என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினி தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி ரோடியர் மில்லில் நடிகர் ரஜினி நடிக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பின் 2-ம் நாளான நேற்று ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள் போலீசாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


    லால் சலாம்

    லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. 2-ம் நாளாக நேற்று ரோடியர் மில் பழைய வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் ரோடியர்மில் வாயிலில் திரண்டனர். ரஜினியை பார்க்க அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீசாரிடம் கேட்டனர்.


    ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினி

    ஆனால் போலீசார் ரசிகர்களை அனுமதிக்க மறுத்தனர். ஏராளமான ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி வேகமாக புறப்பட்டு சென்றார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். 3-வது நாளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கினார்.


    இதையடுத்து இப்படத்தில் விடுப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை (ஜூன் 4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார். இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். 


    • ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே

    இடிபாடுகளுக்குள் சிக்கி

    இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

    பாதிக்கப்பட்ட

    ஒவ்வொரு குடும்பத்திற்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    மீட்புப் பணியாளர்க்குத்

    தலைதாழ்ந்த வணக்கம்

    இருந்த இடத்தில்

    எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

    கண்ணீர்

    கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா".
    • இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    ரெஜினா போஸ்டர்

    தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து "ரெஜினா" படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொள்ளவுள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • விக்ரம் பிரபு தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.
    • இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில் விக்ரம் பிரபு, பார்த்திபேந்திரன் பல்லவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    பாயும் ஒளி நீ எனக்கு போஸ்டர்

    தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.



    இந்நிலையில், இப்படத்தில், இடம்பெற்றுள்ள 'நெஞ்சமே நெஞ்சமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சிட்டுக்குருவிகளை நோக்கி அச்சிறுவன் வீசியெறிந்த கல்லில் வந்தமர்ந்தது மணிப்புறா' என்று தொடங்கும் இந்த பாடலின் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.




    • இயக்குனர் ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’.
    • இந்த படத்தில் கதாநாயகன் ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார்.

    இயக்குனர் ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'. இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

    கதாநாயகன் ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள இந்த படத்தில் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி போஸ்டர்

    இந்நிலையில்,இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகச திரைப்படமான 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி' திரைப்படம் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியிடப்படுகிறது.

    அதாவது, இப்படம் ஜூன் 29 -ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா -2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து , இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, அதில் நடித்த துணை நடிகர்கள், பேருந்து ஒன்றில் ஹைதராபாத் திரும்பினர். விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நார்க்கட்பள்ளி என்ற இடத்துக்கு வந்தபோது, சாலையோரத்தில் நின்ற அரசு பேருந்து மீது நடிகர்கள் வந்த பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தில் இருந்த 2 நடிகர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், 'பொம்மை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு, விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    லால் சலாம்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    புதுவை-கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நேற்று காலை முதல் 'லால்சலாம்' படப்பிடிப்பு நடந்தது. மாலை 3 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் ரோடியர் மில்லுக்கு வந்தார். அங்கு அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் ரோடியர் மில்லுக்கு திரண்டு வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. ரோடியர் மில்லில் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் ரஜினியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.


    லால் சலாம்

    ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு காத்திருந்தனர். மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை மீண்டும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 2-வது நாளான இன்றும் காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் ரோடியர் மில்முன்பு திரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து ரஜினி நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு கோரிமேடு, லாஸ்பேட்டை மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் 10 நாள் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சியான் விக்ரம் தற்போது குணமடைந்து ஜாலியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    ×