என் மலர்
சினிமா செய்திகள்
- ஆர்யா நடிப்பில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
- இப்படத்தின் புதிய புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
இந்நிலையில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் புதிய புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
#KatharbashaEndraMuthuramalingam an all class entertainer and people's first choice this weekend.
— Drumsticks Productions (@DrumsticksProd) June 4, 2023
Running successfully now in cinemas. @arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @gvprakash @DrumsticksProd @ZeeStudios_ @jungleemusicSTH pic.twitter.com/T5LxDhGiEu
- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அதன்பின்னர் உப்பென்னா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து சியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்ததன் மூலம் பலரின் கவனம் பெற்றார்.

கீர்த்தி ஷெட்டி
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொம்மை'.
- இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம்.
- இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்திருந்த படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருந்தது. மேலும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

சூர்யா - ரோலக்ஸ்
இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ரோலக்ஸின் காணப்படாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, 'எஸ்.டி.ஆர். 48' பட லுக்கில் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- பிரபல நடிகர் நிதின் கோபி பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் புல்லாங்குழல் வாசிப்பாளராக பிரபலமைடைந்த கோபியின் மகன்.
பிரபல நடிகரான நிதின் கோபி, விஷ்ணுவர்தன் நடித்த 'ஹலோ டாடி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா என 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நிதின் கோபி படங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலான சின்னத்திரை தொடர்களில் நடித்து இயக்கியும் உள்ளார்.
இவர் பெங்களூர், இட்டமடுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, நிதின் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 39 வயதான நிதினின் உயிரிழப்பு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நிதின் புல்லாங்குழல் வாசிப்பாளராக பிரபலமைடைந்த கோபியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
- இதில், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.
It's difficult to describe in words how heart-wrenching the train tragedy of Odisha is. My deepest condolences to the families of the deceased and praying for the speedy recovery of those injured. Gratitude to the people who have come out in large numbers to help with rescue…
— Yash (@TheNameIsYash) June 3, 2023
- நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ்
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், மதுரையில் நடிகர் தனுஷ் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர்.
- இவர் தற்போது பேரனை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர். இவர் தன்னுடைய மகன் சிலம்பரசனை குழந்தை பருவத்திலிருந்தே திரை உலகிற்கு தயார் செய்து வந்தது போலவே தன்னுடைய மகள் இலக்கியாவின் மகனையும் சினிமாவிற்காக தயார் செய்து வருகிறார். இசை, நடனம் என்று கற்றுக் கொடுத்து வந்தநிலையில் தற்போது பேரனை வைத்து குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சிலம்பரசனுக்கு எங்க வீட்டு வேலன் என்ற படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ அதைப் போலவே பேரனுக்கும் தகுந்த ஒரு கதையை எழுதி படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இதற்காக பிரமாண்டமான அரங்கம் ஒன்றை டி.ராஜேந்தர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இந்த திரைப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இணையத்தில் கீர்த்தி சனோன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது பல நிகழ்ச்சிகளில் அவர் யதார்த்தமாக கலந்து கொண்டது. அதற்கு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கீர்த்தியை விட படக்குழு இன்னும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு முன் வந்த எதிர்ப்புகளை சமாளித்து ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
- மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இவர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் மோகன் ஜி
இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கங்கை கொண்ட சோழபுரம் ?❤️ pic.twitter.com/cgoxJSqqJ0
— Mohan G Kshatriyan (@mohandreamer) June 3, 2023
- ஒடிசா மாநிலம் ரெயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், "ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2023
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச்…






