என் மலர்
நீங்கள் தேடியது "slug 95248"
- திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோவில்.
- கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு! என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
இந்த கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் மை பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
- திண்டுக்கல்ல் மேலக் கோட்டையில் ‘தலை வெட்டி பிள்ளையார்’ அருள்பாலித்து வருகிறார்.
- திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது.
திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் 'பெருநாட்டு பிள்ளையார்.' இந்தக் கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும். இந்தக் கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக் கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.
திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும், இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். அரளி, சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சன்னிதிக்கு வந்து, குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது. எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்து நன்மை அடைந்தவர்கள் ஏராளம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் பெறலாம். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று 'உச்சிஷ்ட கணபதி'. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் 'உச்சிஷ்ட கணபதி' வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச் சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் அமைந்தபோது, இவ்விநாயகர் கோவிலும் இருந்தது என்பதால், இவரை 'ஆதி விநாயகர்' என்கிறார்கள். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதகமும் வைத்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் சக்திபெற்றவர் இவர்.
- கர்நாடக மாநிலம் பெனர்கட்டா என்ற ஊரில் உள்ளது இந்த கோவில்.
- இந்த கோவிலில் செய்யும் பரிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது பெனர்கட்டா என்ற ஊர். இவ்வூர் பஸ்நிலையத்தின் அருகில் ஒரு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதனை 'குன்றிமணி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
இந்த கோவிலில் அம்மன் சன்னிதிக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான அம்மன் சிலை உள்ளது. இதனை குன்றி மணி நிரம்பிய ஒரு தாம்பாளத்தில் வைத்துள்ளனர்.
அங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரச்சினைகளை அம்மனிடம் சொல்லி, குன்றி மணிகளை இரு கை நிறைய அள்ளி எடுத்து, அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட்டு வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
- இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் அமைந்துள்ளது ஓம்காரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.
இக்கோவிலின் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் உள்ளன. அதைச்சுற்றி ரிஷபங்களும் இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெய்விளக்கு ஏற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது. கொடுங்கோலனான அவன் தன் அரசியல் ஆசை மற்றும் வளர்ச்சிக்காக நேர்மை மிக்க ஒரு அந்தணரை கொன்றான். அந்தணரை கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. கனவிலும், நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர்.
சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி சிவனுக்கு கோவில் கட்டினான். அங்கு காசியில் இருந்து லிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தான். அதுவே ஓம்காரேஸ்வரர் கோவில் ஆயிற்று.
இக்கோவில் தினமும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்திருக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்த சிவனை பூஜித்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.
- அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
- ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.
- செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
- எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது. இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும். ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை. சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு. இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் உள்ளத்தில் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.
ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் தெளிக்கிறார்கள். பின்னர் அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர். சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக அருகிலேயே செற்கற்களும் கிடைக்கிறது.
பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம். உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை. கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம். அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.
இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும். நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- 30 வயதைக் கடந்தும் ஆண்கள், பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது.
- திருமண தடை நீங்க இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.
ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
- நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
- தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.
இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.
- ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம்.
- கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போலார் பகுதியில் அடைந்துள்ளது போலார் மங்களாம்பிகை கோவில். கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.
கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள். கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது. துலாபாரமும் எடுக்கிறார்கள்.
மங்களாதேவி அம்மனின் சிரசு வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் செவ்வந்தி மாலை சாத்தி வழிபடுவதால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது.
சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் சகல ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்று சொல்லப்படுகிறது.
கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் நாகராஜ சன்னதியில் வீற்றிருக்கும் பாம்பு சிலைக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
ஜாதக ரீதியாக ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம். இங்கு தரப்படும் விபூதியை தரிசித்தால் பாலபீடை என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
- தஞ்சை வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபாலசாமி கோவில்.
- இந்த கோவில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.
மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.
சித்திரை நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் அன்று மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
- ராமரின் பிரம்மஹஸ்தி தோஷத்தை நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது.
- இத்தலத்தில் உள்ள சரஸ்வதி, வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் சோழநாட்டு காவிரி, தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் அமைந்துள்ளன. அதனால் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
ராமபிரான், இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் ராமர், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புடையது.
சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் கடலூர், சிதம்பரம், வழியாக நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடையலாம். திருச்சி, தஞ்சை பகுதி பக்தர்கள் மன்னார்குடிக்கு வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.
- தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
- இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அம்மன், புற்று ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அம்மனுக்கு நாள் தோறும் பூஜையும் வழிபாடுகளும் நடந்து வருவதால் இந்த புற்றும் நாள்தோறும் வளர்ந்து வந்தது. இதனால் அம்மனின் புற்று சிறிய மலைபோல பிரமிக்க வைக்கும் வகையில் பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறது. இது தேவியின் தெய்வீக ரூபத்தை மேலும் அதிகரித்து காட்சி தருவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.
அம்மனை தரிசிக்க வருவோருக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் வேண்டிய வரத்தை அருளுவார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாய் போல கருனை மழை பொழிவார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால் தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
அம்மனை தரிசிக்க பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், ஏன் வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனின் ஆசியை பெற்றுச் செல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. புற்று வடிவில் அம்மன் உள்ளதால் அதன் முன்பு வெள்ளியால் செய்யப்பட்ட பிரபையில் அம்மனின் உருவமும் அதன் முன்பு பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட பகவதி அம்மனின் உருவ சிலையும் இடம் பெற்று உள்ளது.
இந்த பஞ்சலோக அம்மன் சிலை உற்சவர் சிலை ஆகும். இதனால் வெள்ளி பல்லக்கில் இந்த அம்மன் சிலையை வைத்து பவனியாக கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் திருவிழா காலத்தில் 3-ம் திருவிழாவில் இருந்து தினசரியும் இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி நடக்கிறது.
இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. சில பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு காசுகளை கடலில் வீசி வழிபடுகிறார்கள். சில பக்தர்கள் நேர்ச்சை பொருட்களையும் கடலில் போட்டு வேண்டுதல் நடத்துகிறார்கள். இதனால் கடற்கரையில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.






