search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கண்நோய், தோல் வியாதிகளை குணமாக்கும் மங்களூரு மங்காளம்பிகை கோவில்
    X

    கண்நோய், தோல் வியாதிகளை குணமாக்கும் மங்களூரு மங்காளம்பிகை கோவில்

    • ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம்.
    • கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போலார் பகுதியில் அடைந்துள்ளது போலார் மங்களாம்பிகை கோவில். கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.

    கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள். கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது. துலாபாரமும் எடுக்கிறார்கள்.

    மங்களாதேவி அம்மனின் சிரசு வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் செவ்வந்தி மாலை சாத்தி வழிபடுவதால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது.

    சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் சகல ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் நாகராஜ சன்னதியில் வீற்றிருக்கும் பாம்பு சிலைக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    ஜாதக ரீதியாக ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம். இங்கு தரப்படும் விபூதியை தரிசித்தால் பாலபீடை என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    Next Story
    ×