என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிறைவு வாழ்க்கை அமையும்.
    மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் முதல் வியாழக்கிழமை காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிப்பக்க வேண்டும்.

    பூஜைக்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம்,குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து வணங்க வேண்டும். நிவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் முதலியவைகளை படத்தின் முன் வைத்த பின் பூஜையைத் தொடர வேண்டும்.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம்,குங்குமம்,துளசி மாலை சாத்த வேண்டும். அதே போல குத்து விளக்கிற்கும் சந்தனம்,குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேண்டும்.

    பூஜையின் போது மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். மகான் படத்திற்கு தீப, தூப ஆராதனைகள் காட்டி தேங்காய் உடைத்த பின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசியை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    “பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே”

    என்ற ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். இது போல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும்.

    அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு,பழம்,படைத்து மணமிக்க மலர்களால் அலங்கரித்து, தூப தீப ஆராதனைகள் செய்ய வேண்டும். ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில், பானகம், துளசி நீர், பால் இதுபோன்ற திரவ ஆகாரங்களை அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் சாதம் சாப்பிடலாம். இது போல் ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிறைவு வாழ்க்கை அமையும்.
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு பெரிய தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்பை உடைய சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனையொட்டி கடந்த சில மாதங்களாக தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தேர் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளை சமீபத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

    இந்தநிலையில் பெரிய தேரில் உள்ள சிற்பங்களில் படிந்துள்ள தூசிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.இதற்காக மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    நாராயணரின் திருநாமத்தை ‘நாராயண நாராயண’ என்று நொடிக்கு ஒரு முறை உச்சரித்தபடியே இருப்பவர் என்று புராணங்கள், நாரத முனிவரைப் பற்றி கூறுகின்றன.
    நாராயணன் என்ற சொல்லில் உள்ள ‘நாரம்’ என்ற பதத்திற்கு, ‘தண்ணீர்’, ‘தீர்த்தம்’ என்று அர்த்தம். பெருமாள் கோவில்களுக்குச் சென்றால், அங்கு துளசி தீர்த்த பிரசாதம் வெகு பிரசித்தம். தீர்த்தம் என்பது நாராயணரின் பெயரில் பாதி என்பதால்தான், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    நாராயணன் என்ற சொல்லின் மறுபாதியில் உள்ள ‘அயணன்’ என்பதற்கு, ‘படுக்கை உடையவன்’ என்று அர்த்தம். ‘பாற்கடலாகிய தீர்த்தத்தில் படுத்திருப்பவன்’ என்பதே ‘நாராயணன்’ என்ற சொல்லுக்கு விளக்கமாகும்.

    நாரம் என்ற சொல்லிற்கு, ‘பிரம்ம ஞானம்’ என்ற பொருளும் உண்டு. ‘இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது’ என்ற தத்துவத்தையே நாராயணனின் நாமம் நமக்கு உணர்த்துகிறது.

    நாராயணரின் திருநாமத்தை ‘நாராயண நாராயண’ என்று நொடிக்கு ஒரு முறை உச்சரித்தபடியே இருப்பவர் என்று புராணங்கள், நாரத முனிவரைப் பற்றி கூறுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக நாரதர் இருக்கிறார். அவர் தோன்றியபோது, இந்த உலகத்தில் நீரின் அளவு குறைவாகவே இருந்ததாகவும், அவர் பிறப்புக்குப் பின், அவர் உச்சரித்த ‘நாராயண நாராயண’ என்ற நாமத்தின் காரணமாக உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் பெருகியதாகவும் சொல்லப்படுகிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம். இந்த தேருக்கு தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற சிறப்பும் உண்டு.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடன்மர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம். இந்த தேருக்கு தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற சிறப்பும் உண்டு.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியதால் இந்த ஆண்டு கடந்த 5ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது. 9ந்தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    10ந்தேதி மாலை கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து நேற்று 11ந் தேதி காலை 6 மணிக்கு அதிர்வேட்டு, மேளதாளம் மற்றும் பஞ்சகவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர். பின்னர் ஏராளமான பக்தர்கள் ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு பெரிய தேர்வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை,ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. பின்னர் நாளை 13ந் தேதி காலை 8 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 14ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. 15ந் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது. 16ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில்வாகன காட்சி நடைபெறுகின்றன.

    தஞ்சை களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவினாசியில் நடைபெறும் தேரோட்ட விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2ஆண்டு இடைவெளிக்கு பின் தேரோட்டம் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    இதையும் படிக்கலாம்...திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை
    நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும்.  இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

    நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் ராகு-கேது தோஷ பரிகார பூஜை நடந்தது. பூஜையை சிவாச்சாரியார் கவுரிசங்கர் நடத்தினார்.

    இதில் ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள பக்தர்கள், வெள்ளியால் ஆன நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியங்கள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.
    காயாமொழி ராமநாதபுரம் இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நாளை அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது.
    திருச்செந்தூர் அருகே காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-ம் ஆண்டு வருசாபிஷேகம், பரிகார பூஜை மற்றும் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் சுதர்சன ஹோமம் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலைகணபதி ஹோமம், தில ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வல்லநாடு, சங்கரன்கோவில் செல்ல புறப்படுகின்றனர்.நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து  இரவு 7 மணிக்குமேல் கொடை விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள பொற்கொடி அம்மன் புஷ்பரதஏரித் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே வரத்தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் பசுந்தழை கட்டி, தென்னை ஓலைகளை கூடாரம் போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடன் வந்தனர்.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மன் புஷ்ப ரதத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரதம் உலாநடந்தது. புஷ்ப ரதத்தை விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஏரிக்கோவிலை பகல் 2.50 மணிக்கு வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏரியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏரியில் சேறும், சகதியுமாக இருந்ததால் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பக்தர்கள் ஆங்காங்கே உள்ள நிலத்தில் பொங்கல் வைத்தனர்.
    விழாவிற்கு வந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் அழைத்து வந்து கால்நடைகளுடன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர். ஏரியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததாலும், காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததாலும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்ததால் பக்தர்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் தண்ணீர், மோர் வழங்கினர்.

    புஷ்ப ரதம் ஏரிக்கோவிலை வந்தடைந்தவுடன் தேர் மீது உப்பு, மிளகு, கோழி ஆகியவற்றை சூறையிட்டு வழிபட்ட பின்னர்  மூலவர் அம்மனை தரிசிக்க பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பெரும்பாலான பக்தர்கள் மூச்சு திணறினர். விழாக்குழுவினர் அவசரமாக செயல்பட்டு போலீசாரை வரவழைத்து பக்தர்கள் வெளியேறுவதற்கான வழியை சீரமைத்தனர்.

    திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம்  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் மா.ஜெயா, ஆய்வாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் ம.சசிகுமார், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் சங்கர், வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், சுதாகரன், துணைத் தலைவர் பிரத்தி வெங்கடேசன் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானம், அணைக்கட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஷங்கர். கோவில் கணக்கர்கள் ஆறுமுகம், ஆனந்தன் மெய்காப்பாளர் சரவணன் மற்றும் வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.
    யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும்.
    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

    யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.

    பொள்ளாச்சியில் மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பொள்ளாச்சி அமைதி நகரில் உள்ள மதுரை வீரன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8-ந் தேதி ஊர்சாந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மதுரை வீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி  நடைபெற்றது.

     பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கு தேவையான தாலி, மாலைகள் உள்ளிட்ட 25 வகையான சீர் வரிசை பொருட்களுடன் மேள, தாளம் முழுங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பாராம்பரிய முறைப்படி பொம்மியம்மன், வெள்ளையம்மனுக்கு தாலி கட்டி, மாலைகள் மாற்றி வேதங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அமுது பொங்கல் தீபாராதனை, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, சனிக்கிழமை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    இந்த கோவிலில் மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
    மூலவர்     –  வீழிநாதேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்)
    உற்சவர்     –  கல்யாணசுந்தரர்
    அம்மன்     –  சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)
    தல விருட்சம்     –  வீழிச்செடி
    தீர்த்தம்     –  விஷ்ணுதீர்த்தம்
    பழமை     –  1000 வருடங்களுக்கு முன்
    புராணப் பெயர்     –  திருவீழிமிழலை

    மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராகத் தந்தார். இதனால் தான் கோயில்களில் “கண்மலர்” காணிக்கை தரும் பழக்கம் உருவானது. விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தைக் கொடுத்தருளினார்.

    காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனைத் திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

    சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.

    இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்” உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. கோயில் மிகப்பெரிது. கோயில் முன்பு உள்ள தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். திருமால் விண்ணிலிருந்த்து கொணர்ந்த விண்ணிழி விமானமே கோயிலாயிற்று. இங்கு சிவபெருமான் காத்யாயினியை மணந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இச்சிற்பம் மூலவர் பின்புறம் உள்ளது. உற்சவ மூர்த்தம் மாப்பிள்ளை சுவாமி மிகவும் பிரசித்தி பெற்றது.

    இக்கோயிலை சுற்றி பத்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், புஷ்கரணி, இந்திர தீர்த்தம் முதலான 25 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது. இங்கு பாதாள நந்தி உள்ளது. முழுக் கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்து இரவாஞ்சேரி வழியாக செல்லும் பஸ்சில் (26 கி.மீ.,) தென்கரை ஸ்டாப்பில் இறங்கினால், கோயிலுக்கு நடந்தே சென்று விடலாம்.

    அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோவில்,
    திருவீழிமிழலை,
    திருவாரூர் மாவட்டம்.
    உங்களுடைய வாழ்க்கையில் முதலில் பெரிய விஷயங்களுக்கு இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
    செல்வந்தர் ஒருவர், முனிவரை சந்திப்பதற்காகச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரை, சில மணி நேரம் காத்திருந்து, அவர் கண் திறந்ததும் அவ ருக்கு முன்பாகப் போய் நின்றார். செல்வந் தரை பார்த்த முனிவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

    அதற்கு செல்வந்தர், ‘சுவாமி.. என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. அதை வைத்து நிறைய கேளிக்கைகளில் ஈடுபட்டு, சந் தோஷம் அடைந்தேன். ஆனால் எனக்கு மன அமைதியும், குடும்பத்தினரின் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

    மரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்த அந்த முனிவர், எதுவும் பேசாமல் எழுந்து அருகில் இருந்த தன்னுடைய குடிலுக்குள் நுழைந்தார். செல்வந்தருக்கோ, ‘முனிவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே’ என்ற வருத்தம் மேலோங்கியது. ஆனால் சிறிது நேரத்திலேயே குடிலுக்குள் இருந்து வெளிப்பட்ட முனிவர், செல்வந்தரிடம் வந்தார்.

    தன்னிடம் இருந்த பை ஒன்றை செல்வந்தரிடம் கொடுத்த முனிவர், “இந்த பையில் இங்கு இருக்கும் பெரிய பெரிய கற்களை எல்லாம் நிரப்பு” என்றார்.

    முனிவர் சொன்னபடியே அந்த பைக்குள் பெரிய பெரிய கற்களை எல்லாம் வைத்து நிரம்பினார், செல்வந்தர். இனிமேல் ஒரு பெரிய கல் கூட அதன் உள்ளே நுழையாது என்ற நிலை வந்ததும் முனிவரிடம் வந்து பையைக் காட்டினார்.

    அந்தப் பையைப் பெற்றுக்கொண்ட முனிவர், கீழே கிடந்த சிறிய கூழாங்கற்கள் சிலவற்றை எடுத்தார். அதை பையில் போட்டு, ஒரு குலுக்கு குலுக்கினார். கூழாற்கற்கள் அனைத்தும் பெரிய கற் களுக்கு ஊடே இருந்த இடைவெளியில் போய் இறங்கின. இதற்கு மேல் கூழாங்கற்களைக் கூட அந்தப் பைக்குள் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

    பின்னர் தரையில் இருந்து மண்ணை அள்ளி அந்த பைக்குள் போட்டு, ஒரு குலுக்கு குலுக்கினார். பெரிய கற்களுக்கும், சிறிய கூழாங்கற்களுக்கும் ஊடே இருந்த இடைவெளியை அந்த மணல் நிரப்பியது. இப்போது அந்த பைக்கு மேற்கொண்டு எதையும் போட முடியாது என்று முனிவரும் ஒப்புக்கொண்டார்.

    இப்போது முனிவர், செல்வந்தரை நோக்கி “இதே பையை முதலில் மணல் கொண்டு நிரப்பியிருந்தால், அதற்குள் பெரிய கற் களையும், கூழாங்கற்களையும் சேர்க்க இடம் இருந்திருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    “கண்டிப்பாக இருந்திருக்காது” என்றார் செல்வந்தர்.

    முனிவர் செல்வந்தருக்கான பதிலை இப்போது கூறினார். “வாழ்வும் அப்படிப்பட்டதுதான். வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் அனைத்தும் பெரிய கற்களைப் போன்றவை. வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள், கூழாங்கற்களைப் போன்றவை. கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் மணல் போன்றவை.

    உங்களுடைய வாழ்க்கையில் முதலில் பெரிய விஷயங்களுக்கு இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். அதுவே உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.” என்றார்.

    இப்போது மனம் தெளிவடைந்து வீட்டிற்குப் புறப்பட்டார், செல்வந்தர்.
    ந்து, இரண்டு விரல்களை விட்டவரின் விரல் இடுக்கில் ஒரு கல் தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து வெளிப்ப
    குருசேத்திர யுத்தம் முடிந்து, யுதிஷ்டிரர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அர்ச்சுனன் தனது நண்பரும், பகவானுமான கிருஷ்ணருடன் ஊர் ஊராகச் சென்று, சில நாட்கள் தங்கி அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து வந்தான்.

    அப்படி கண்ணனும், அர்ச்சுனனும் ஒரு ஊருக்குச் சென்றபோது, முதியவர் ஒருவர் அவர்களின் தேருக்கு முன்பாக வந்து நின்றார். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடியது. அந்த வறுமையைப் போக்குவதற்கு ஏதாவது உதவி கேட்டுதான், தேரின் முன்பாக வந்து நின்றார் அந்த முதியவர்.

    அர்ச்சுனன் தன் பக்கத்தில் இருந்த பொற்காசுகளின் மூட்டைக்குள் கையை விட்டு, அதில் வந்த பொற்காசுகள் அனைத்தையும் முதியவருக்குக் கொடுத்தான். இப்படி மூன்று முறை அர்ச்சுனன் வழங்கிய பொற்காசுகளை பெற்றுக்கொண்டவர், ‘இது பல ஆண்டுகளுக்கு என்னுடைய குடும்பத் தேவையை பூர்த்தி செய்யும்’ என்றபடி அங்கிருந்து அகன்றார்.

    ஆனால் அவர் செல்லும் வழியில் வந்த திருடன் ஒருவன், அவரிடம் இருந்து பொற்காசு மூட்டையை பறித்துச் சென்று விட்டான். மறுநாள் மீண்டும் அர்ச்சுனன் முன்பாக வந்து நின்றார் முதியவர். தான் திருடன் ஒருவனிடம் பொற்காசுகளை பறிகொடுத்ததைப் பற்றிச் சொன்னார்.

    இதையடுத்து அர்ச்சுனன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ரத்தினக்கல் ஒன்றை முதியவரிடம் கொடுத்தான். அதைப் பெற்றுச் சென்றவர், தன் மனைவி, பிள்ளைகளுக்குக் கூட தெரியாதபடி, அந்த ரத்தினக்கல்லை, பரண் மீது இருந்து பானையில் ஒளித்து வைத்தார்.

    இதை அறியாத முதியவர் மனைவி, பானையை எடுத்துச் சென்று ஆற்றில் தண்ணீர் எடுத்தார். அப்போது உள்ளே இருந்த ரத்தினக் கல், ஆற்றில் விழுந்து விட்டது. மனைவி பானையில் தண்ணீர் பிடித்து விட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், “பானைக்குள் இருந்த கல் எங்கே?” என்று கேட்க, அவரது மனைவியோ ஒன்றும் புரியாமல் விழித்தார்.

    மனைவியிடம் உண்மையைக் கூறியவர், ஆற்றிற்குச் சென்று தேடியபோதும், அந்த ரத்தினக்கல் கிடைக்கவில்லை.

    சில நாட்கள் கழித்து, மீண்டும் அர்ச்சுனனை சந்திக்க வந்த முதியவர், நடந்த விவரங்களைக் கூறினார்.

    அப்போது அருகில் இருந்த கண்ணன், “அர்ச்சுனா.. இவரது விதி வலியதாக இருக்கிறது. இந்த முறை வெறும் இரண்டு பொற்காசுகளை மட்டும் இவருக்குக் கொடு” என்றார். அப்படியேச் செய்த அர்ச்சுனன், முதியவர் அங்கிருந்து அகன்றதும், “இரண்டு பொற்காசுகள் அந்த நபரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் கண்ணா?” என்று கேட்டான்.

    “அதை நேரடியாக பார்க்கலாம்.. வா..” என்று அர்ச்சுனை அழைத்துக் கொண்டு, முதியவரை பின் தொடர்ந்தார் கண்ணன்.

    அர்ச்சுனனிடம் பொற்காசுகளைப் பெற்றவர், ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றார். அப்போது ஒரு மீனவன், தன்னுடைய படகில் இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் இரண்டு மீன்களை உயிருடன் வைத்திருந்தான். அதனை வாங்கிக்கொள்ளும்படி, முதியவரிடம் மீனவன் கேட்டான்.

    ‘இந்த மீன்களால் என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் ஒருநாள் பசியைக் கூட போக்க முடியாது. என்றாலும் அந்த மீன்களை மீண்டும் ஆற்றில் விட்டால் புண்ணியமாவது கிடைக்கும்’ என்று நினைத்தவர், தன்னிடம் இருந்த இரண்டு பொற்காசுகளையும் கொடுத்து அந்த இரண்டு மீன்களையும் வாங்கினார்.

    அதில் ஒன்றை தண்ணீரில் விட்டார். மற்றொன்றையும் தண்ணீரில் விட முயன்றபோது, அதன் வாய் பகுதியில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டார். மீனின் வாயை கொஞ்சம் பிளந்து, இரண்டு விரல்களை விட்டவரின் விரல் இடுக்கில் ஒரு கல் தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து வெளிப்பட்டது.

    ஏனெனில் இதற்கு முன்பு அர்ச்சுனன் கொடுத்திருந்த ரத்தினக்கல் அது. ஆற்றில் விழுந்த கல்லை, அந்த மீன் விழுங்கியிருந்தது. மகிழ்ச்சியில், ‘சிக்கியாச்சு.. சிக்கியாச்சு..’ என்று கூச்சலிட்டார்.

    அப்போது ஏற்கனவே முதியவரிடம் இருந்து கொள்ளையடித்திருந்த திருடன், தன்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்து பதற்றத்துடன் ஓட நினைத்தான். அவனை மடக்கிப்பிடித்த அர்ச்சுனனும், கண்ணனும், அவன் மறைத்து வைத்திருந்த பொற்காசுகளை பறிமுதல் செய்து, முதியவரிடம் கொடுத்தனர்.

    அதையும் பெற்றுக்கொண்ட அந்த முதியவர், மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றார். அதைக் கண்ட அர்ச்சுனன், “வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியமாகின்றன” என்று கண்ணனிடம் கேட்டான்.

    அதற்கு கண்ணன், “முன்பு நீ கொடுத்த பொற்காசுகளை தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று முதியவர் நினைத்தார். அதைபோல் மறுமுறை நீ கொடுத்த ரத்தினக் கல்லை, தானும் உபயோகிக்காமல், மற்றவர்களுக்கும் தெரியாமல் ஒளித்துவைத்தார். அவரது இந்த சுயநலம் காரணமாக, அந்தப் பொருட்கள் எதுவும் அவரிடம் தங்கவில்லை. ஆனால் இந்த முறை பொதுநலத்துடன் இரண்டு மீன்களை காப்பாற்ற நினைத்தார். அந்த புண்ணியத்தின் பலன், அவருக்கு இழந்த செல்வத்தையும் மீட்டுக் கொடுத்துள்ளது” என்று விளக்கினார்.
    ×