என் மலர்
சினிமா செய்திகள்
- அஜித் தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியில் புனேவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞரான சுதிர் இன்று விபத்தில் மரணமடைந்தார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சுதிர், மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார். இவரும் இவரது நண்பர்களும் வடகரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்து இன்று அதிகாலை ஒரு காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் கைப்பமங்கலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த நடிகர் சுதிர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த மிமிக்கிரி கலைஞர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான நடிகர் சுதிர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான காந்தாரி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்பு கட்டபனையில் ரித்விக்ரோஷன், குட்ட நாடன் மார்பாப்பா, எஸ்கேப், ஸ்வர்கத்தில் காட்டெறும்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
- இவரின் 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.

பாவனா 86
இந்நிலையில் நடிகை பாவானாவின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மகாபாரத் தொடரில் ஷகுனி மாமா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் குஃபி பெயிண்டல்.
- வயது மூப்பு காரணமாக இவர் இன்று காலமானார்.
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகாபாரத் தொடரில் ஷகுனி மாமா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயிண்டல். தொலைக்காட்சி தொடர் இயக்குனர், நடிகர் என பண்முகத்தன்மை கொண்ட இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த குஃபி பெயிண்டல் இன்று காலமானார். 78 வயதாகும் இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்.
- இவர் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா மேனன் தீயா வேலைசெய்யனும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் படத்தின் நடித்திருந்த ஐஸ்வர்யா மேனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் தற்போது ஸ்பை என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன்
இந்நிலையில் ஐஸ்வர்யா மேனனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் ஆக்கிரமித்து வருகிறது. வெள்ளை நிற புடவையில் இடுப்பை காட்டும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- வீரன் திரைப்படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தில் வீரன் என்ற கதாப்பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருந்தார்.
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2ம் தேதி வெளியான படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்திருந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வீரன் - ஹிப்ஹாப் ஆதி
இந்நிலையில் வீரன் திரைப்படம் குழந்தைகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில் குழந்தைகள் பலரும் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர். அப்போது ஹிப்ஹாப் ஆதி குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீரன் கதாப்பாத்திர காஸ்டியூமில் வந்து ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
- நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன்.
- இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

பார்த்திபன்
இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன், சமூக வலைத்தளத்தில் சீமான் இளையராஜாவை பற்றி பேசும் பொழுது பார்த்திபனை குறிப்பிட்டு பேசியிருந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அம்மேடையில் நானில்லை, ஆனால் பெயர் பெற்றேன். காரணம் ஒரு மேதமையை என் பேதமையில் மிக எளிமையாக but அதை விட பொருத்தமாக யாரும் பாராட்டிவிட முடியாத வார்த்தைகளில் நான் செதுக்கியதை 'தமிழ் பேச்சின் சீமான்' பிரயோகிக்கும் போது புல்லரித்தது என்று பதிவிட்டுள்ளார்.
அம்மேடையில் நானில்லை, ஆனால் பெயர் பெற்றேன். காரணம் ஒரு மேதமையை என் பேதமையில் மிக எளிமையாக but அதை விட பொருத்தமாக யாரும் பாராட்டிவிட முடியாத வார்த்தைகளில் நான் செதுக்கியதை 'தமிழ் பேச்சின் சீமான்' பிரயோகிக்கும் போது புல்லரித்தது. pic.twitter.com/GacjI8Frv6
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 4, 2023
- கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்தி. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 படத்தில் நடித்திருந்த வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கார்த்தி
தற்போது கார்த்தி குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கதில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜப்பான் - கார்த்தி
இந்நிலையில் 'ஜப்பான்' படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பெரும் நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியான 'திருவாரூர் முருகன்' வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் கற்பனையான தழுவல் என்று கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி-யில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கங்கனா ரனாவத் தற்போது சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.

கங்கனா ரனாவத்
இந்நிலையில் கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டிருப்பது, Hi friends… Bye friends என்று ஜாலியாக பதிவிட்டு ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார். வித்யாசமாக இருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தார்த்
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

டக்கர்
இந்நிலையில் டக்கர் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சிவாஜி நடிப்பில் வெளியான 'பராசக்தி' படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.
- இப்படம் குறித்து கனிமொழி எம்.பி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் கடந்த 1952ம் ஆண்டு வெளியான படம் 'பராசக்தி'. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இப்படத்தில் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன்' என்று சிவாஜி பேசும் வசனம் இன்றளவும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பராசக்தி
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு 'பராசக்தி' படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பிரபுவுக்கு சால்வை அணிவித்து கனிமொழி கவுரவித்தார்.

கனிமொழி எம்.பி
இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற 'பராசக்தி' திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
- இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சலார்
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






