என் மலர்
ஆன்மிகம்

அய்யா வைகுண்டர் சிவபதியில் அன்ன வாகன உற்சவம்
கொண்டையம்பாளையத்தில் அய்யா வைகுண்டர் சிவபதியில் அன்ன வாகன உற்சவம்
வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் அய்யா பிரம்மாவாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று அய்யா பிரம்மாவாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆஞ்சநேயர் வாகனத்திலும், 26-ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தலும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Next Story