என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப்படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.
    தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

    பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும்.

    இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப்படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.
    பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
    தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக முருகப்பெருமானின் அருகில் மயில் வாகனம் காணப்படும்.

    ஆனால் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியில் யானை இருப்பது அரிய காட்சியாக இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. இங்கே விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், சிவன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன.

    பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் கார்த்திகை விரதம், பங்குனி உத்திர விழா, முத்து பல்லக்கு, சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
    தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது.

    இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

    இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
    பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
    தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர்.

    முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமியையொட்டி நாளை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 6.30. மணிக்கு அலங்கார தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூடாரங்கள் அமைத்தும் பக்தர்கள் தங்கலாம் என கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

    அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும். தற்போது பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் ஜனீஷ்குமார், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
    ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

    தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

    ஓம் பூதாதி பாய வித்மஹே
    மஹா தேவாய தீமஹி
    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

    எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
    குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
    குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் கார்த்திகை மாத ஏடு வாசிப்பு கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு வென்குதிரை வாகனத்தில் அய்யா பவனி வருகிறார். நாளை (27-ந்தேதி) மதியம் 3 மணிக்கு திருஏடு வாசிப்பும், மாலை 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதலும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 28-ந் தேதி காலை சுவாமி தோப்பில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

    அதன்பின் மதியம் 12 மணிக்கு உச்சி பணிவிடையும், அன்னதர்மமும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு ஏடுவாசிப்பு தொடங்கி, 7 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், 9 மணிக்கு தாலாட்டும், அதன்பின் அருளிசை வழிபாடும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள்பெற அரசம்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
    தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும்
    திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசக்கட்டை மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்றார். மேலும் தொடர்ந்தவர், ஒரு உவமையை (தலைவரும் பணியாளரும் உவமை) கூறி, சீடர்களுக்கு பாடம் புகட்டினார்.

    ‘‘உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீர் உடனே வந்து உணவருந்த அமரும்” என்று உங்களில் எவராவது சொல்வாரா..? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரா? மாறாக, “எனக்கு உணவு ஏற்பாடு செய்யும், உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும், அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்” என்று சொல்வாரல்லவா?

    அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்.”

    சீடர்கள் இயேசுவிடம் தங்களின் நம்பிக்கையை மிகுதியாக்கும்படி கேட்டார்கள். இயேசு கடுகளவு நம்பிக்கை இருந்தால்கூட மரத்தையும், மலையையும் பெயர்க்கமுடியும் என்று அறிவித்தார். எனவே, தம் சீடர்களுக்குத் தேவையானது பணிவும் தாழ்மையுமே என்பதை இந்த உவமையின் வாயிலாக அறிவித்தார்.

    நற்செய்தியின் பணியில் தலைவராகிய இயேசுவும் பணியாளராகவே இருந்தார். திருவிருந்து அளிக்கும்போது இயேசு, “யார் பெரியவர்?, பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

    தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும். நம்பிக்கையுள்ளோரை வழிநடத்தும் மேற்பார்வையாளராக பணிபுரியவேண்டும். அளிக்கப்பட்டப் பணிகளை ஓய்வின்றிச் செய்து முடிக்கவேண்டும். நன்றியையோ, ஓய்வையோ, எதிர்பார்க்காமல் தங்கள் பணியைத் தொடரவேண்டும் என்று இயேசு தம் சீடருக்கு அறிவுரை கூறினார்.

    இவ்வாறே திருத்தூதர் பவுலும், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்று அவரின் கடமையை அறிவித்தார்.
    திருப்பதியில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
    மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.

    எனவே தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர் தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.

    அன்னபூரணி தேவி வழிபாட்டிற்குரிய தினங்கள்

    மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.
    சபரிமலை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் பிரதான ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது. ‘கடவுள் பூமி’ என்று அழைக்கப்படும், கேரளாவின் மேற்கு மலைத் தொடரில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, இந்த சபரிமலை ஐயப்பன் திருக்கோவில். மலையின் உச்சியில் 7 மலைகளுக்கு அப்பால் ஐயப்பன் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘சபரி பீடம்’ என்று பெயர். இந்த சபரி என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தால், இது ராமாயண காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

    திரேதாயுகத்தில் திருமால், ராமராக அவதரித்திருந்தார். அவர், தசரதரிடம் கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி ஆனது. திருமால் ராமாவதாரம் எடுப்பதற்கு முன்பிருந்தே, ராமபிரானை வழிபடும் நோக்கத்தில் சபரி என்ற பெண், வனத்தில் வசித்து வந்தாள். அவளுக்கு ராமபிரானின் மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் இருந்தது. அவர் என்றாவது ஒருநாள், தன்னை சந்திக்க வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த சபரி, ராமருக்காக தினமும் வனத்திற்குள் சென்று கனிகளை எடுத்து வருவார். அவை ருசியாக இருக்கிறதா என்பதை, அந்த கனிகளை கடித்துப் பார்ப்பார். அதில் இனிப்பு சுவை உள்ள பழங்களை மட்டுமே ராமபிரானுக்காக சேகரித்து வைப்பார்.

    ஆனால் சபரிக்கு ராமரைக் காணும் சந்தர்ப்பம் பல ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. ராவணன், சீதையைக் கடத்திச் சென்று விட்டதை அடுத்து, சீதையை தேடி காடுகளில் அலைந்தபோது, சபரி என்ற முதிய பெண், ராமருக்காக காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியை சந்திக்கச் சென்றார், ராமபிரான். அவரைக் கண்டதும் ஆவலில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

    ஸ்ரீராமனுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த இலந்த பழங்களை அவருக்கு கொடுத்தார். அது சபரி அன்னை கடித்து எச்சில் படுத்திய பழங்களாக இருந்தாலும் கூட, அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்த ராமர், இலந்த பழங்களை ருசித்து சாப்பிட்டார். பின்னர், சபரி அன்னைக்கு மோட்சம் அளித்ததோடு, அந்த அன்னை வாழ்ந்து வந்த மலைக்கும் மோட்சம் அளித்தார். அன்றிலிருந்து அந்த மலையும் ‘சபரிமலை’ என்றே அழைக்கப்பட்டது.

    பின்னர் ஐயப்பனின் அவதாரம் நடைபெற்ற தருணத்தில், தான் அமைதியாக தியானம் செய்ய ஐயப்பன் இந்த மலையை தேர்வு செய்தார். அதில் சபரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ன எண்ணமும் இருந்தது. தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை.

    உடனடியாக பரசுராமரை அழைத்து தனக்கு அம்பு விழுந்த இடத்தில் கோவில் எழுப்புமாறு கூறிவிட்டு தேவலோகம் சென்று விட்டார். ஐயப்பனின் கட்டளையை ஏற்று பரசுராமர் கோவில் எழுப்பிய இடமே சபரிமலை என்றும், சபரி பீடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.
    ×