என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.
    X
    உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.

    உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா தொடங்கியது

    உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான 1-ந்தேதி அம்மன் பூஞ்சப்பர பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
    உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை யாகசாலை பூஜைகள் நடந்தது,

    காலையில் யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் உள்பிரகார சப்பர பவனியும், தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் சேவையும், இரவு அன்னதானமும் நடைபெற்றது.

    நிறைவு நாளான 1-ந்தேதி அம்மன் பூஞ்சப்பர பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நடைபெறும் 11 நாட்களும் தினசரி அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, பக்தர்களு்ககு மூன்று வேளையும் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×