கோடு ‘சாமவேதம்’ ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.
வேதங்கள் மட்டுமின்றி, மேலும் பல பொருட்களும் அந்த மூன்று திருநீற்று பட்டைகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றுள் சில..
* பிரம்மா, விஷ்ணு, சிவன்,
* சிவன், சக்தி, கந்தர்
* அறம், பொருள், இன்பம்
* குரு, லிங்கம், சங்கமம்
* படைத்தல், காத்தல், அழித்தல்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 2 நாட்கள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. தேர்பவனி வரும் இடத்தில் மீன்களை உலர வைத்து இருந்ததால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான 1-ந்தேதி அம்மன் பூஞ்சப்பர பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை யாகசாலை பூஜைகள் நடந்தது,
காலையில் யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் உள்பிரகார சப்பர பவனியும், தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் சேவையும், இரவு அன்னதானமும் நடைபெற்றது.
நிறைவு நாளான 1-ந்தேதி அம்மன் பூஞ்சப்பர பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நடைபெறும் 11 நாட்களும் தினசரி அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, பக்தர்களு்ககு மூன்று வேளையும் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் அய்யா பிரம்மாவாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று அய்யா பிரம்மாவாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆஞ்சநேயர் வாகனத்திலும், 26-ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தலும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை நீங்கும் சக்தி பெற்றதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேவலோகத்தின் பிரதான சிற்பியாக இருப்பவர், விஸ்வகர்மா. இவரது மகள் சமுக்ஞா. இவளைத்தான் சூரிய பகவான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல், சமுக்ஞா தவித்து வந்தாள். இதனால் தன்னுடைய நிழலை, தன்னைப் போன்ற உருவமாக மாற்றினாள். அந்த நிழல் பெண்ணின் பெயர் ‘சாயா.’ அவளை தன்னுடைய கணவனிடம் விட்டுவிட்டு, சமுக்ஞா தனது தந்தையிடம் சென்று விட்டாள்.
எமதர்மனின் மூலமாக இந்த விஷயத்தை அறிந்த சூரியன், தன்னுடைய மனைவி சமுக்ஞாவை அழைத்துவருவதற்காகப் புறப்பட்டார். அதற்கு முன்பாக, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. அதைப் பின் தொடர்ந்து சென்றார், சூரியன். வானில் சென்ற ஜோதியானது, இந்த திருத்தலம் இருக்கும் இடத்தில் உள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், சூரியனுக்கு காட்சி கொடுத்து, சமுக்ஞாவை சூரியனுடன் சேர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ அருளினார்.
அதன்பின்பு, சூரியனின் வேண்டுகோளின்படி, இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது.
பின்னாளில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இந்த வழியாக தன்னுடைய படை பரிவாரங்களுடன் சென்றான். அப்போது தடாகத்தில் இருந்த ஒரு தாமரை மட்டும் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மன்னன், அந்த தாமரையைப் பறிக்க நினைத்து, தடாகத்தில் இறங்கி, தாமரையை நோக்கிச் சென்றான். அவன் அருகில் வரவர, தாமரையும் நகர்ந்து சென்றுகொண்டே இருந்ததே தவிர, அவனது கையில் அகப்படவில்லை.
இதனால் ஆச்சரியம் அடைந்த மன்னன், தன்னுடைய உடைவாளை எடுத்து தாமரைப்பூவின் தண்டுப்பகுதியை வெட்டினான். அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. மேலும் தாமரையின் மின்னல் ஒளி பாய்ந்து, மன்னனின் பார்வையும் பறிபோனது. தன்னுடைய செயலுக்கு வருந்திய மன்னன், சிவபெருமானை நினைத்து வேண்டினான். இதையடுத்து அவனுக்கு கண்பார்வையை வழங்கிய சிவபெருமான், மன்னனுக்கு காட்சியும் கொடுத்தார். அதோடு தான் இந்த தடாக தாமரையில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார்.
மன்னன் அந்த லிங்கத்தை எடுத்து தடாகத்தின் கரையில் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால், இத்தல சிவபெருமானுக்கு, ‘புஷ்பரதேஸ்வரர்’ என்று பெயர்.
சுந்தரமூா்த்தி நாயனாரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்துகொண்டார். ஆகையால் சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னிதியை பார்த்தபடி இருக்கிறார். கோஷ்டத்தில் பல்லவ விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், கண்வ மகரிஷி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சூரியன் எப்போதும், இத்தல சிவபெருமானை வழிபட்டபடியே இருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) தொடங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்திற்கு செல்ல திருவள்ளுர், சென்னையில் இருந்து பஸ் வசதியுள்ளது.

நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அந்த அவதாரத்தில் இரண்யகசிபுவை தன்னுடைய நகங்களால் கீறி வதம் செய்தார். அவரது நகமாக இருந்தவர் சுதர்சனப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு தன்னுடைய கரங்களில் வில், வாள், கதாயுதம், சங்கு, சக்கரம் என்று ‘பஞ்சாயுதம்’ கொண்டு காட்சி தருபவர். இதில் முதன்மையானதாக, சுதர்சன சக்கரம் உள்ளது. சுதர்சனரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* சுதர்சனருக்கு உரிய சிறப்பு நட்சத்திரம், சித்திரை ஆகும். இந்த நாளில் அவரை வழிபாடு செய்வது விசேஷமான பலனைத் தரும்.
* கும்பகோணம் சக்கர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில், பிரம்மதேவன் நீராடி யாகம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. அப்போது பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிப்பட்டது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான் இன்று, சக்ரபாணியாக அருள்பாலிக்கிறார்.
* சாளக்கிராமங்களில் ‘சுதர்சன சாளக்கிராமம்’ மிகச் சிறப்புக்குரியது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம், சுதர்சனமாகும். திருமாலின் சக்கராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.
* பெருமாள் ஆலயங்களில் சக்கரத்தாழ்வாரை தரிசிப்பவர்கள், அவருக்கு பின்னால் நரசிம்மர் உருவம் இருப்பதை கண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். சக்கரத்தாழ்வாரை வலம் வரும்போது, பின்புறம் உள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும். இவர்கள் இருவரையும் வலம் வந்து வழிபடும்போது, நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமி களையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
* நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அந்த அவதாரத்தில் இரண்யகசிபுவை தன்னுடைய நகங்களால் கீறி வதம் செய்தார். அவரது நகமாக இருந்தவர் சுதர்சனப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
* வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனனுக்குத் தானம் கொடுக்க முன்வந்தான், மகாபலி சக்கரவர்த்தி. அப்போது நீர்வார்க்கும் கமண்டலத்திற்குள் வண்டாக மாறி அடைத்துக் கொண்டார், சுக்ராச்சாரியார். இதையறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியார் கண் பார்வையை இழந்தார். இங்கு தர்ப்பை புல்லாக வந்தவரும், சுதர்சனர்தான்.
* திருவரங்கம், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் கோவில், திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
* நெருப்பு தலைமுடியும், மூன்று கண்களும், 16 கரங்களும், அதில் பதினாறு வித ஆயுதங்களும் கொண்டவர், சுதா்சனப் பெருமாள். 16 திருக்கரங்களுடன் அமைந்த சுதர்சனப் பெருமாளின் திருஉருவத்தை வழிபாடு செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். தீவினைகள், தோஷங்கள் அகலும்.
* சக்கரத்தாழ்வாரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது விசேஷமானதாகும்.

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
திருமலை :
திருப்பதியில் தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தரிசன டோக்கன் திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கனை பெற ஒருநாள் முன்னதாகவே பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இன்று (புதன்கிழமை) தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டது.
இதனால், நாளை தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக திட்டமிடாததால் இவ்வாறு நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இதனால், வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பின்னர் அதனை அப்படியே நிறுத்தி விட்டு இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பலனுள்ள பரிகாரம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 வரை மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.