என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கடன், தொழில், சொத்து பிரச்சனை, வேலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கீழே பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கடன் தீர

    வாழ்நாள் முழுவதும் மீள முடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.

    தொழில் சிறக்க..

    நிரந்தர வேலை இல்லாதவர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள், தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.

    சொத்து சுகம்

    சொத்து அமையாதவர்கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாதவர்கள், வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாக இருப்பது, மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் செவ்வாயகிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.

    வேலை வாய்ப்பு

    நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சனையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் தீராத நோய், கடன், பகை உள்ளவர்கள் சனிக்கிழமை நவதானிய அடை தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.
    எல்லா கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
    * மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

    * பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

    * தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    * திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப் படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.

    * தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில், கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்டம் மேலைத்திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் ‘வீணா தட்சிணாமூர்த்தி’யாக அருள்பாலிக்கிறார்.

    * எல்லா கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
    500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் நாட்டரசன்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.

    ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.

    பிரமோற்சவம், கொடியேற்றம் உள்ளிட்ட காப்பு கட்டும் நிகழ்வுகள், சிவாச்சாரியார்கள், வைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.

    பாரசைவர்களாகிய உவச்சர் குலத்தினரால், இந்த ஆலயத்தில் பூஜை செய்யப்படுகிறது.

    பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ‘களியாட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. இது கும்பகோணம் மகாமக திருவிழா போன்று நடத்தப்படும்.

    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    தல வரலாறு

    வனமாக இருந்த இடத்தில் கண்ணுடைய நாயகி அம்மன், ஒரு மரத்தின் அடியில் சுயம்புவாக புதையுண்டு இருந்தார். பால் வியாபாரிகள், இந்தப் பகுதியில் வரும்போது, பால் குடம் கவிழ்ந்துபோவது வாடிக்கையாகிப்போனதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.

    இப்பகுதியை ஆண்ட மன்னனின் கனவில், தான் இருப்பதை அம்மன் உணர்த்தியதை அடுத்து, அந்த பகுதியை தோண்டி, அம்மனை வெளிக்கொண்டு வந்தனர்.

    புதையுண்ட அம்மன் சிலையை மீட்கும் பணியின்போது, ஒருவரது கண்ணில் கடப்பாரை நுனி பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் அவர் அம்மனை வெளிக்கொண்டு வரும் பணியை தொடர்ந்தார். முழுமையாக அம்மன் சிலை வெளிவந்ததும், அவரது கண்ணில் பட்ட காயமும் முழுமையாக நீங்கியது. இதனாலேயே ‘கண்ணத்தாள்’ என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.

    திருவிழாக்கள்

    * சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். 22 நாட்கள் திருவிழா இது.

    * வைகாசி பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.

    * ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா, 10 நாட்கள் நடத்தப்படும்.

    * புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.

    * ஐப்பசியில் 10 நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் விசேஷமானது.

    * தை மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் தைலக்காப்பு உற்சவமும் பிரசித்திப்பெற்றது.
    அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது.
    திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வழிபாட்டிற்காக 27 அடி உயரமுள்ள 1800 எடை கொண்ட ஒருவேல் யாத்திரையாக எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து தமிழ் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார், பிரதமரின் மக்கள் நலத்திட்ட பிரசார இயக்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்துதமிழ் கட்சி தலைவர் ராம். ரவிக்குமார் கூறும்போது, தமிழ்நாட்டில் வழிபாட்டின் மூலமாக மக்களிடம் ஆன்மிக எழுச்சியை உருவாக்க வேண்டும். பக்தி உடையவர்களை இந்து சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் வேல் வழிபாட்டு மன்றங்கள் உருவாக்க வேண்டும். அதர்ம சக்தி அழிந்து தர்ம சக்தி மேலோங்க வேண்டும்.

    இதற்காக அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது. தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து பூஜை செய்யப்பட்டது. நாளை (இன்று) பழனி முருகன் கோவிலில்பூஜை செய்யப்படுகிறது. மேலும் மற்ற முருகபெருமானின் படை வீடுகளுக்கும் வேல் வழிபாடு யாத்திரை செல்ல உள்ளோம் தெரிவித்தார்.
    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது. இரவு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.
    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி நடந்து வந்தது. அதற்காக, கோவில் முக மண்டபத்தில் வராஹசாமி மாதிரி கோவில் அமைக்கப்பட்டு, அதன் கருவறையில் வராஹசாமி, லட்சுமி தாயாரின் சிலைகளை அத்திமரத்தால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு தினமும் வராஹசாமிக்கும், லட்சுமி தாயாருக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஏழுமலையான் கோவிலில் இருந்து விஷ்வக்சேனர் வசந்த மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். வராஹசாமி கோவிலில் இரவு 9.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை வராஹசாமி கோவில் சன்னதியில் யாக சாலையில் காரியக்கர்மங்கள் நடக்கிறது. இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பிரபந்த பாராயணம், வேத பாராயணம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மீண்டும் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வைதீக காரியக்கர்மங்கள் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வராஹசாமி கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    28-ந்தேதி வராஹசாமி கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை வைதீக காரியக்கர்மங்கள், மாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மகாசாந்தி பூர்ணாஹுதி, மகாசாந்தி திருமஞ்சனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை யாக சாலையில் சயனாதி வாசம் ஆகியவை நடக்கிறது.

    29-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை, காலை 9.15 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை தனுர் லக்னத்தில் கோவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் தந்தருள்வாள்.
    ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.

    தியான சுலோகம்:-

    சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
             வராபய கராந் விதாம்
    அப்ஜத்வய கராம்போஜாம்
             அம்புஜாசநஸமஸ்த்திதாம்
    ஸஸிவர்ண கடேபாப் யாம்
             ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
    சர்வாபரண சோபாட்யாம்
             சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
    சாமரக்ரஹ நாரீபி :
             ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
    ஆபாதலம்பி வசநாம்
             கரண்ட மகுடாம் பஜே.

    பலன்கள்:-

    மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை வழக்கமாக மாத பூஜை நாட்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது சீசனையொட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருப்பலி நடத்தினார். வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.

    மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாதிரியார்கள் மை.பா.சேசுராஜ், அன்டோ, உடையார்பட்டி மைக்கேல், ஆயரின் செயலாளர் மைக்கேல் பிரகாசம், மும்பை டேவிட், மதுரை சேவியர் தயாளன், பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஸ் செல்வ தயாளன், அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம், 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் நடைபெறுகிறது.
    கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் கிலேரியஸ் மந்திரித்து, குருசு (சிலுவை) கொடியை வடக்கூர் தலைவர் சகாய திலகராஜிடமும், புனித சவேரியார் கொடியை தெக்கூர் தலைவர் சவரிமுத்துவிடமும் வழங்கப்பட்டது. கொடியேற்றுத்துக்கான மலர்களை தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் செயலாளர்கள் அந்தோணி சவரிமுத்து, கின்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் பேராலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் திருவிழாவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் திருவிழா நடக்கிறது. 5-வது நாள் திருவிழாவான 28-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத் திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. . ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பக்த சபைகள், சங்கங்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    தேர்ப்பவனியின்போது புனித சவேரியார், மாதா தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
    கேரளாவில் பரவலாக பெய்து வரும் கனமழையால் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
    நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை, மலைப்பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு வரும் முன் பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வந்து உள்ளனர்.

    அதேபோல் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு இருந்த போதிலும், குறைவான பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கிறார்கள். அதிகபட்சமாக ஒரேநாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர்.

    பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் வருமானமும் கடந்த சீசனை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைவு குறித்து விவாதிக்க திருவனந்தபுரத்தில் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது சன்னிதானத்தில் தங்க அனுமதி அளிப்பது குறித்து விவாதித்தனர். இது குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பம்பை ஆற்றில் நீராட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசிடம் கோரிக்கை வைக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும்.
    சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையிலிருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.
    அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு ஐயப்பனே!

    ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.
    மாலை போட்டி பிறகு எல்லா ஐயப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

    ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது.

    ஐயப்பனுக்கு விரதம் முக்கியம் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப்போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

    ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் ஐயப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

    இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன்.

    பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக்கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.

    108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
    பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக, திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..

    ‘பெரிய’ பெருமை

    * பெரிய கோவில்
    * பெரிய பெருமாள்
    * பெரிய பிராட்டியார்
    * பெரிய கருடன்
    * பெரிய வசரம்

    (நைவேத்தியம்)

    * பெரிய திருமதில்
    * பெரிய கோபுரம்

    நாச்சியார்கள்

    * ஸ்ரீதேவி
    * பூதேவி
    * துலுக்க நாச்சியார்
    * சேரகுலவல்லி நாச்சியார்
    * கமலவல்லி நாச்சியார்
    * கோதை நாச்சியார்
    * ரெங்கநாச்சியார்

    பிரகாரங்கள்

    * பூலோகம் - மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று
    * புவர்லோகம் - திரிவிக்ரம சோழன் திருச்சுற்று
    * சுவர்லோகம் - கிளிச்சோழன் திருச்சுற்று
    * மஹர்லோகம் - திருமங்கை மன்னன் திருச்சுற்று
    * ஜநோலோகம் - குலசேகரன் திருச்சுற்று
    * தபோலோகம் - ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று
    * சத்யலோகம் - தர்மவர்ம சோழன் திருச்சுற்று

    ஆழ்வார்கள் சன்னிதி

    திருமாலைப் பற்றி பாடல்களைப் பாடி அருளியுள்ள பன்னிரண்டு ஆழ்வார்களும், திருவரங்கம் ஆலயத்தில் 7 சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

    * பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
    * நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
    * குலசேகர ஆழ்வார் * திருப்பாணாழ்வார்
    * தொண்டரடிப்பொடி ஆழ்வார் * திருமழிசை ஆழ்வார்
    * பெரியாழ்வார், ஆண்டாள்

    தங்க குதிரை வாகனம்

    திருவரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆண்டுக்கு 7 முறை மட்டுமே, தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்..

    * விருப்பன் திருநாள்
    * வசந்த உற்சவம்
    * விஜயதசமி
    * வேடுபறி
    * பூபதி திருநாள்
    * பாரிவேட்டை
    * ஆதி பிரம்மோற்சவம்

    தாயார் உற்சவம்

    * கோடை உற்சவம்
    * வசந்த உற்சவம்
    * ஜேஷ்டாபிஷேகம்
    * நவராத்திரி
    * ஊஞ்சல் உற்சவம்
    * அத்யயன உற்சவம்
    * பங்குனி உத்திரம்

    தென்திசை கோபுரங்கள்

    * நாழிகாட்டான் கோபுரம்
    * ஆர்யபடால் கோபுரம்
    * கார்த்திகை கோபுரம்
    * ரங்கா ரங்கா கோபுரம்
    * தெற்கு கட்டை கோபுரம்
    * தெற்கு கட்டை கோபுரம்-2
    * தெற்கு ராஜகோபுரம்
    ×