என் மலர்
நீங்கள் தேடியது "Sudhir"
ஜி.வி.பிரகாஷுடன் 2021-ம் ஆண்டு வெளியான 'பேச்சிலர்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான "GOAT"-ல் நடித்தபோது தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
GOAT படப்பிடிப்பின்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகரான சுடிகாலி சுதீர் தடையிடவில்லை என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நடிகை திவ்யபாரதி வலைத்தள பக்கத்தில் இயக்குநர் நரேஷ் பதிவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்," இயக்குனர் நரேஷ் தன்னை சிலகா என்று அழைக்கிறார். சிலகா என்றால் பறவை என்று பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது தனக்கு நகைச்சுவையாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திவ்யபாரதியின் இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அவர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், "நரேஷினது இந்த செயல் ஒரு ஒற்றை சம்பவம் அல்ல. இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதே பாணியில் தான் நடந்து கொண்டார்.

மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்தார். ஆனாலும், அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த சுடிகாலி சுதீர் அமைதியாக இருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது.
தமிழ் சினிமாவில் ஒரே குழு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் பலமுறை மோதல்கள் இல்லாமல் பணியாற்றியுள்ளேன். இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டார். அவர் அதை பகிரங்கப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது" என்றார்.
இந்நிலையில், திவ்யபாரதியின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் நரேஷ் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
- மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞரான சுதிர் இன்று விபத்தில் மரணமடைந்தார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சுதிர், மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார். இவரும் இவரது நண்பர்களும் வடகரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்து இன்று அதிகாலை ஒரு காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் கைப்பமங்கலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த நடிகர் சுதிர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த மிமிக்கிரி கலைஞர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான நடிகர் சுதிர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான காந்தாரி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்பு கட்டபனையில் ரித்விக்ரோஷன், குட்ட நாடன் மார்பாப்பா, எஸ்கேப், ஸ்வர்கத்தில் காட்டெறும்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.
- பாரா பளு தூக்குதலில் இந்தியாவின் சுதிர் தங்கப் பதக்கம் வென்றார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.
7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வ-து தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும்.
இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.






