லண்டனில் 'எஸ்டிஆர்48' பட லுக்கில் வலம் வரும் சிம்பு

நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சிம்பு
சிம்பு
Published on

பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

சிம்பு
சிம்பு

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு, 'எஸ்.டி.ஆர். 48' பட லுக்கில் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com